Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


உயிர்மொழி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்

Posted: 25 Jan 2014 05:48 AM PST

ஏபிஎன் சித்தி வினாயகா பிக்சர்ஸ் வழங்கும் மானவ் புரொடக்சனின் உயிர்மொழி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். ராஜா என்பவர் இயக்கும் இந்தப் படத்தின் கதை விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.

பார்த்திபன், பியா நடிக்கும் இருமொழிப் படம்

Posted: 25 Jan 2014 04:50 AM PST

தமிழில் வெளியாகும் படத்தை மலையாள சேனல்கள் மலையாளத்தில் டப் செய்து ஒளிபரப்பும். ஆனால் திரையரங்குகளில் தமிழ்ப் படம் தமிழில்தான் திரையிடப்படும். தமிழ், மலையாளம் இருமொழிகளில் 2012 வரை எந்தப் படமும் தயாரானதாக (நமக்கு) நினைவில்லை.

ராஞ்சனாவுக்காக தனுஷுக்கு விருது

Posted: 25 Jan 2014 04:05 AM PST

நடித்த முதல் ஹிந்திப் படத்திலேயே ஃபிலிம்ஃபேர் விருதை தட்டி வந்துள்ளார் தனுஷ். ஆடுகளம் படத்திற்கு கிடைத்த தேசிய விருதும், கொலவெறி பாடலுக்கான தேசிய அளவிலான பிரபலமும் தனுஷுக்கு ஹிந்தி பட வாய்ப்பை கொண்டு வந்தது.

வெற்றிமாறன் ஐ.பி.எஸ். - தமிழனை துரத்தும் துரதிர்ஷ்டம்

Posted: 25 Jan 2014 02:58 AM PST

மோகன்லாலின் த்‌ரிஷ்யம் கேரள பாக்ஸ் ஆபிஸ் ச‌‌ரித்திரத்தையே மாற்றி எழுதியிருக்கிறது. பாலசந்தர் லால் போன்ற நடிகர்கள் உலகத்திலேயே மூணு நாலு பேர்தான் இருப்பார்கள் என பாராட்டுகிறார். இப்படியொரு சூழலில் திருஷ்டிப் பொட்டாக வந்தது ‌ஜில்லா.

முத்தத்தை மொத்தமாக தந்த நடிகை

Posted: 24 Jan 2014 11:08 PM PST

சுறா எஸ்.பி.ராஜ்குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டு(ம்) வந்திருக்கும் படம் பட்டைய கிளப்பணும் பாண்டியா. சுறாவில் இறைத்தது போல் கரன்சியை மீடியம் பட்ஜெட் படத்தில் வீணாக்க முடியாது. ஹீரோயின் தொடங்கி அனைத்திலும் இஷடப்பட்டதுக்கும் கஷ்டப்பட்டு தர வேண்டியநிலை. அப்படி அவர் ஒப்பந்தம் செய்தவர்தான் மனிஷா யாதவ்.

ஃபேண்டஸியாக உருவாகும் இந்திரஜித்

Posted: 24 Jan 2014 11:04 PM PST

இந்திரஜித் ராவணனின் மகன். சித்து வேலைகளில் கில்லாடி. ராமனுடனான இலங்கைப் போரில் இந்திரஜித் தனது மறைந்து தாக்கும் மாய வித்தைகளால் ராமனின் படைக்கு கடும் சேதத்தை விளைவித்தது புராணம். லக்ஷ்மணனை இரண்டு முறையும், ராமனை ஒருமுறையும் போரில் தோற்கடித்த மாவீரன்.

உதயநிதி தயாரிப்பில் சிவ கார்த்திகேயன்

Posted: 24 Jan 2014 10:55 PM PST

இந்த வருடத்தின் அதிர்ஷ்ட இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். அவரின் அதிர்ஷ்டம் 2013 லேயே ஆரம்பித்துவிட்டது. ஒரு கல் ஒரு கண்ணாடி வெற்றிக்குப் பிறகு ஒரு வருடம் இடைவெளிவிட்ட உதயநிதி தேர்வு செய்தது சுந்தரபாண்டியனை இயக்கி பிரபாகரனை. முதல் படம் வெளிவந்த உடனேயே ரெட் ஜெயண்ட் மாதிரியான நிறுனத்தில் இரண்டாவது படத்துக்கு அட்வான்ஸ் வாங்கிக் கொள்வது அபூர்வ நிகழ்வு.

ஹன்சிகாவின் பவர்

Posted: 24 Jan 2014 10:41 PM PST

மான் கராத்தே, வாலு படங்களில் நடித்து வரும் ஹன்சிகாவின் புதிய படம் பவர். இது தெலுங்கில் ரவி தேஜா நடிக்கும் புதிய படம். படங்களை இப்போதெல்லாம் தேர்வு செய்து நடிக்கிறார் ஹன்சிகா. ஹீரோ, கதை, கேரக்டர் மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனத்துக்கும் முக்கியத்துவம் தருகிறார். அந்தவகையில் ராக்லைன் வெங்கடேஷின் ராக்லைன் என்டர்டெயின்மெண்டுக்கு கால்ஷீட் தந்துள்ளார். இந்தப் படத்தில் ஹீரோவாக ரவி தேஜா நடிக்கிறhர்.

எல்லாமே வதந்திப்பா - விஜய் படம் பற்றி முருகதாஸ்

Posted: 24 Jan 2014 10:39 PM PST

விஜய் - முருகதாஸ் இணையும் புதிய படத்துக்கு மீடியா இரண்டு பெயர்கள் தந்திருக்கிறது. முதலில் அதிரடி பிறகு வாள். இந்த இரண்டுமே கிடையாது, ஏன்... படத்துக்கு இன்னும் பெயரே வைக்கலை, எல்லாமே வதந்திப்பா என்று ஒரே போடாக போட்டிருக்கிறார் முருகதாஸ். வேறெங்கே, சமூக வலைத்தளத்தில்தான்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online