Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


நானும் படம் இயக்கப் போறேன்

Posted: 21 Jan 2014 06:16 AM PST

ஒரு காலத்தில் காதல் நாயகன். இவரும் நதியாவும் சேர்ந்து நடிக்கும் போதெல்லாம், ஆஹா... என்ன ஒரு ஜோடி என்று தமிழகமே திருஷ்டி சுற்றியது. இருவரும் இரு துருவங்களாகி குழந்தை குட்டி என தனித்தனியே செட்டிலான பிறகு மீண்டும் நடிக்க வந்தார்கள். நதியாவுக்கு ஒன்றிரண்டு நல்ல படங்களாவது வாய்த்தது. ஆனால் இவருக்கு...?

சி.வி.குமா‌ரின் அடுத்த வெளியீடு தெகிடி

Posted: 21 Jan 2014 06:00 AM PST

தமிழ் சினிமாவில் சாதாரண கதையும் படமாகும், சாதாரண நடிகரும் ஹீரோவாவார் என புதிய பாதை காண்பித்தவர் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார். அட்டகத்தி, பீட்சா, சூது கவ்வும் என்று இவர் தொட்டதெல்லாம் வித்தியாசம். இவ‌ரின் அடுத்த வெளியீடு தெகிடி.

மீண்டும் மும்பை செல்லும் அஞ்சான் டீம்

Posted: 21 Jan 2014 04:30 AM PST

மும்பைக்கு ஃபிளைட் புக் செய்துவிட்டே இப்போது கதை கேட்கிறார்களோ என சந்தேகமாக இருக்கிறது. விஜய் மும்பை போகிறார்... அ‌‌ஜீத் போகிறார்... சூர்யா போகிறார்... ஏன் கமல்கூட போகிறார்... எல்லா ஸ்டார்களும் மும்பையில் லேண்ட் ஆவது படப்பிடிப்புக்காக.

விஜய் - முருகதாஸ் படத்தலைப்பு வாள்...?

Posted: 21 Jan 2014 04:03 AM PST

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் ‌பிப்ரவ‌ரி 3 ஆம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் தலைப்பு வாள் என்று செய்தி வெளியாகியுள்ளது.

குடியரசு தினத்தில் மூன்று படங்கள்

Posted: 21 Jan 2014 03:02 AM PST

குடியரசு தினமான ஜான்வ‌ரி 26 மூன்று படங்கள் வெளியாகின்றன. 2014 இரண்டு ஹிட்களுடன் தொடங்கியிருக்கிறது. டப்பா படம் என்றுதான் தி இந்து உள்ளிட்ட பத்தி‌ரிகைகள் ‌ஜில்லாவையும், வீரத்தையும் கழுவி ஊற்றின. ஆனால் அவர்களுக்கும் பொதுஜன ரசனைக்கும் நடுவே கிலோ மீட்டர் நீளம்.

விமல் படத்தின் தலைப்பு ஒரு ஊர்ல ரெண்டு ராஜா

Posted: 21 Jan 2014 01:50 AM PST

ஆர்.கண்ணன் இயக்கத்தில் விமல் நடிக்கும் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. புதிய பெயர், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. கண்டேன் காதலை, சேட்டை படங்களால் ஆர்.கண்ணனுக்கும் ‌ரீமேக் இயக்குனர் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது. அதை கிழித்து எறியும் நோக்கத்தில் ஒரு ஸ்கி‌ரிப்ட் தயார் செய்தார்.

வத்திக்குச்சி ஹீரோவின் குத்தூசி

Posted: 21 Jan 2014 01:38 AM PST

வத்திக்குச்சி படத்தில் அறிமுகமான திலீபன் அடுத்து குத்தூசி என்ற படத்தில் நடிக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து எங்கேயும் எப்போதும் படத்தை தயா‌ரித்த ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்தப் படத்தை இன்னும் சிறப்பாக தயா‌ரிப்பார் என்றே ரசிகர்களும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் நினைத்தனர்.

இளையராஜா பத்தி‌ரிகையாளர் சந்திப்பு - படங்கள்

Posted: 21 Jan 2014 12:29 AM PST

இளையராஜா நேற்று பத்தி‌ரிகையாளர்களை சந்தித்து தனது புகைப்பட கண்காட்சி குறித்து பேசினார். இளையராஜா சிறந்த புகைப்பட கலைஞர். இசை தவிர்த்து அவர் ஈடுபாடு காட்டும் ஒரே துறை இது. பலருக்கும் தெ‌ரியாத இந்த ரகசியம் கடந்த 15ஆம் தேதி வெளி உலகத்துக்கு தெ‌ரிய வந்தது.

மருத்துவமனையில் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்

Posted: 21 Jan 2014 12:18 AM PST

நேற்று முன் தினம் மூச்சுத் திணறல் காரணமாக பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

யுவன் இசையில் பாடல் எழுதும் வைரமுத்து

Posted: 20 Jan 2014 11:57 PM PST

முதல்முறையாக யுவன் ஷங்கர் ராஜா இசையில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். தமிழ் சினிமா ச‌ரித்திரத்தில் இதுவொரு முக்கியமான நிகழ்வு. ஈகோ யுத்தத்தில் இளையராஜாவும், வைரமுத்தும் பி‌ரிந்த பிறகு ராஜா குடும்பமும் பேரரசு குடும்பமும் ஒட்டாத தீவுகளாயின.

பாலசந்தரை பரவசப்படுத்திய படம்

Posted: 20 Jan 2014 11:42 PM PST

இயக்குனர் பாலசந்தர் பல படங்களை மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். கமலின் ஹேராம் படத்தைப் பார்த்தவர் மை டியர் ராஸ்கல் என்று உ‌ரிமையுடன் விளித்து ஒரு நீண்ட பாராட்டு கடிதம் எழுதினார். கமல் அதனை பிரேம் போட்டு பொக்கிஷமாக பாதுகாப்பது தனி கதை.

ஹவாய் பாரம்பரிய உடையுடன் கலக்கிய 80 களின் நட்சத்திரங்கள் - படங்கள்

Posted: 20 Jan 2014 10:30 PM PST

2009 ல் இருந்து வருடா வருடம் 80 களில் உச்சத்தில் இருந்த தென்னிந்திய நட்சத்திரங்கள் வருடம் ஒருமுறை ஒன்றுகூடி கும்மாளமிட்டு வருகிறார்கள். இந்த வருடம் சென்னையிலுள்ள மோகன்லாலின் பங்களாவில் இந்த சந்திப்பு நடந்தது.

வரலாறு முக்கியம் மாப்ளே

Posted: 20 Jan 2014 10:06 PM PST

கொடுத்த காசுக்கு மேலேயே நடித்து இம்சை அரசனாகிக் கொண்டிருக்கிறார் தம்பி ராமையா. இது அவருக்கும் அவரை இயக்குகிறவர்களுக்கும் சில நேரம் பார்க்கிற ரசிகர்களுக்குமே தெரிவதில்லை. இந்த அறியாமையில் வளர்கிறது அவரின் ஸ்டார் வேல்யூ.

பிப்ரவரி 03 முதல் விஜய், முருகதாஸ் படம்

Posted: 20 Jan 2014 09:47 PM PST

விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 03 ஆம் தேதி தொடங்குகிறது. தீனா, ரமணா, கஜினி, ஹிந்தி கஜினி என்று வெற்றி மேல் வெற்றியை குவித்து வந்த முருகதாஸின் ஓட்டத்தை 7 ஆம் அறிவு சின்னதாக தடை செய்தது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online