Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


சிறு பட்ஜெட் படங்கள் அதிகம் தயாராக வேண்டும்: அபிராமி ராமநாதன்

Posted: 08 Jan 2014 03:14 AM PST

முதல் மாணவன் என்ற பெயரில் புதுபடம் தயாராகியுள்ளது. இதில் கோபி காந்தி கதாநாயகனாக நடித்து தயாரித்து உள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா அபிராமி தியேட்டரில் இன்று காலை நடந்தது. இதில் தியேட்டர் அதிபர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் மற்றும் கலைப்புலி சேகரன், கலந்து கொண்டனர். அபிராமி ராமநாதன்

ஜில்லா படம் 1200 தியேட்டர்களில் ரிலீஸ்: பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி

Posted: 08 Jan 2014 02:42 AM PST

விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த ஜில்லா படம் வருகிற 10–ந்தேதி ரிலீசாகிறது. இப்படத்தை நேசன் இயக்கியுள்ளார். சூப்பர் குட்பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. சவுத்ரி தயாரித்துள்ளார். தணிக்கை குழுவினர் ஜில்லாவுக்கு 'யு' சான்றிதழ் அளித்துள்ளனர். டிக்கெட் முன்பதிவு துவங்கியுள்ளது. உலகம் முழுவதும் 1200 தியேட்டர்களில் ஜில்லா படம் திரையிடப்பட உள்ளது என்று ஆர்.பி.சவுத்ரி கூறினார்.

சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட இசைப்பிரியா வாழ்க்கை சினிமா படமாகிறது

Posted: 08 Jan 2014 02:30 AM PST

ஈழத்தில் சிங்கள ராணுவத்தால் கொடூரமாக கொல்லப்பட்ட இசைப் பிரியாவின் வாழ்க்கை சினிமாபடமாகிறது. இந்த படத்துக்கு போர்களத்தில் ஒரு பூ என பெயரிட்டுள்ளனர். கணேசன் இயக்குகிறார். இசைப்பிரியா வானொலியில் பணியாற்றியது. ஈழ விடுதலை போராட்டங்களில் பங்கேற்றது. சிங்கள ராணுவ வீரர்களிடம் சிக்கி சித்ரவதைகள் அனுபவித்து உயிர் இழந்தது போன்றவை இந்த படத்தில் காட்சி படுத்தப்படுகிறது.

ஒரு மாதத்துக்கு பின் அரசியல் கட்சியில் சேர முடிவு எடுப்பேன்: நடிகை நமீதா

Posted: 07 Jan 2014 10:59 PM PST

ஒரு மாதத்துக்கு பின் அரசியல் கட்சியில் சேர்வது குறித்து முடிவு எடுக்கப் போவதாக நமீதா அறிவித்துள்ளார். ஏற்கனவே தான் அளித்த பேட்டி திரித்து வெளியிடப்பட்டதாக கூறிய அவர் அரசியலில் ஈடுபடுவது எப்போது என்பத குறித்தும் ஆம் ஆத்மி கட்சி பற்றிய கருத்தையும் விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:– எனக்கு அரசியலில் ஆர்வம் உள்ளது. எந்த கட்சியில் இணையப் போகிறேன் என்பது பற்றி இப்போது சொல்ல முடியாது. இந்த மாதம்

7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தித்த நயன்தாரா–சிம்பு: சென்னையில் இன்று படப்பிடிப்பு

Posted: 07 Jan 2014 09:42 PM PST

நயன்தாராவும் சிம்புவும் 7 வருடங்களுக்கு பிறகு இன்று மீண்டும் சந்தித்தார்கள். பாண்டிராஜ் இயக்கும் படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியுள்ளது. சில தினங்களுக்கு முன் சிம்பு நடித்த காட்சிகள் மட்டும் படமானது. அப்போது நயன்தாரா ஐதராபாத்தில் வேறு படப்பிடிப்பில் இருந்தார். தற்போது நயன்தாரா மற்ற படவேலைகளை முடித்து விட்டு வந்துள்ளார். அவர் நடித்த காட்சிகளை சென்னையில் இரு தினங்களாக பாண்டிராஜ் படமாக்கினார். சிம்பு வெளிநாட்டில் இருந்து நேற்று சென்னை திரும்பினார். இன்று நயன்தாராவும் சிம்புவும் சேர்ந்து நடித்த காட்சிகளை பாண்டிராஜ் படமாக்கினார். இருவரும் 7 வருடங்களுக்கு பிறகு சேர்ந்து நடித்தார்கள்.

தற்கொலையில் மர்மம்: உதய்கிரண் மனைவியிடம் போலீசார் விசாரணை

Posted: 07 Jan 2014 09:38 PM PST

நடிகர் உதய்கிரண் தற்கொலையில் மர்மம் நீடிக்கிறது. தற்கொலைக்கான காரணங்களை அறிய பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். உதய்கிரண் தற்கொலைக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்ததே காரணம் என கூறப்பட்டது. தாயார் மரணம் அடைந்தது, தந்தை இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டது போன்றவற்றினாலும் அவர் மன அழுத்தத்தில் இருந்தார் என்றும் செய்திகள் பரவின.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online