Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


‘கோலி சோடா’ படத்தின் 2–ம் பாகத்தை எடுக்க திட்டம்: டைரக்டர் விஜய்மில்டன்

Posted: 30 Jan 2014 06:12 AM PST

'கோலி சோடா' சினிமா தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் பசங்க திரைப்படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். கோலி சோடா படம் ஈரோட்டில் ஸ்ரீனிவாசா, ஆனூர், அபிராமி தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15ல் ரிலீஸ் ஆகும் ‘அஞ்சான்’

Posted: 30 Jan 2014 03:55 AM PST

சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி, தயாரிக்கும் படம் 'அஞ்சான்'. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் இந்தி நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் இசையமைக்கிறார்

சிம்பு, நயன்தாரா காதல் கதையை படமாக்கவில்லை: பாண்டிராஜ்

Posted: 29 Jan 2014 10:23 PM PST

சிம்புவும் நயன்தாராவும் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் மீண்டும் ஜோடியாக நடிக்கின்றனர். இருவரும் 2006–ல் ரிலீசான வல்லவன் படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் சில மாதங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறு பாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரையும் மீண்டும் ஒன்றாக நடிக்க வைக்கிறார் பாண்டிராஜ்.

மோகன்லால்-ரம்யா நம்பீசனுக்கு அட்லஸ் கேரள பிலிம் விருது

Posted: 29 Jan 2014 10:02 PM PST

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ரம்யா நம்பீசனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. திரிஷியம் படத்தில் நடித்ததற்காக மோகன்லாலுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள 'அட்லஸ் கேரள பிலிம் விருது' அமைப்பு சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது. வருகிற ஏப்ரல் மாதம் கொச்சியில் நடக்கும் விழாவில் விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘குறோணி’ படத்தை இயக்கும் நடிகர் டேனியல் பாலாஜி

Posted: 29 Jan 2014 09:20 AM PST

தமிழில் 'காக்க காக்க', 'காதல் கொண்டேன்', 'பொல்லாதவன்', 'வேட்டையாடு விளையாடு', ஆகிய படங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தவர் டேனியல் பாலாஜி. அவர் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் 'வை ராஜா வை' என்ற படத்திலும் ஒரு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது

இந்தியில் வெளியான 'டி டே' படம் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட ஸ்ருதி ஹாசன் எதிர்ப்பு

Posted: 29 Jan 2014 09:12 AM PST

கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் 'டி டே'. இதில் பாலியல் தொழிலாளியாக ஸ்ருதிஹாசன் துணிச்சலுடன் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த காட்சிகள் மும்பை ரசிகர்களை அதிர வைத்தது. இப்படத்தை நிகில் அத்வானி டைரக்ட் செய்திருந்தார். சங்கர் இஷான் லாய் இசை அமைத்திருந்தார். தற்பொழுது இப்படத்தை

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online