Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


சங்கரின் 'ஐ' படத்தை தவறவிட்ட ஜீவா

Posted: 29 Jan 2014 08:57 AM PST

சமீபத்தில் வெளியான 'என்னென்றும் புன்னகை' படம் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் உள்ளார் ஜீவா. இவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம் 'யான்'. இதில் இவருக்கு ஜோடியாக 'கடல்' படத்தில் நடித்த துளசி நாயர் நடிக்கிறார். இப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார். இப்படத்தில் நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட சிம்பு

Posted: 29 Jan 2014 08:04 AM PST

நயன்தாராவை சிம்பு திருமணம் செய்து கொண்ட தகவல் உண்மையே. இது சூடான தகவல் அல்ல ஆனால் சுவையானது. பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்புவும் நயன்தாராவும் எட்டு வருடங்களுக்கு பின் இணைந்து நடித்து வருகிறார்கள். இதில் திருமண காட்சி இடம் பெற உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது இருவருக்கும் திருமணம் நடந்த புகைப்படம்

கவிஞர் பிறைசூடனின் மகன் இசையமைப்பாளராக அறிமுகமாகும் படத்தின் இசை வெளியீடு

Posted: 29 Jan 2014 02:33 AM PST

எண்பதுகளின் இறுதியிலும் தொண்ணூறுகளின் இறுதியும் அதிகமான திரை இசைப் பாடல்களை எழுதியவர் கவிஞர் பிறைசூடன். இவருடைய மகன் தயானந்த் பிறைசூடன் தற்போது இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். புதுமுக இயக்குனர் கீர்த்தி குமார் இயக்கும் 'ஒரு மோதல் ஒரு காதல்' என்ற படத்திற்குத்தான் இவர் இசையமைக்கிறார். இப்படத்தின் இயக்குனர் லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேசன் முடித்துவிட்டு, விளம்பரத் துறையில் 5 வருட காலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இப்படத்தின் கதாநயகனாக விவேக் என்பவர் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே 'சூரிய நகரம்', 'நாங்க' போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் வெளியாகும் ஜாக்கிசானின் போலீஸ் ஸ்டோரி

Posted: 29 Jan 2014 01:18 AM PST

ஜாக்கிசானின் அதிரடி ஆக்ஷனில் தயாராகி உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்துள்ள படம் போலீஸ் ஸ்டோரி. இதுவரை இப்படத்தின் ஆறு பாகங்கள் வந்துள்ளது. 6–வது பாகமாக உருவான 'நியூ போலீஸ் ஸ்டோரி 2013' படம் கடந்த டிசம்பரில் சீனாவில் ரிலீசாகி சக்கைபோடு போட்டது. அங்கு மட்டும் ரூ.400 கோடி வசூல் ஈட்டியது. இப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்து சுரபி பிலிம்ஸ் சார்பில் மோகன் அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். போலீஸ் அதிகாரியான ஜாக்கிசான் மகன் உள்பட 33 பேரை தீவிரவாதிகள் கடத்தி பிணையகைதிகளாக அடைத்து வைக்கின்றனர். அங்கு ஜாக்கிசான் கைதிபோல் ஊடுருவி வில்லன்களை துவம்சம் செ

டென்மார்க் பேட்மின்டன் வீரருடன் டாப்சி திருமணம்?

Posted: 29 Jan 2014 01:00 AM PST

டென்மார்க் பேட்மின்டன் வீரர் மத்தியாஸ் போய்க்கும் நடிகை டாப்சிக்கும் திருமணம் நடக்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் ஏற்கனவே ஒன்றாக சுற்றினர். விருந்துகளிலும் ஜோடியாக பங்கேற்றார்கள். இதுபற்றி கேட்ட போது நண்பர்களாக பழகுகிறோம் என்றனர். ஆனால் கடந்த சில நாட்களாக இவர்களிள் நெருக்கம் வலுவாகியுள்ளதாக பட உலகினர் கிசுகிசுக்கிறார்கள். டாப்சி இந்தியில் சாதி டாட் காம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சண்டிகாரில் நடந்தது அவரை காண மத்தியாஸ் போய் டென்மார்க்கில் இருந்து விமானத்தில் பறந்தோடி வந்தா

