Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


சல்மான்கானின் 2002-ம் ஆண்டு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது

Posted: 07 Jan 2014 03:53 AM PST

இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதி குடித்துவிட்டு மும்பையில் கார் ஓட்டியபோது பேக்கரி ஒன்றின் மீது இடித்தார். அப்போது பேக்கரியின் முன் படுத்திருந்த நபர் ஒருவர் பலியானார். அருகில் படுத்திருந்த மூன்று நபர்கள் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர். அலட்சியத்தினால் மரணத்தை ஏற்படுத்தியதாக அப்போது அவர் மீது வழக்கு போடப்பட்டது. 11 வருடங்கள் கழிந்த நிலையில் வழக்கறிஞர்கள் அவர் மீது படுகொலைக்கு இணையான குற்றம் என்ற பிரிவில் இந்த வழக்கினை

சினிமா வாய்ப்பு குறைந்ததால் நடிகர் உதய் கிரண் தற்கொலை: பரபரப்பு தகவல்கள்

Posted: 07 Jan 2014 02:36 AM PST

தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக திகழ்ந்த இளம் நடிகர் உதய் கிரண் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் இந்த துயர முடிவை தேடிக்கொண்டார். சித்திரம் என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான உதய்கிரண் நுவ்வுநேனு (நீயும், நானும்) உள்பட பல வெற்றி படங்களை கொடுத்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். மேலும் பொய், வம்பு சண்டை, பெண் சிங்கம் போன்ற தமிழ் திரை படங்களில் அவர் நடித்தார்.

உதய்கிரண் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது: குஷ்பு, பிரியாமணி பேட்டி

Posted: 07 Jan 2014 02:09 AM PST

பெண் சிங்கம், பொய், வம்பு சண்டை போன்ற தமிழ் படங்களில் நடித்த உதய் கிரண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தமிழ், தெலுங்கு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உதய் கிரகிரணுக்கு 33 வயதுதான் ஆகிறது. 19 தெலுங்கு படங்களில் நடித்து ஆந்திராவில் முன்னணி நடிகராக இருந்தார். ஐதராபாத், ஸ்ரீநகர் காலனியில் வசித்த அவர் நள்ளிரவு 12.15 மணிக்கு தூக்கில் தொங்கினார். அவர் தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. சமீபத்தில் அவர் நடித்து ரிலீசான சில படங்கள் தோல்வி அடைந்தன. அத்துடன் நிதி நெருக்கடி இருந்ததாகவும் கூறப்படுகிறது. குடும்ப

என்னை கவர்ந்தவர் அஜீத்– தமன்னா

Posted: 06 Jan 2014 11:53 PM PST

நடிகர் அஜீத் தன்னை மிகவும் கவர்ந்தார் என்றார் தமன்னா. இருவரும் ஜோடியாக நடித்த 'வீரம்' படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இந்தபடத்தில் தமன்னா கேரக்டருக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாயின. இதனை படத்தின் டைரக்டர் சிவா மறுத்தார். 'வீரம்' படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து தமன்னா அளித்த பேட்டி விவரம் வருமாறு:– நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கிறேன். வீரம் படத்தில் என் கேரக்டர் மிகவும் பிடித்தது. சிவா இயக்கிய சிறுத்தை படத்தில் ஏற்கனவே நடித்துள்ளேன். வீரம் படத்தின் கதையை அவர் என்னிடம்

விஜய்க்கு கேரளாவிலும் ரசிகர்கள் உள்ளனர்: அவர் கடின உழைப்பாளி- மோகன்லால் பாராட்டு

Posted: 06 Jan 2014 11:23 PM PST

விஜய், மோகன்லால் இணைந்து நடித்துள்ள 'ஜில்லா' படம் வருகிற 10–ந்தேதி ரிலீசாகிறது. இதில் நடித்த அனுபவங்கள் பற்றி மோகன்லால் கூறியதாவது:– ஜில்லா படத்தில் நடிக்க நான் சம்மதித்ததற்கு மூன்று காரணங்கள் உள்ளன. முதல் காரணம் விஜய். இரண்டாவது காரணம் படத்தை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ். மூன்றாவது முக்கிய காரணமாக இருப்பது படத்தின் டைரக்டர் நேசன். மலையாளத்தில் நான் பிசியாக நடித்துக் கொண்டு இருந்தபோது தேடிப்பிடித்து கதை சொன்னார். கதை நேர்த்தியாகவும் எனது கேரக்டர் வலுவாகவும் இருந்தது. எனவே சம்மதித்தேன்.

