Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


தனுஷுக்கு வில்லனாகிறார் கார்த்திக்!

Posted: 27 Jan 2014 06:45 AM PST

2012-ஆம் ஆண்டு வெளியான 'மாற்றான்' படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படம் 'அனேகன்'. இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். நாயகியாக அமிரா தஸ்தூர் நடிக்கிறார். 'அனேகன்' என்றால் உருவத்தில் ஒன்றானவன், வீரத்தில் பலவானவன் என்று பொருளாம். அதற்கேற்றார்போல் இப்படத்தில் தனுஷ் சென்னையில் வாழும் சேரி பையனாகவும், சுருட்டை முடியுடனும், கராத்தே வீரராகவும், ஸ்டைலிஷ் தோற்றத்துடனும் வருகிறார். இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் கார்த்திக் வில்லனாக நடிக்கிறாராம்.

பார்த்திபன் படத்தில் விஜய்சேதுபதி!

Posted: 27 Jan 2014 06:05 AM PST

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' என்ற வித்தியாசமான தலைப்பில் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருக்கிறாராம். இதுகுறித்து பார்த்திபன் கூறும்போது, 'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்ட மறுநாளே படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் சேதுபதி வந்து நின்றார். மன்னிக்கவும், உட்கார்ந்தார். அதுவும் காரில் வந்தால் ரொம்ப நேரம் ஆகிவிடும் என்பதால் பைக்கிலேயே வந்தார்.

அரண்மனை அரங்கில் மகாராணி வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா

Posted: 27 Jan 2014 05:21 AM PST

தெலுங்கில் 'ருத்ரமாதேவி' படத்துக்காக பிரமாண்ட அரண்மனை அரங்குகள் அமைத்து அனுஷ்கா நடிக்கும் காட்சிகளை படமாக்குகின்றனர். சரித்திர கதையம்சத்தில் இப்படம் தயாராகிறது. 'ருத்ரமாதேவி' மகாராணியின் வீர வரலாறு இதில் காட்சிபடுத்தப்படுகிறது. ருத்ரமா தேவி வேடத்தில் அனுஷ்கா நடிக்கிறார் வாள் சண்டைகள், குதிரையேற்றம் பயிற்சிகள் பெற்று இதில் நடிக்கிறார். 3டியில் இப்படம் தயாராகிறது. இந்திய திரைப்பட வரலாற்றில் 3 டியில் தயாராகும் முதல் சரித்திர படம் இதுவாகும். இப்படத்துக்காக ஐதராபாத்தில் உள்ள ராமா நாயுடு கோபனபள்ளி

கவிஞர் விக்ரமாதித்யனுக்கு இந்த ஆண்டுக்கான ‘சாரல் விருது’ வழங்கப்பட்டது

Posted: 27 Jan 2014 05:16 AM PST

பிரபல விளம்பரப்பட இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரியின் தந்தையர் ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பில் இந்த ஆண்டுக்கான சாரல் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்பட்டது. சென்னை அண்ணா சாலையில் உள்ள புக் பாயிண்ட் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது. செல்வி மிருதுளாவின் பாடலுடன் தொடங்கிய விருது விழாவில் இயக்குனர் ஜேடி சுருக்கமாக வரவேற்புரையாற்றினார். அடுத்து கவிஞர் ஞானக்கூத்தன் பேசியபோது, கவிஞர் விக்ரமாதித்யன் எண்பதுகளில் இலக்கிய விழாக்களில் ஒரு கலகக்காரராக பார்க்கப்ப்டடார். ஒரு கவிஞனை முதலில் அவனது குடும்பம் அங்கீகரிக்கவேண்டும், அதற்காகவாவது இதுபோன்ற பாராட்டு விழாக்கள் நடைபெற வேண்டும் என்று கூறினார்.

ரஜினி, கமல், விஜய் படங்களை டப்பிங் செய்ய எதிர்ப்பு: கன்னட நடிகர், நடிகைகள் மைசூரில் போராட்டம்

Posted: 27 Jan 2014 03:37 AM PST

தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடும் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, விக்ரம், விஷால் போன்றோரின் படங்கள் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு கர்நாடகாவில் வெளியிடப்பட்டு வருகிறது. இதுபோல் தெலுங்கு படங்களும் கன்னடத்தில் டப்பிங் செய்யப்படுகின்றன. தமிழ், தெலுங்கு டி.வி. தொடர்களும் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அங்குள்ள டெலிவிஷன்களில் ஒளிபரப்பப்படுகின்றன. இதனால் நேரடியாக ரிலீசாகும் கன்னட படங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கன்னட திரையுலகினர்கள் எதிர்க்கிறார்கள். டப்பிங் படங்கள் ஒரிஜினல் கன்னட படங்களைவிட அதிக நாட்கள் ஓடி வசூல் குவிப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே பிற மொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கன்னட நடிகர், நடிகைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் பிந்துமாதவி

