Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் ஏப்ரல் 11ல் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted: 03 Feb 2014 07:28 AM PST

சூப்பர் ஸ்டார் ரஜினி நுரையீரல் பாதிப்பு பிரச்சினையிலிருந்து மீண்டு வந்தவுடன் தனது மகள் சௌந்தர்யா இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்து அப்படத்திற்கு கோச்சடையான் என்று பெயரிடப்பட்டு படப்பிடிப்பு

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியது

Posted: 03 Feb 2014 06:14 AM PST

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் இணைந்த முதல் படம் 'துப்பாக்கி'. இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் விஜய் நடித்த படங்களில் அது பிரமாண்ட படைப்பாகவும்

தனுஷுடன் ஆட சம்பளம் வாங்காத சிவகார்த்திகேயன்!

Posted: 03 Feb 2014 04:07 AM PST

சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் நடிப்பில் வெளிவந்து வெற்றியடைந்த படம் 'எதிர்நீச்சல்'. இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்திருந்தார். தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் முக்கியமான ஒன்றாகும். இப்படத்தையடுத்து சிவகார்த்திகேயனுக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் கிடைத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கிறார். இப்படத்தின் விளம்பரத்திற்காக தனுஷ், சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இது அனைவர் மத்தியிலும் பெரிதும் பேசப்பட்டது.

பாலா படத்திற்கு தொடர்ந்து 19 மணி நேரம் ரெக்கார்டிங் செய்த இளையராஜா

Posted: 03 Feb 2014 03:36 AM PST

'பரதேசி' படத்திற்கு பிறகு இயக்குனர் பாலா தனது அடுத்த படவேலைகளில் பிசியாக களமிறங்கிவிட்டார். இவருடைய அடுத்த படத்தில் நடிக்க அதர்வா, விக்ரம், விஷால் போன்ற நடிகர்களின் பெயர்கள் அடிபட்டது. ஆனால், இவர்களையெல்லாம் தவிர்த்து சசிகுமாரை தனது அடுத்த படத்தின் நாயகனாக பாலா தேர்வு செய்துள்ளார். சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்ற விபரம் தெரியவில்லை. இந்த படத்திற்காக இசைஞானி இளையராஜாவுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் பாலா. இதில் இடம்பெறும் 12 பாடல்களை 6 நாட்களில் முடித்துக் கொடுத்துள்ளார் இளையராஜா. கரகாட்டக் கலைஞர்களை மையப்படுத்தியக் கதை என்பதால் இப்படத்தில் புதுமுயற்சியாக இதுவரை

நயன்தாராவுடன் திரிஷா திடீர் சந்திப்பு

Posted: 03 Feb 2014 01:42 AM PST

நயன்தாராவும், திரிஷாவும் தமிழ் திரையுலகில் மூத்த நடிகைகளாக உள்ளனர். திரிஷா 2002–ல் கதாநாயகியாக அறிமுகமானார். பத்து வருடங்களுக்குமேல் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். நயன்தாராவும் 2003–ம் ஆண்டில் இருந்து தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். புது நடிகைகள் வரத்து இவர்கள் மார்க்கெட்டை சரிக்கவில்லை. இன்னும் முன்னணி நடிகைகளாகவே உள்ளனர். போட்டி மனப்பான்மையின்றி இருவரும் நெருங்கிய தோழிகளாகவும் இருக்கிறார்கள்.

நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்கு இலவசமாக பாடல் எழுத தயார்: படவிழாவில் சினேகன் பேச்சு

Posted: 02 Feb 2014 11:43 PM PST

முக்தா என்டர்டெயின்ட் பிரைவேட் லிட் நிறுவனம் சார்பாக முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ஆர்.கோவிந்த், புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி. பிலிம்ஸ் பிரைவேட் லிட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் 'சிவப்பு'. இப்படத்தை சத்ய சிவா என்பவர் இயக்குகிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். மது அம்பாட் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படத்தில், நவீன்சந்திரா கதாநாயகனாகவும், ரூபா மஞ்சரி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண், தம்பி ராமையா, சோனா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. இந்த