'டமால் டுமீல்' படத்தில் உஷா உதுப் பாடிய பாடல் இன்று வெளியீடு

Posted: 06 Jan 2014 10:28 PM PST

இசையமைப்பாளர் தமனின் புதிய படமான 'டமால் டுமீல்' படத்தின் பாடல்கள் தற்போது ஒலிப்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நடிகர் வைபவும், 'பீட்சா' படப்புகழ் ரம்யா நம்பீசனும் பிரதான வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தினை ஸ்ரீ இயக்கி வருகின்றார். பாடல் ஒலிப்பதிவு பற்றி ஸ்ரீ கூறுகையில், இந்தப் படத்தின் தலைப்புப் பாடலாகவும், விளம்பரப் பாடலாகவும் எழுதப்பட்ட ஒரு பாடலைப் பாட வித்தியாசமான குரல் வேண்டும் என்று தமனிடம் கூறினேன். இதனைக் கேட்ட அவர் இதற்காக பாடகி உஷா உதுப்பைத் தொடர்பு கொண்டுள்ளார். அந்தப் பாடலின் இசை வடிவத்தை அனுப்புமாறு கேட்டிருந்த

நான் வைத்திருந்த ‘காதல் இளவரசன்' பட்டத்தை ஆர்யாவுக்கு கொடுக்கிறேன் - கமல் ருசிகர பேச்சு

Posted: 06 Jan 2014 09:56 PM PST

பழைய நடிகர்களில் மறைந்த ஜெமினிகணேசனை காதல் இளவரசன் என்று அழைப்பது உண்டு. அதன் பிறகு கமலஹாசன் இந்த பட்டத்தை பெற்றார். தற்போது ஆர்யா கைக்கு அது மாறியுள்ளது. ஆர்யா நடிகைகளுடன் அடிக்கடி இணைத்து பேசப்படுகிறார். நயன்தாரா, டாப்சியுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். நடிகைகளை வீட்டுக்கு அழைத்து பிரியாணி விருந்து கொடுத்து காதல் வலையில் வீழ்த்துவதாக செய்திகள்

சினிமாவில் போலீஸ் கதைகள் வெற்றி பெறுகின்றன: டைரக்டர் பேரரசு பேச்சு

Posted: 06 Jan 2014 07:26 PM PST

ஜாக்கிசான் நடித்த 'போலீஸ் ஸ்டோரி 2013' படத்தின் 'டிரைலர்' வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவில், டைரக்டர் பேரரசு கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ''தமிழ் சினிமாவில், போலீஸ் கதைகள் எப்போதுமே வெற்றி பெற்று வருகின்றன. சிவாஜிகணேசன் நடித்த 'தங்கப்பதக்கம்,' ரஜினிகாந்த் நடித்த 'மூன்று முகம்,' கமல்ஹாசன் நடித்த 'காக்கி சட்டை,' விஜய் நடித்த 'போக்கிரி,' சூர்யா நடித்த 'காக்க காக்க' ஆகிய படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். போலீஸ் கதைகளை படமாக்கினால், குறைந்தபட்ச உத்தரவாதம் உறுதி.

திருமணத்தில் விருப்பம் இல்லை: நடிகர் சல்மான்கான் பேட்டி

Posted: 06 Jan 2014 07:23 PM PST

இந்தி நடிகர் சல்மான் கான் பல்வேறு நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டவர். 48 வயதான அவர் இது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று அவர் மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, திருமணம் பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:- எனக்கு திருமணத்திலோ அல்லது பெண் தோழிகளை வைத்து கொள்வதிலோ விருப்பம் கிடையாது. நான் தனிமையில் வாழவே விரும்புகிறேன். கடந்த 30 ஆண்டாக தனிமையில் வசித்தே பழகிவிட்டேன். தனிமையை தான் விரும்புகிறேன். தனிமையாக வசிப்பதால், செய்ய வேண்டியவற்றை யாருடைய குறுக்கீடும் இல்லாமல் செய்ய முடியும். அதை பற்றி விவரித்து கூற வேண்டியதில்லை. நான் யாரிடமும் பொய் பேச வேண்டிய அவசியமும்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online