Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


இந்த மாதம் 28 ஆம் தேதி கோச்சடையான் பாடல்கள்

Posted: 10 Feb 2014 04:44 AM PST

இந்த மாதம் 28 ஆம் தேதி கோச்சடையான் படத்தின் பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஏப்ரல் 11 ஆம் தேதி கோச்சடையான் வெளியாவதாக தயாரிப்பாளர் தரப்பு அறிவித்தது. இதற்கு முன் பல வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்பட்டாலும் அவற்றை அறிவித்தது இணை தயாரிப்பாளரான முரளி மனோகர். இந்தமுறை அறிவித்திருப்பது ஈராஸ் நிறுவனம். இவர்கள்தான் கோச்சடையானின் தயாரிப்பாளர்கள்.

விஷால் ஆன் டிமாண்ட்

Posted: 10 Feb 2014 02:02 AM PST

சினிமாவில் ஒரு சிறிய வெற்றி பல மலைகளை புரட்டக் கூடியது. பாண்டிய நாடு படத்தின் வெற்றியால் இன்று விஷாலின் கால்ஷீட்டுக்கு ஏக டிமாண்ட். தனது விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்த நடித்த பாண்டிய நாடு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து யுடிவி யுடன் இணைந்து நான் சிகப்பு மனிதன் படத்தை தயாரித்து நடித்து வருகிறார்.

அதை மட்டும் சொல்ல மாட்டேன்

Posted: 10 Feb 2014 02:00 AM PST

ஹிந்தி ட்ராஃபிக் சிக்னலில் அறிமுகமான நீது சந்திராவை தமிழுக்கு அழைத்து வந்தவர் விக்ரம் கே.குமார். அவரது யாவரும் நலம் படத்தில் நீது ஹீரோயின். அதன் பிறகு யுத்தம் செய்யில் ஒரு பாடலுக்கு நடனம். பிறகு ஆதிபகவனில் மீண்டும் ஹீரோயின்.

ரெட் ஜெயண்ட் வெளியிடும் நெடுஞ்சாலை

Posted: 10 Feb 2014 01:57 AM PST

நெடும்பயணத்தை சந்தித்த கிருஷ்ணாவின் நெடுஞ்சாலை அடுத்த மாதம் 28 ஆம் தேதி வெளியாகிறது. சில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா தனது திறமை முழுவதையும் கொட்டி எடுத்திருக்கும் படம் நெடுஞ்சாலை. ஆரி நடித்திருக்கும் இப்படம் சரியான வியாபாரம் அமையாததால் திரைக்கு வருவதில் சிக்கல் நீடித்து வந்தது.

ஃபேஸ்புக் அலுவலகத்தில் விஜய் - படங்கள்

Posted: 10 Feb 2014 01:38 AM PST

ஃபேஸ்புக் அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பை ஏற்று நடிகர் விஜய் ஃபேஸ்புக் அலுவலகத்துக்கு சென்றார். தென்னிந்திய நடிகர் ஒருவர் ஃபேஸ்புக் அலுவலகத்துக்கு செல்வது இதுவே முதல்முறை.

ரிவைஸிங் கமிட்டிக்கு செல்லும் ஆஹா கல்யாணம்

Posted: 10 Feb 2014 01:13 AM PST

யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தமிழில் தயாரித்திருக்கும் முதல் படம் ஆஹா கல்யாணத்துக்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால் ரிவைஸிங் கமிட்டிக்கு செல்ல முடிவு எடுத்துள்ளனர்.

நீ எங்கே என் அன்பே

Posted: 10 Feb 2014 01:10 AM PST

சின்னதம்பி படத்தின் சூப்பர்ஹிட் பாடலின் முதல் வரியை நயன்தாரா நடிக்கும் படத்தின் பெயராக்கியிருக்கிறார்கள். சேகர் கம்மூலா இயக்கத்தில் ஹிந்தி கஹானி தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. இரு மொழிகளிலும் இந்தப் படத்துக்கு அனாமிகா என்று பெயர் வைத்திருந்தனர். பிறகு தமிழ் பதிப்புக்கு மட்டும் அவள் என்ற பெயரை தேர்வு செய்தனர். அதே பெயரில் ஏற்கனவே ஒரு காலைக்காட்சி படம் வெளியாகியிருக்கிறது.

தெய்வத்திருமகள்

Posted: 10 Feb 2014 01:51 AM PST

கஷ்டப்படுகிறவர்களுக்கு இஷ்டப்பட்டு உதவுகிறவர்கள் எல்லோருமே தெய்வங்கள்தான். அன்பே சிவம் சொல்லும் இந்த வாழ்க்கைத் தத்துவத்தை அப்படியே தனது வாழ்வில் வரித்துக் கொண்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

வீரம் ரீமேக்கில் சல்மான் கான்

Posted: 10 Feb 2014 12:56 AM PST

வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கிறார். தமன்னா நடித்த வேடத்தில் ஜாக்குலின் ஃபெர்னாண்ட்ஸ் நடிக்கலாம் என தெரிகிறது.

தி சோல் ஆஃப் தரமணி

Posted: 10 Feb 2014 12:05 AM PST

ராம் இயக்கும் மூன்றாவது படமான தரமணியின் ஒரு பாடல் நேற்று பிரசாத் லேபில் வெளியிடப்பட்டது. பாடலை கமல்ஹாசன் வெளியிட பாரதிராஜா பெற்றுக் கொண்டார்.

இஸ்லாத்தை பின்பற்றுவதற்காக பெருமைப்படுகிறேன்

Posted: 09 Feb 2014 10:18 PM PST

யுவன் ஷங்கர் ராஜா இஸ்லாம் மார்க்கத்தை தழுவியதாக செய்திகள் ஏற்கனவே வெளிவந்தன. மதம் சம்பந்தப்பட்ட விஷயம்... கிசுகிசுவாக இருந்தாலும் தப்பாக இருந்துவிடக் கூடாது என்பதில் மீடியாக்கள் எச்சரிக்கையாக இருந்தன. இப்போது யுவனே தனது ட்விட்டர் செய்தியில் தனது இஸ்லாம் மாற்றத்தை வெளியிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online