Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


நீதியரசர் வேடத்தில் மனுஷ்ய புத்திரன்

Posted: 23 Feb 2014 04:50 AM PST

கவிஞர் மனுஷ்ய புத்திரன் சிவப்பு படத்தில் முதல்முறையாக நடிகராக அறிமுகமாகிறார். சிறுபத்திரிகைகளில் தனது கவிதைகளால் அறியப்பட்டவர் மனுஷ்ய புத்திரன். காலச்சுவடு இதழில் பணிரிpந்த போது பரவலாக கவனிக்கப்பட்டார். உயிர்மை பதிப்பகமும், மாத இதழும் அவரை பிரபலப்படுத்தியது. இன்று எந்த செய்திச் சேனலை திறந்தாலும் தனது கருத்துகளுடன் சேனல் முழுவதும் மனுஷ்ய புத்திரன் வியாபித்துள்ளார். அவர் கருத்து தெரிவிக்காத பிரச்சனைகள், சம்பவங்கள் இந்தியாவில் இல்லை.

மான் கராத்தே பாடல்கள் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Posted: 23 Feb 2014 04:47 AM PST

சிவ கார்த்திகேயன், ஹன்சிகா நடித்திருக்கும் மான் கராத்தே படத்தின் பாடல்கள் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெற்றிக்குப் பிறகு சிவ கார்த்திகேயன் நடித்திருக்கும் படம் மான் கராத்தே. இந்தப் படத்தில் ஹன்சிகா நடிக்க ஒப்புக் கொண்டதை பலரும் வியப்புடன் பேசினர். குறுகிய காலத்தில் முன்னணி நடிகை ஒருவருடன் சிவ கார்த்திகேயன் இணைந்து நடிக்கிறார் என்பதால் வந்த வியப்பு.

அவரும் வந்திட்டார் நடிப்பதற்கு...

Posted: 23 Feb 2014 03:40 AM PST

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்தையும் சினிமா விடவில்லை. கிரிக்கெட் குறித்து தெலுங்கில் தயாராகும் படத்தில் வெங்கடேஷ் பிரசாத் நடிக்கிறார்.

கமல்ஹாசனால் கணவருடன் சேர்ந்தேன்

Posted: 23 Feb 2014 03:34 AM PST

கமல்ஹாசனும், கவுதமியும் உதவியதால் கணவருடன் மீண்டும் சேர்ந்தேன் என லிஸி தெரிவித்துள்ளார். தொழிலில் ஏற்பட்டப் பிரச்சனை மனவருத்தமாகி மணமுறிவுவரைச் சென்று கடைசி நிமிடத்தில் லிஸியும், ப்ரியதர்ஷனும் தங்களின் தாம்பத்தியத்தை காத்துக் கொண்டனர். இந்த சமாதான உடன்படிக்கைக்கு பின்னால் இருந்தவர்கள் கமலும், கவுதமியும்.

ரம்யா... கடத்தியாவது கல்யாணம் கட்டுவேன்

Posted: 23 Feb 2014 03:30 AM PST

கடந்த பதினான்காம் தேதி கர்நாடகாவில் வெளியாக ஆங்கில நாளிதழில் விளம்பரம் ஒன்று தரப்பட்டிருந்தது. அதனை படித்தவர்கள் இன்றுவரை அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. ஒரு படத்துக்குரிய கச்சா பொருளை கொண்டிருந்தது அதில் இடம்பெற்ற வாசகங்கள்.

குஷ்பு பேச்சை ரசிப்பதா....? ரொம்ப கேவலங்க

Posted: 23 Feb 2014 03:26 AM PST

அரசியலில் அளவுக்கு மீறி வாய்விடும் நடிகர்களின் நிலை என்னவாகும் என்பதற்கு வாழும் உதாரணமாக உலவிக் கொண்டிருக்கிறார் வடிவேலு. அவரின் நிலையை அருகிலிருந்து கவனித்தும் அறியாமையில் இருக்கிறார்கள் சிலர்.

ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருங்க

Posted: 23 Feb 2014 03:24 AM PST

நான்கு படங்கள் நடித்ததும் நார்த்திலிருந்து வரும் நடிகைகளுக்கு வரும் ஆசை, சொந்தக் குரலில் டப்பிங் பேச வேண்டும். பெரும்பாலும் இந்த ஆசை அவர்கள் சினிமாவிலிருந்து ரிட்டையர்ட் ஆகும்வரை கதிமோட்சம் கிடைக்காமல் இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும். ஹன்சிகாவையும் தற்போது அந்த ஆசை பீடித்துள்ளது.

பாகுபலி பெயர் மாறுகிறது

Posted: 23 Feb 2014 02:59 AM PST

எஸ்எஸ் ராஜமௌலியின் பாகுபலி படத்துக்கு ஜெயின் மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்தது நினைவிருக்கலாம். பாகுபலி என்பது அவர்களின் தீர்த்தங்கரர்களில் ஒருவர். கடவுளுக்கு நிகரானவர். அவர் பெயரில் ஒரு படம் வருவதை ஜெயின் மதத்தினர் விரும்பவில்லை.

கமல், சூர்யா, அப்புறம் விஜய் சேதுபதி

Posted: 23 Feb 2014 02:55 AM PST

கோடம்பாக்கத்தில் எந்த சினிமா விழா நடந்தாலும் சம்பந்தப்பட்ட படத்தின் ஹீரோ வருகிறாரோ இல்லையோ விஜய் சேதுபதி டாணென்று ஆஜராகிவிடுவார். ஏம்பா அரைடஜன் படங்கள்ல நடிக்கிறார்னு சொல்றாங்க. எங்க மீட்டிங் போட்டாலும் வந்திடுறாரே என்று பிரஸ் பீப்பிளே பிகில் ஆவதுண்டு. அவரைப் போலவே ஆல்டைம் மேடையில் இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார் இதனை கவனிக்காமல் இருப்பாரா?

விஜய்யுடன் பேசிகிட்டிருக்கேன்

Posted: 23 Feb 2014 02:52 AM PST

சசிகுமார் படங்களில் அணியும் காஸ்ட்யூம், காட்டுகிற ஸ்டைலும் இன்னொரு விஜய் ஆவதற்கான முயற்சியா என சந்தேகிக்க வைக்கும். இது ஒருபுறமிருக்க, விஜய்யை வைத்து படம் இயக்கும் முயற்சியையும் இன்னொரு பக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

தேவா அனிருத் சிவ கார்த்திகேயன் - ஒரு கானா கைமா

Posted: 23 Feb 2014 02:49 AM PST

சிவ கார்த்திகேயன், ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கும் மான் கராத்தேயின் பாடல்கள் மார்ச் 1 வெளியாகிறது. அனிருத் இசையமைத்துள்ளார். சிவ கார்த்திகேயனின் சினிமாவில் க்ரீன் ஹண்ட் ஆபரேஷன் பற்றியா அலசுவார்கள். ஃபிகர் பிக்கப் செய்வதுதான் தலையாயப் பிரச்சனை. காதல் என்று வந்தபின் கானா இல்லாமலா.

இதுதானா பழம் நழுவி பாலில் விழுவது...?

Posted: 23 Feb 2014 02:46 AM PST

அமலா பால் ரொம்ப அலட்டல் பண்றார் என்று திரையுலகு குற்றப்பத்திரிகை வாசித்தவேளை நிமிர்ந்து நில் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்தார் சமுத்திரக்கனி. அமலா பாலைப் போல ஒத்துழைப்பு தரும் நல்ல நடிகையை நான் கண்டதில்லை என சான்றிதழும் தந்தார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online