Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


தயாரிப்பாளர் சங்க வழக்கு: தாணு புதிய விளக்கம்

Posted: 05 Mar 2014 06:47 AM PST

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர். மற்றும் நிர்வாகிகள் சிவா, ஞானவேல் ராஜா ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டி அணியான கலைப்புலி எஸ்.தாணு தரப்பினர் அறிவித்திருந்த பொதுக்குழுவை கூட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதாக கூறினர். மேலும், 7-ந் தேதிக்குள் பொதுக்குழுவை கூட்ட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், இவர்களுக்கு போட்டியாக விளங்கும் தாணு தலைமையிலான தயாரிப்பாளர்கள் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

உத்தமவில்லனுக்கு எதிராக வில்லத்தனம் செய்வதா?

Posted: 05 Mar 2014 03:27 AM PST

'விஸ்வரூபம்' படத்தின் 2-ம் பாகத்தை முடித்த கையோடு கமல், தன்னுடைய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் உத்தம வில்லன் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச்.3-ந் தேதி பெங்களூரில் தொடங்கியது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போஸ்டர் மற்றும் டீசர்களில் வெளியான கமலின் தோற்றம், பிரெஞ்சு புகைப்பட கலைஞர் ஒருவர் எடுத்த புகைப்படத்திலிருந்து திருடப்பட்டதாக இணையதளங்களில் பரவத் தொடங்கின. உண்மையில், இந்த தோற்றம் கேரளாவில் தெய்யம் என்ற ஆட்டத்தில் ஈடுபடும் கலைஞனுக்குண்டானது. கேரளாவின் வடக்கே மலபாரில், ஆலயங்களில் வேண்டுதல்கள் நிறைவேற்றியபின் தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஆடப்படும் ஒரு நடன வகைதான் தெய்யம்.

கலிபோர்னியா திரைப்பட நூலகத்தில் பிரபுதேவாவின் ஆர்.ராஜ்குமார்

Posted: 05 Mar 2014 02:48 AM PST

தமிழ்த் திரையுலகின் நடனப் புயல் பிரபுதேவா இந்தித் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வருகின்றார். கடந்த ஆண்டு ஈராஸ் இன்டர்நேஷனல் மற்றும் நெக்ஸ்ட் ஜென் பிலிம்சிஸ் நிறுவனம் தயாரித்த 'ஆர்.ராஜ்குமார்' என்ற படத்தை இவர் இயக்கியிருந்தார். இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் ஷாஹித் கபூர் மற்றும் சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் திரைக்கதையை பிரபுதேவா சொந்தமாக எழுதியிருந்தார். இந்நிலையில் இப்படத்தின் திரைக்கதையை கலிபோர்னியாவில் புகழ்பெற்ற மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் மற்றும் அறிவியல் அகாடமியின் நூலகம் தேர்வு செய்துள்ளது.

காதல் முறிவுக்கு பின் ஹன்சிகாவுடன் மீண்டும் நடிக்கும் சிம்பு

Posted: 05 Mar 2014 02:34 AM PST

ஹன்சிகாவுடனான காதலை முறித்து விட்டதாக சமீபத்தில் சிம்பு அறிவித்தார். இருவரும் வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டனர். பிறகு இருவருமே காதலை பகீரங்கமாக அறிவித்தார்கள். விரைவில் திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் காதல் முறிந்து விட்டதாக பரபரப்பு அறிவிப்பை சிம்பு வெளியிட்டார். இதை அறிவிக்கும் போது இருவரும் ஐதராபாத்தில் நடந்த வாலு படப்பிடிப்பில் இருந்தனர். அப்போதுதான் இருவரும் மனம் விட்டு பேசி பிரிய முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

தமிழில் வரும் சீக்ரட் ஆப் செக்ஸ்

Posted: 05 Mar 2014 02:17 AM PST

பாலியல் விழிப்புணர்வுக்காக 'சீக்ரட் ஆப் செக்ஸ்' என்ற பெயரில் இந்தி படம் தயாராகி உள்ளது. இந்த படம் வடஇந்தியாவில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. வசூலையும் குவித்தது. தற்போது இப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அடுத்தவாரம் தமிழகம் முழுவதும் ரிலீசாகிறது. பள்ளி செல்லும் பிராச்சியும், ரித்வியும் காதல் வயப்படுகின்றனர். உடல்ரீதியாகவும் இணைகிறார்கள். பிராச்சியின் சகோதரி பாலியல் மருத்துவர். ரித்விச்சின் அண்ணனும் மருத்துவர். மனரீதியான பிரச்சினைகளால் இல்லற வாழ்வில் முழுமை பெற முடியாமல்

விஜய்யுடன் ஜோடி சேர இலியானா முயற்சி

Posted: 05 Mar 2014 02:02 AM PST

இலியானா தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார். தமிழில் 'கேடி' படம் மூலம் அறிமுகமானார். இரு வருடங்களுக்கு முன் ரிலீசான நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தார். அதன் பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வர வில்லை. தற்போது இந்தி படங்களில் நடிக்கிறார். இந்த நிலையில் விஜய்யுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்க இலியானா முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுரையில் ஏப்.5-ந் தேதி இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி

