Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


ரத்த கண்ணீரை தந்த திருவாரூர் தங்கராசு மரணம்

Posted: 06 Jan 2014 07:19 AM PST

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ரத்த கண்ணீர் படத்தின் கதை, வசனத்தை எழுதியவருமான திருவாரூர் தங்கராசு மரணமடைந்தார். அவருக்கு வயது 87.

வயிற்றுவலி - மருத்துவமனையில் ஸ்ருதிஹாசன்

Posted: 06 Jan 2014 07:02 AM PST

திடீர் வயிற்றுவலி காரணமாக நடிகை ஸ்ருதிஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உலக சாதனை படத்துக்கு யு சான்றிதழ்

Posted: 06 Jan 2014 04:38 AM PST

லிம்கா புக் ஆஃப் ‌ரிக்கார்டில் இடம் பிடித்த என்ன சத்தம் இந்த நேரம் படத்துக்கு சென்சார் யு சான்றிதழ் வழங்கியுள்ளது. ஏ.வி.ஏ.புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.வி.அனுப் தயா‌ரித்திருக்கும் பிரமாண்ட படைப்பு என்ன சத்தம் இந்த நேரம். சுரேஷ் கிருஷ்ணாவின் அசிஸ்டெண்ட் குரு ரமேஷ் படத்தை இயக்கியுள்ளார்.

அர்னால்டாக மாறிய அரவிந்த்சாமி

Posted: 06 Jan 2014 04:24 AM PST

அரவிந்த்சாமி என்றாலே தயிர் வாசனை வீசுகிற சாந்தமான தோற்றமே நினைவுக்கு வரும். அந்த அமைதியான தோற்றத்தை அர்னால்டாக மாற்றியிருக்கிறார்.கடல் படத்தில் ‌ரி என்ட்‌ரியான அரவிந்த்சாமி அக்டோபர் மாதம் முக்கியமான படம் ஒன்றில் நடிக்கிறார். தமிழ்ப் படம்தான். ஆனால் யாருடைய படம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை (மணிரத்னம்...?) அந்தப் படத்துக்காக கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என்று உடம்பை இரும்பாக மாற்றியிருக்கிறார். பார்க்க ஆளவந்தான் நந்து மாதி‌ரியிருக்கிறது அவரது தோற்றம்.

சிம்ரன் கபூ‌ரின் கிளாமர் அர்ஜுனின் ஆக்சன் - படங்கள்

Posted: 06 Jan 2014 04:14 AM PST

ஜெய்ஹிந்த் இரண்டாம் பாகத்தின் எண்பது சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டார் அர்ஜுன். இந்தியாவின் வளர்ச்சிக்கு - அப்துல் கலாமின் வல்லரசு கனவுக்கு கல்வி எவ்வளவு இன்றியமையாதது என்பதே படத்தின் மையக் கதை.

அப்புகுட்டி நடிக்கும் எங்க காட்டுல மழை

Posted: 06 Jan 2014 01:27 AM PST

அழகர்சாமியின் குதிரை படத்தில் ஹீரோவாக நடித்த அப்புகுட்டி இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கும் படம் எங்க காட்டுல மழை. கடந்த சனிக்கிழமை இதன் படப்பிடிப்பு தொடங்கியது. அப்புகுட்டிக்கு தொடர்ச்சியாக படங்கள் கிடைத்து வருகிறது.

அண்ணாவின் வேலைக்கா‌ரியில் நடித்த லட்சுமிகாந்தம் காலமானார்

Posted: 06 Jan 2014 12:27 AM PST

அண்ணாவின் வேலைக்கா‌ரி படத்தில் நடித்த பழம்பெரும் நடிகை லட்சுமிகாந்தம் நேற்றுமுன் தினம் காலமானார். அவருக்கு வயது 93. லட்சுமிகாந்தம் எம்.‌ஜி.ஆர்., சிவா‌ஜி காலத்தவர். அவர்களின் அலிபாபாவும் 40 திருடர்களும், நான் பெற்ற செல்வம் உள்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய்

Posted: 05 Jan 2014 11:13 PM PST

விஜய் சேதுபதி ஆரஞ்சு மிட்டாய் என்ற புதிய படத்தை தயாரித்து நடிக்கிறார்.

சூர்யா - வெங்கட்பிரபு படத்தின் பெயர் கல்யாணராமன்?

Posted: 05 Jan 2014 08:40 PM PST

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கயிருக்கும் புதிய படத்துக்கு கல்யாணராமன் என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிணி தீர்ந்தது, பணிக்கு திரும்பினார் இளையராஜா

Posted: 05 Jan 2014 08:26 PM PST

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளையராஜா நேற்று தனது உயிர் மூச்சான இசையமைக்கும் பணிக்கு திரும்பினார். நேற்று பிரசாத் ஸ்டுடியோவில் பாடல் கம்போஸிங்கில் ஈடுபட்டார்.

மன்சூரலிகானின் அதிரடி

Posted: 05 Jan 2014 07:47 PM PST

சென்டிமெண்ட் மண்டிக்கிடக்கும் தமிழ் சினிமாவில் பூனைகளை குறுக்கே ஓடவிட்டு படத்தை ஆரம்பித்தவர் மன்சூரலிகான். ஆளும் பேச்சும் கொஞ்சம் அப்படி இப்படி என்பதால் அவரின் இதுபோன்ற அதிரடிகளை அவ்வளவாக யாரும் பொருட்படுத்துவதில்லை.

பிப்.15 கோச்சடையான் பாடல்கள்

Posted: 05 Jan 2014 07:27 PM PST

பிப்ரவரி 15 ஆம் தேதி கோச்சடையான் படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online