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஸ்காட்லாந்து இசைக் கல்லூரியின் கவுரவ டாக்டர் பட்டம்

Posted: 02 Feb 2014 11:39 PM PST

ரோஜா படத்தில் இடம் பெற்ற 'சின்ன சின்ன ஆசை' பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து 'ஹாலிவுட்' வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான். 'ஸ்லம் டாக் மில்லியனைர்' படத்தில் சிறந்த முறையில் பாடலுக்கான மெட்டமைத்ததற்கு ஒன்று, சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக மற்றொன்று என ஒரே மேடையில் 2 ஆஸ்கர் விருதுகளை பெற்று

‘வாலிப ராஜா’ படத்தில் மனநல மருத்துவராக கலக்கும் சந்தானம்

Posted: 02 Feb 2014 11:07 PM PST

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்த சேது, விசாகா, சந்தானம் ஆகியோர் மீண்டும் ஒன்றாக சேர்ந்து கலக்க வரும் படம் 'வாலிப ராஜா'. இப்படத்தில் இவர்களோடு ஜெயப்பிரகாஷ், விடிவி கணேஷ், தேவதர்ஷினி, சந்தான பாரதி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமும் நடித்துள்ளது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சாய் கோகுல் ராம்நாத். இவர் கே.வி.ஆனந்திடம் உதவியாளராக இருந்தவர். இப்படத்தில் சந்தானம் பலரின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு தீர்வு சொல்கிற மனநல மருத்துவராக வருகிறாராம். தன்னிடம் வரும் நோயாளிகளிடம் அவங்க பிரச்சினைகளோட ஒன்லைன் கேட்பாராம்.

டி டே படம் டப்பிங் சர்ச்சை: ஸ்ருதிஹாசனுக்கு கண்டனம்

Posted: 02 Feb 2014 10:56 PM PST

கடந்த வருடம் இந்தியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் டி டே. இதில் சுருதிஹாசன் பாலியல் தொழிலாளி கேரக்டரில் ஆபாசமாக நடித்து இருந்தார். படுக்கையறையில் அவர் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. நிகில் அத்வானி இப்படத்தை இயக்கி இருந்தார். இது தற்போது தாவூத் என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் விரைவில் இப்படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடக்கிறது. 150 தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். ஆனால் இப்படத்தை தமிழில் வெளியிடுவதற்கு சுருதிஹாசன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். தனது அனுமதி பெறாமல் தமிழில் இந்த

ஊசிமூலம் போதை மருந்து ஏற்றிய ஹாலிவுட் நடிகர் ஹாப் மேன் மரணம்

Posted: 02 Feb 2014 10:51 PM PST

பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் சிமோர் ஹாப்மேன் (46). இவர் 'மிஷன் இம்பாசிபில்–3', 'போகி நைட்ஸ்', 'பிக் லெபோஸ்கி' உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள மேன் ஹாட்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார். அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் அதில் இருந்து அவரால் மீள முடியவில்லை. இந்த நிலையில் மேன் ஹாட்டனில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் நேற்று காலை 11.30 மணியளவில் ஹாப் பிணமாக கிடந்தார். அவரது

சிம்பு–நயன்தாராவுடன் நடிக்க ஹன்சிகாவுக்கு அழைப்பு

Posted: 02 Feb 2014 09:41 PM PST

பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்பு – நயன்தாரா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்திற்கு 'இது நம்ம ஆளு' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இருவரும் காதலித்து, பிரிந்து பல வருட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் இணைகிறார்கள். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சி சென்னை ஸ்டூடியோக்களில் படமாகி வருகிறது. பழைய நட்பை இருவரும் புதுப்பிதுள்ளனர். சிம்புவும் ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். தற்போது நயன்தாராவும் சிம்புவும் சேர்ந்து நடிப்பதால் ஹன்சிகா கோபமடைந்து இருப்பதாகவும் இதனால் அவர்கள் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவி உள்ளன.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online