Posted: 05 Mar 2014 12:28 AM PST

இசைஞானி இளையராஜாவின் மூத்த மகனான கார்த்திக் ராஜா சமீபத்தில் மலேசியாவில் கிங் ஆப் கிங் என்ற பெயரில் இளையராஜாவின் லைவ் இசைக்கச்சேரியை நடத்தினார். இந்த விழா நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இளையராஜாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆகையால், இந்த இசை நிகழ்ச்சியில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும், ரசிகர்களுக்காக வீடியோ கான்பரசிங் மூலம் இந்த நிகழ்ச்சியில் பேசினார். இந்த இசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இதுபோல் மதுரையிலும் இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சியை நடத்த கார்த்திக் ராஜா முடிவு செய்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை இன்று கார்த்திக் ராஜா

கார் மோதி சிறுமி பலி: டி.வி. நடிகர் ஷ்யாம் கைது

Posted: 04 Mar 2014 11:38 PM PST

நாகை மாவட்டம் சீர்காழி தென்பாதி என்.எஸ்.பி நகரை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மனைவி வளர்மதி (வயது 55). நேற்று வளர்மதி தனது மகள் மல்லிகா (35) மற்றும் பேத்தி மதுமிதா(7) ஆகியோருடன் சீர்காழியில் இருந்து எருக்கூருக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். ஆட்டோவை தென்பாதியை சேர்ந்த சண்முகம் (39) என்பவர் ஓட்டி சென்றார். பாதரக்குடி பைபாஸ் சாலையில் ஆட்டோ சென்றபோது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் சிறுமி மதுமிதா

குடி போதையில் கலாட்டா: நடிகர் ரவிதேஜா தம்பி கைது

Posted: 04 Mar 2014 11:34 PM PST

பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜா. இவர் ஆந்திராவில் முன்னணி நடிகராக இருக்கிறார். ரவிதேஜாவின் தம்பி பரத் போதையில் கலாட்டா செய்ததாக கைது செய்யப்பட்டார். அதிகாலை 4 மணிக்கு ஐதராபாத் காவேரி ஹில்ஸ் பகுதியில் ரோட்டில் இரு கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை போலீஸ்காரர் ஒருவர் பார்த்தார். அந்த கார் அருகில் பரத்தும் ஒரு பெண்ணும் நின்று கொண்டு இருந்தார்கள்.

சினிமாவில் வன்முறையை குறைத்துக் கொள்ளுங்கள்: பாரதிராஜா

Posted: 04 Mar 2014 09:26 PM PST

6 தேசிய விருதுகளை பெற்ற 'ஆடுகளம்' படத்தை தயாரித்தவர், எஸ்.கதிரேசன். இவர் தயாரித்துள்ள புதிய படம், 'ஜிகிர்தண்டா.' இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் டைரக்டு செய்திருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவில், டைரக்டர் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- ''தமிழ் சினிமாவில் இப்போது வித்தியாசமான படங்கள் வெளிவருகின்றன. தொழில்நுட்பம் மிரட்டலாக இருக்கிறது. அதே சமயம் சில படங்கள் சம்பவங்களாக உள்ளன. கதையிலும் கவனம் செலுத்த வேண்டும். 'பீட்ஷா' படம் பார்த்துவிட்டு மிரண்டு போனேன். படங்களுக்கு கோடி கோடியாக செலவழிப்பது முக்கியமல்ல. நல்ல கதையம்சம் உள்ள படங்களை கொடுக்க வேண்டும். முன்பு சினிமாவில் நடிகர்கள் ஆதிக்கம் இருந்தது. நவீன காலத்தில், இயக்குனர்கள் ஆதிக்கம் இருந்து வருகிறது. மதுரை என்றாலே நிழல் உலக தாதாக்கள் நிறைந்த நகரம் என்பது போல் படம் எடுக்கிறார்கள். ஒரு காலத்தில் மதுரையில் ரவுடிகள் இருந்தார்கள். இப்போது இல்லை. மதுரை என்றாலே பயங்கரம் என்று காட்டுவதை குறைக்கலாம். பாரதிராஜா முரடன் போல் சிலருக்கு தோன்றலாம

ஆஸ்கார் விருது வெகு தூரத்தில் இல்லை: நடிகை வித்யா பாலன் நம்பிக்கை

Posted: 04 Mar 2014 11:26 AM PST

ஆஸ்கார் விருது பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று நடிகை வித்யா பாலன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய தலைநகர் மெல்போர்னில் வரும் மே மாதம் 1-ம் தேதி முதல் 11 வரை நடைபெறவுள்ள இந்திய திரைப்பட விழாவுக்கான படங்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online