Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


சைனா செல்லும் வடிவேலு

Posted: 07 Jan 2014 06:47 AM PST

ஜெக‌ஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்துக்காக இந்த மாதம் சைனா செல்கிறார் வடிவேலு. ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு படங்களில் நடக்காமலிருந்த வடிவேலு ஏ‌ஜிஎஸ் தயா‌ரிப்பில் பிரமாண்டமாக தயாராகும் ஜெக‌ஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தில் நடித்து வருகிறார். இதில் வடிவேலுக்கு இரண்டு வேடங்கள்.

ஸ்ருதிஹாசனுக்கு அறுவை சிகிச்சை

Posted: 07 Jan 2014 06:26 AM PST

வியிற்று வலியால் அவதிப்பட்ட ஸ்ருதிஹாசன் ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

திருமணத்தில் விருப்பமில்லை - ஒரு பொம்பள சல்மான் கான்

Posted: 07 Jan 2014 04:48 AM PST

திருமணத்தில் விருப்பமில்லை, தனியாக வாழவே ஆசைப்படுகிறேன் என்று சல்மான் கான் சொன்னதைப் போலவே ஒரு நடிகையும் கூறியிருக்கிறார். அவர் கங்கனா ரனவத். தாம் தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த இவர் அதற்குப் பிறகு சென்னை பக்கம் தலை வைக்கவில்லை. ஹிந்திதான் எல்லாம். விரைவில் திரைக்கு வரவிருக்கும் தனது படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

அமலா பால், நஸ்‌ரியா இணையும் அதியமான் படம்

Posted: 07 Jan 2014 04:47 AM PST

கே.எஸ்.அதியமான் இயக்கும் புதிய படத்தில் அமலா பால, நஸ்‌ரியா நசீம் இணைந்து நடிக்கிறார்கள். ஹீரோவாக நடிப்பவர் நிவின் பாலி. தமிழில் ஒரு படம் முடித்து ஹிந்தியில் செட்டிலாகிறவர் அதியமான். அவ‌ரின் முந்தைய சில படங்கள் ச‌ரியாகப் போகாத நிலையில் ஹிந்திக்கு செல்லாமல் தமிழிலேயே டேரா போட்டிருக்கிறார். அவ‌ரின் நகுல், சாந்தனு நடிக்கும் அமளி துமளி படம் ரொம்ப காலமாக அண்டர் புரொடக்ஷனில் உள்ளது.

பாலா‌‌ஜி மோகன் இயக்கத்தில் தனுஷ்

Posted: 07 Jan 2014 04:46 AM PST

அனேகன், வேலையில்லா பட்டதா‌ரி படங்களில் நடித்து வரும் தனுஷ் விரைவில் பாலா‌‌ஜி மோகன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். ஜோடி அனேகமாக காஜல் அகர்வாலாக இருக்கலாம் என்கிறார்கள். குறும்படங்களில் கவனம் ஈர்த்து இயக்குனரானவர் பாலா‌‌ஜி மோகன்.

காதல் இளவரசன் - ஆர்யாவுக்கு கமல் தந்த பட்டம்

Posted: 07 Jan 2014 03:43 AM PST

கமலின் வாயிலிருந்து ஒரு பாராட்டை பிடுங்கி எடுப்பதும், சிங்கத்துக்கு பல் விளக்கி விடுவதும் ஏறக்குறைய ஒன்றுதான். அவ்வளவு எளிதில் யாரையும் பாராட்டக் கூடியவரல்ல கமல். அப்படிப்பட்டவர் சமீபமாக இளம் நடிகர்களையும், இயக்குனர்களையும் வஞ்சனை இல்லாமல் புகழ்ந்து தள்ளுகிறார்.

நயன்தாராவும் ஒன்பதாம் தேதியும்

Posted: 07 Jan 2014 02:44 AM PST

நயன்தாரா அளவுக்கு போல்டான நடிகையை சமீபத்தில் திரையுலகம் கண்டதில்லை. மனம் போன போக்கில் மட்டுமே செயல்படும் சொற்ப நடிகைகளில் நயன்தாரா முக்கியமானவர். ஒருமுறை காதல் தோல்வி கண்ட சிம்புவுடன் மீண்டும் படத்தில் ஜோடி சேரும் தைய‌ரியத்தை என்னவென்பது?

விஜய் ஜோடி ப்‌ரியங்கா சோப்ரா...?

Posted: 07 Jan 2014 02:18 AM PST

ஐஸ்வர்யா ராயைப் போலவே ப்‌ரியங்கா சோப்ராவும் தனது ஆரம்ப சினிமா கே‌ரியரை தொடங்கியது தமிழில். தமிழன் படத்தில் விஜய் ஜோடியாக ப்‌ரியங்கா நடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்

Posted: 06 Jan 2014 11:46 PM PST

என்றென்றும் புன்னகை எதிர்பாராத வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 1.06 கோடி. வார நா‌ட்களில் 1.02 கோடி. வார இறுதி, வார நாள்கள் இரண்டிலும் கோடிக்கு மேல் வசூலித்திருப்பது சாதாரணமில்லை. இதன் இதுவரையான சென்னை வசூல் 5.8 கோடிகள்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online