Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


மீண்டும் உடல் எடையை குறைக்கும் அஜீத்

Posted: 17 Feb 2014 04:17 AM PST

'வீரம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவுதம் மேனன் படத்தில் நடிக்க அஜீத் தயாராகி வருகிறார். இப்படத்தில் அஜீத் பழைய இளமையான தோற்றத்தில் நடிக்கிறாராம். இதற்காக தினமும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்து வருகிறாராம். ஏற்கெனவே, 'ஆரம்பம்' படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, அப்படத்திற்காக ஜிம்மிற்கு சென்று உடம்பை குறைத்து வந்தார். அதன்பிறகு, 'வீரம்' படத்தில் கொஞ்சம் குண்டாகி விட்டார். இந்நிலையில், கவுதம் மேனன் படத்தில் ஸ்லிம்மாக தோன்ற வேண்டும் என்பதற்காக ஜிம்மிற்கு சென்று கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.

டுவிட்டரில் இணைந்தார் சினேகா

Posted: 17 Feb 2014 03:48 AM PST

தமிழ் மற்றும் இந்திய திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் டுவிட்டர் என்ற சமூக இணையதளத்தில் இணைந்து, தாங்கள் நடிக்கும் படங்கள் சம்பந்தமான அறிவிப்புகள், புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். ரஜினி, கமல், விஜய், அஜீத் உள்ளிட்ட பிரபலங்கள்தான் இன்னும் இந்த சமூக வலைத்தளத்தில் இணையாமல் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2012-ம் வருடம் நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்ட சினேகா தற்போது டுவிட்டர் இணையதளத்தில் இணைந்துள்ளார். நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் இதை உறுதி செய்து டுவிட் செய்துள்ளார்.

அண்ணாத்துரையின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகிறது

Posted: 17 Feb 2014 02:26 AM PST

தமிழக முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தை தோற்றுவித்தவருமான சி.என்.அண்ணாத்துரையின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு 'அறிஞர் அண்ணா' என பெயரிட்டுள்ளனர். திராவிடன் மனமகிழ்வுகள் என்ற புதிய நிறுவனமும், அண்ணா பேரவையும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. வேள் கதிவரன் என்பவர் இயக்குகிறார். இசைக்கினியன் இசையமைக்கிறார். கண்ணியப்பன் ஒளிப்பதிவு செய்கிறார். சி.என்.அண்ணாத்துரையின் வளர்ப்பு மகனான அண்ணா பரிமளம் மற்றும் பேரன் மலர் வண்ணன் பரிமளம் இருவரும் இணைந்து கதை, வசனம் எழுதியுள்ளனர். இப்படத்தில் அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியான நஸ்ரியா!

Posted: 17 Feb 2014 02:07 AM PST

மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'உஸ்தாத் ஹோட்டல்' என்ற படம் தமிழில் தலப்பாக்கட்டி என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தில் நாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார். மேலும், ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை 'கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா இயக்குகிறார். இப்படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வந்த நிலையில், தற்போது, நஸ்ரியாவை ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இதுகுறித்து இயக்குனர் கூறும்போது, இப்படத்தில் நடிக்க முதலில் நஸ்ரியாவிடம் கேட்டபோது, 'உஸ்தாத் ஹோட்டல்' மலையாள படத்தில் நித்யா மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் குறைவு. ஆனால், குறைந்த காட்சிகளே இருந்தாலும்

கல்லூரியில் படித்தபோது பகுத்தறிவு சிந்தனை உருவானது: நடிகர் சத்யராஜ் பேச்சு

Posted: 16 Feb 2014 09:34 PM PST

கோவை அரசு கலைக் கல்லூரியின் வரலாற்று துறை சார்பில் சரித்திரா–2014 என்ற விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:–

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online