Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


அரசியலே வேண்டாம்: ரஜினி பேட்டி

Posted: 10 Mar 2014 03:07 AM PDT

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தொடர் விவாதமாகவே இருக்கிறது. ஏற்கனவே பல்வேறு கட்சிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். புது கூட்டணிகள் உருவாகவும் காரணமாக இருந்தார். சமீபகாலமாக அரசியல் பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார். ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது அவரது ரசிகர்களில் ஒரு பிரிவினரின் விருப்பமாக இருக்கிறது. சமீபத்தில் அவர்கள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டி வேள்வி யாகம் நடத்தினார்கள். சென்னையில் ரகசிய கூட்டம் நடத்தியும் பேசினர். அரசியலுக்கு வரும்படி வேண்டி ரஜினிக்கு எல்லோரும் கையெழுத்திட்ட கடிதங்களை கொடுப்பது என்றும் முடிவு செய்தனர். ஆனால் ரஜினி அரசியல் பற்றி இதுவரை எதுவும் பேசாமல் இருந்தார். பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. பாரதீய ஜனதா தலைவர்கள் ரஜினி ஆத

மனிஷாயாதவை நீக்கியது ஏன்?: டைரக்டர் சீனுராமசாமி விளக்கம்

Posted: 10 Mar 2014 02:47 AM PDT

விஜய் சேதுபதியை வைத்து ''இடம் பொருள் ஏவல்'' படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். இதில் மனிஷா யாதவ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு நீக்கப்பட்டார். இதனால் மனிஷா யாதவ் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சீனுராமசாமியிடம் மாலைமலர் நிருபர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:– இடம் பொருள் ஏவல் படம் மலை கிராமத்து கதை. மனிஷா யாதவுக்கு மேக்கப் போட்டபின் முகத்தில் கிராமத்து பெண் சாயல் வரவில்லை. கடும் முயற்சி எடுத்தும் தோற்றத்தை மாற்ற முடியவில்லை. பட்டணத்து பெண் போலவே தெரிந்தார். எனவேதான் அவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

டிஜிட்டலில் புதுப்பித்த ஆயிரத்தில் ஒருவன் 100 தியேட்டரில் ரிலீஸ்

Posted: 10 Mar 2014 02:23 AM PDT

எம்.ஜி.ஆர். நடித்து 1965–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஆயிரத்தில் ஒருவன். தற்போதைய முதல்வர் ஜெயலலிதா நாயகியாக நடித்து இருந்தார். நாகேஷ், நம்பியார், ஆர்.எஸ். மனோகர் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வந்தனர். பி.ஆர்.பந்துலு இயக்கினார். இப்படம் நவீன தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தமிழகம் மற்றும் கேரளாவில் வருகிற 14–ந்தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. கலர் மெருகேற்றப்பட்டு உள்ளது. டிஜிட்டலிலும் புதுப்பித்து உள்ளனர். மொத்தம் 100 தியேட்டர்களில் ஆயிரத்தில் ஒருவன் திரையிடப்படும் என்று திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் தெரிவித்து உள்ளார்.

விஜய்யுடன் சிம்பு, தனுஷ் சந்திப்பு

Posted: 10 Mar 2014 01:54 AM PDT

நடிகர்களுக்கு திரைக்கு பின்னால் ஆரோக்கியமான நட்பு நிலவுகிறது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நன்றாக கூடி விருந்து சாப்பிடுதல், அரட்டை அடித்தல் என பொழுதை கழிக்கின்றனர். எதிர் துருவங்களாக இருந்தவர்கள் சிம்பு, தனுஷ். அவரவர் படங்களில் ஒருவரை தாக்கி ஒருவர் 'பஞ்ச்' வசனங்களும் பேசி வந்தனர். இதனால் இருவரின் ரசிகர்களும் பேஸ் புக், டூவிட்டர்களில் மோதிக் கொண்டு நின்றனர். தற்போது இருவரிடமும் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. பகையை மறந்து நெருங்கிய நண்பர்களாகி விட்டனர். அடிக்கடி சந்தித்தும் பேசுகிறார்கள். தற்போது கூடுதலாக விஜய்யையும், அணியில் சேர்த்துள்ளனர். இருதினங்களுக்கு முன் விஜய், சிம்பு, தனுஷ் மூவரும் ச

பாலாவுடன் இணையும் விஜய் சேதுபதி!

Posted: 10 Mar 2014 01:34 AM PDT

விஜய் சேதுபதி தற்போது 'வசந்தகுமாரன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இப்படத்தை இயக்குனர் பாலா, தனது பி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக, ஸ்டுடியோ நைன் புரொடக்சன்ஸுடன் இணைந்து மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆனந்த் குமரேசன். இவர், ஏற்கெனவே 'செம ரகளை', 'எதிரி எண் 3' உள்ளிட்ட ஏராளமான படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஐஸ்டின் பிரபாகரன் இசையைமக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ரோமானிய அழகியை மணக்கிறார் சல்மான்கான்

Posted: 10 Mar 2014 01:11 AM PDT

நடிகர் சல்மான்கான் ரோமானிய அழகியை காதலிக்கிறார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சல்மான்கானுக்கு 48 வயது ஆகிறது. இவரை பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இந்த நிலையில் ரோமானிய அழகி லூலியா வந்தூருக்கும் சல்மான் கானுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியானது. இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கூறப்பட்டது. லூலியாவை திருமணம் செய்து கொள்ள சல்மான்கான் திட்டமிட்டு உள்ளார். இதனை சமீபத்திய பேட்டியொன்றில் மறைமுகமாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

காதல் முறிவுக்கு பின் ஹன்சிகாவுக்கு படங்கள் குவிந்தது

Posted: 09 Mar 2014 11:32 PM PDT

ஹன்சிகாவும் சிம்புவும் காதலித்தனர். திருமணம் செய்துகொள்ளவும் முடிவெடுத்தார்கள். ஆனால் திடீர் என கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். காதல் முறிந்து விட்டதாக சிம்பு அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்து விட்டார். சிம்புவின் புது படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இருவரும் இணைந்து நடிப்பது ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை என்றும் எனவே தகராறு போட்டு பிரிந்து விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. காதல் முறிவுக்கு பின் ஹன்சிகாவுக்கு நிறைய படவாய்ப்புகள் வருகிறதாம். மார்க்கெட்டும் உயர்ந்து விட்டது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online