Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


ராஜ்கிரணின் சிவப்பு - படங்கள்

Posted: 05 Feb 2014 03:42 AM PST

தவமாய் தவமிருந்து படத்துக்குப் பிறகு கெட்டவனாக நடிப்பதில்லை என்று முடிவெடுத்தார் ராஜ்கிரண். தனது இமேஜை உயர்த்தும் கதாபாத்திரங்கள் மட்டுமே அவரது சாய்ஸ். அப்படி அவரது கொள்கைக்கேற்ற அமைந்த படம் சிவப்பு.

த்ரிஷ்யம் - ரஜினி - கமல் - மீனா - வதந்தி

Posted: 05 Feb 2014 02:04 AM PST

த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ரஜினியை கேட்டு அவர் மறுத்ததால் கமலிடம் வந்தார்கள் என்று சிலர் கூறுவது முற்றிலும் தவறு. த்ரிஷய்ம் ரீமேக்கில் நடிக்க கமல்ஹாசன்தான் விருப்பம் தெரிவித்தார் என உண்மையை விளக்கினார் படத்தை இயக்கப் போகும் ஜித்து ஜோசப்.

தொடங்கியது தனுஷ், அக்சராஹாசனின் ஹிந்திப் படம்

Posted: 05 Feb 2014 04:18 AM PST

தமிழரான பால்கி என்கிற பாலகிருஷ்ணன் விளம்பரப்பட துறையிலிருந்து சினிமாவுக்கு வந்து எடுத்த படம் சீனி கம். அமிதாப்பச்சன், தபு நடித்த இந்தப் படத்தில் தனது இளமைக் காலத்தில் கேட்டு ரசித்த இளையராஜாவின் பாடல்கள் வேண்டும் என்பதற்காக அவரையே இசையமைப்பாளராக்கினார். விரும்பியதுபோல் இளையராஜாவின் பழைய பாடல்களின் டியூனை பயன்படுத்தவும் செய்தார். இந்தப் படத்தின் மூலம் ஹிந்திக்கு சென்ற இன்னொரு தமிழ் திறமை, பி.சி.ஸ்ரீராம்.

கௌதமின் தலபுராணம்

Posted: 05 Feb 2014 01:53 AM PST

அஜீத்தை போல இதயம் கொண்ட ஒருவர் இன்டஸ்ட்ரியில் இல்லை என்று தெரிவித்துள்ளார் கௌதம். துப்பறியும் ஆனந்த் படத்தை கௌதம் அஜீத்தை வைத்து செய்வதாக இருந்த நேரம். முழுக்க கதையை சொல்லவில்லையா இல்லை கதையை அஜீத் மாற்றச் சொன்னாரா தெரியாது. கௌதம் படத்திலிருந்து அஜீத் விலகினார். அப்போது கௌதமிடம் எப்போது தல படத்தை இயக்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு யார் தல என்று கேட்டார் கௌதம்.

ரஜினியுடன் மோதும் வடிவேலு

Posted: 05 Feb 2014 01:56 AM PST

பேட்டியின் போது கைகட்டி கூழைகும்பிடு போடும் வடிவேலின் நிஜமுகம் தனிமையில் பட்டொளி வீசும். பெரும்பாலும் அது தன்புகழ்ச்சியாகவே இருக்கும். இல்லையென்றால் தனது கேரியரில் மிகச்சிறந்த நகைச்சுவை வேடத்தை தந்த சுந்தர்.சியுடன் முட்டிக் கொள்வாரா இல்லை சிங்காரவேலனில் கவுண்டமணி சதா வடிவேலுவை உதைப்பதைப் பார்த்து உனக்கொரு வேடம் தர்றேன் என்று தேவர்மகனில் வடிவேலுவை பிரபலப்படுத்திய கமலை பகைத்துக் கொள்வாரா... இப்படி பல ராக்களை வடிவேலு விஷயத்தில் போட முடியும்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online