25-வது குழந்தையை தத்தெடுத்த ஹன்சிகா

Posted: 28 Jan 2014 11:03 PM PST

நடிகைகள் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டுகின்றனர். நமீதா ஏழைகளுக்கு உதவிகள் செய்கிறார். பெண்களுக்கு பொது இடங்களில் சொந்த செலவில் கழிப்பிடங்கள் கட்டி கொடுத்தார். திரிஷா பிராணிகள் நல பாதுகாப்பு அமைப்பில் சேர்ந்து தெருவோர நாய்களை பிடித்து குளிப்பாட்டி சுத்தப்படுத்தி வளர்க்கிறார். அவற்றை தத்து கொடுக்கவும் செய்கிறார். பிறந்த நாட்களை ஆதரவற்ற குழந்தைகளுக்கு துணிமணிகள், பரிசு பொருட்கள் கொடுத்து கொண்டாடுகிறார். ஹன்சிகா ஆதரவற்ற

சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக தீபிகாபடுகோனே?

Posted: 28 Jan 2014 10:50 PM PST

விஜய் ஜில்லா படத்துக்கு பின் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இருவரும் துப்பாக்கி ஹிட் படத்துக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்துக்கு பின் சிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என செய்தி வெளியாகியுள்ளது. சிம்புதேவன் ஏற்கனவே இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற ஹிட் படத்தை டைரக்டு செய்தவர். கதை விஜய்க்கு பிடித்ததால் அவர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டதாக கூறப்படுகிறது. ஏ.ஆ

23 வருடத்துக்கு பிறகு மீண்டும் நடிக்கும் ரஞ்சனி

Posted: 28 Jan 2014 10:27 PM PST

1980–களில் முன்னணி நடிகையாக கலக்கியவர் ரஞ்சனி. முதல் மரியாதை படத்தில் அறிமுகமானார். கடலோர கவிதைகள், மண்ணுக்குள் வைரம் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தார். மலையாளத்திலும் 20–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ரஞ்சனி கடைசியாக நடித்த சார் ஐ லவ்யு படம் 1991–ல் ரிலீசானது. அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

ஆக்ஷனுக்கு மாறும் நயன்தாரா: சண்டை காட்சிகளில் நடிக்கிறார்

Posted: 28 Jan 2014 09:36 PM PST

சினிமாவில் விஜயசாந்தி ஆக்ஷன் நடிகையாக கருதப்பட்டார். இவர் நடித்த 'வைஜெயந்தி ஐ.பி.எஸ்.' படத்தில் அதிரடி சண்டை போட்டார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. இதேபடத்தை 'பவானி' என்ற பெயரில் ரீமேக் செய்து சினேகா நடித்தார். இவரும் தாவி குதித்து சண்டைபோட்டு ஆக்ஷன் நடிகை என்ற அடையாளத்தை பெற்றார். இவர்களுக்கு பிறகு அனுஷ்கா ஆக்ஷன் வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ரிலீசான 'இரண்டாம் உலகம்' படத்தில் வாளை அபாரமாக சுழற்றி சண்டை போட்டார். 'ருத்ரமாதேவி' படத்திலும் மகாராணி வேடத்தில் சண்டை காட்சிகளில் நடித்து வருகிறார். வாள் சண்டை, குதிரையேற்றம் போன்றவற்றில் பயிற்சிகள் எடுத்து இதில் நடிக்கிறார்.

புற்றுநோயால் இறந்த இராசுமதுரவனின் 'சொகுசு பேருந்து' படத்தின் இசை வெளியீடு-திரை உலகமே திரண்டது

Posted: 28 Jan 2014 09:33 AM PST

தமிழில் 'பூ மகள் ஊர்வலம்', 'மாயாண்டி குடும்பத்தார்', 'கோரிப்பாளையம்', 'பாண்டி ஒலிபெருக்கி நிலையம்' போன்ற படங்களை இயக்கி, மண்மனம் மாறாத குடும்ப பாங்கான கதையம்சம் உள்ள படங்களை எடுத்து பிரபலம் ஆனவர் இராசுமதுரவன். இவர் கடைசியாக 'சொகுசு பேருந்து' என்ற படத்தை இயக்கி வந்தார். படப்பிடிப்பின் போது வாய்புற்று நோய் காரணமாக இயற்கை ஏய்தினார். இந்நிலையில்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online