Posted: 27 Jan 2014 03:21 AM PST

நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசை என்று நடிகை பிந்துமாதவி கூறினார். காட்பாடியில் நேற்று நடிகை பிந்துமாதவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– நான் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பி.டெக். படித்தேன். என்னுடைய சொந்த ஊர் ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்த மதனப்பள்ளி ஆகும். என்னுடைய தந்தை பாஸ்கர் ரெட்டி, வணிகவரித்துறையில்

எல்.ரெட்குமார் தயாரிக்கும் புதிய படம் ‘யாமிருக்க பயமே’

Posted: 27 Jan 2014 02:46 AM PST

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'நீதானே என் பொன்வசந்தம்' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் தற்போது ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் 'யான்' படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து கே.வி.ஆனந்திடம் இணை இயக்குனராக பணியாற்றிய டீ.கே. என்பவர் இயக்கும் புதிய படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஆதவ் கண்ணதாசன், கருணா மற்றும் ஓவியா ஆகியோர் நடிக்கின்றனர்.

2014 கிராமி விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்பு

Posted: 27 Jan 2014 01:37 AM PST

இசைத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் 'கிராமி விருது' ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 56-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரிலுள்ள ஸ்டேப்பில்ஸ் அரங்கில் இன்று நடைபெற்றது. 'ஸ்லம்டாக் மில்லினியர்' படத்திற்காக 2 ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ள இந்திய இசையமைப்பாளரான ஏ.ஆர். ரகுமான் இந்த கிராமி விருதினை ஏற்கனவே இரண்டு முறை பெற்றுள்ளார். இன்று நடைபெற்ற 56-வது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் 'மெட்ராஸின் மொஸார்ட்' என்றழைக்கப்படும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

இயக்குனர் விஜயின் ‘சைவம்’ படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகன்

Posted: 27 Jan 2014 01:27 AM PST

'தலைவா' படத்திற்கு பிறகு 'சைவம்' என்ற படத்தை தயாரித்து, இயக்கி வருகிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய். இப்படத்தில் நாசரின் மகனான லுப்துபுதீன் அறிமுகமாகிறார். தன்னுடைய படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகனுக்கு சரியான திரைப்பெயர் சூட்ட விரும்பிய விஜய், பல்வேறு பரிசீலனைக்கு பிறகு நாசர் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோரின் உதவியோடு பாட்ஷா என்று பெயரிட்டுள்ளார். இதுகுறித்து இயக்குனர் விஜய் கூறும்போது, என்னுடைய படங்களில் எப்போதுமே நாசர் சாருக்கு பொருத்தமான ஒரு கதாபாத்திரம் இருக்கும். அது நான் அவருடைய தீவிர ரசிகர் என்பதால் மட்டுமல்ல அவர் எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும் அதற்கு ஜீவன் கொடுப்பவர்.

பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நயன்தாரா–சிம்பு திருமண காட்சி

Posted: 27 Jan 2014 12:06 AM PST

பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நயன்தாரா– சிம்பு திருமண காட்சி இடம் பெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே ராஜா ராணி படத்தில் கிறிஸ்தவ முறைப்படி ஆர்யாவும், நயன்தாராவும் திருமணம் செய்வது போல் காட்சி வைக்கப்பட்டது. அதை போஸ்டராக அச்சிட்டு வெளியிட்டும் படத்துக்கு விளம்பரம் தேடினர். அது போல் இந்த படத்தில் காட்சி வைக்கிறார்கள். சிம்புவும், நயன்தாராவும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்வது போல்

மீண்டும் சினிமாவில் நடிக்க தீவிரம்: நமீதா 25 கிலோ எடை குறைத்தார்

Posted: 26 Jan 2014 10:50 PM PST

நமீதா 25 கிலோ எடை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகிறார். நமீதா 2002–ல் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் பிசியாக நடித்தார். 2010–ல் வெளியான இளைஞன் படத்தில் வில்லியாக வந்தார். உடம்பு குண்டானதால் கதாநாயகி வாய்ப்பு வரவில்லை. எடையை குறைத்து மீண்டும் கதாநாயகியாக நடிப்பேன் என்று கூறி வந்தார். கடந்த

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online