Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


தமிழில் வரும் ஹாலிவுட் குழந்தைகள் படம்

Posted: 24 Jan 2014 02:48 AM PST

சிறுவர்கள் சாகச படமாக ஹாலிவுட்டில் தயாரான 'என்டர்ஸ்கேம்' என்ற ஆங்கில படம் தமிழில் வருகிறது. பிரபல எழுத்தாளர் ஆர்சன் கார்ட் நாவலை மையமாக வைத்து கேவின் ஹுட் இப்படத்தை நவீன தொழில் நுட்பத்தில் இயக்கியுள்ளார். என்டர் என்ற தைரியசாலி சிறுவனின் பராக்கிரமம் நிறைந்த சாகசங்களே கதை. இதில் நாயகனாக வரும் 13 வயது சிறுவனுக்கு மனதில் நினைப்பதை செய்யும் சக்தி உருவாகிறது. அவனுக்கு ராணுவ பள்ளியில் பயிற்சி அளிக்கின்றனர். வேற்று கிரக மனிதர்கள் பூமி மேல் படையெடுக்க தயாராகிறார்கள்.

மம்முட்டி ஜோடியாகும் மீனா

Posted: 24 Jan 2014 02:30 AM PST

மீனா மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்த திரிஷ்யம் படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. இதையடுத்து அவருக்கு மலையாள படவாய்ப்புகள் குவிகின்றன. மம்முட்டி ஜோடியாக நடிக்க தேர்வாகியுள்ளாராம். பிருதிவிராஜ் படமொன்றிலும் நடிக்க பேசி வருகின்றனர். தமிழ் படங்களில் நடிக்கவும் அழைக்கிறார்கள். மூத்த நடிகர்களுக்கு

சினிமாவை விட்டு நஸ்ரியா விலகல்?

Posted: 24 Jan 2014 01:50 AM PST

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக நஸ்ரியா திட்டமிட்டுள்ளதாக மலையாள பட உலகில் செய்தி பரவி உள்ளது. 'நேரம்', 'ராஜாராணி', 'நய்யாண்டி' போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமான நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மலையாள நடிகர் பகத் பாசிலை மணக்கிறார். இவர் பிரபல மலையாள டைரக்டர் பாசிலின் மகன் ஆவார். இருவரும் மலையாள படமொன்றில் இணைந்து நடித்தபோது காதல் வயப்பட்டனர். திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார்கள். இரு வீட்டு பெற்றோரும் இவர்கள் காதலை ஏற்றுக் கொண்டார்கள். ஆகஸ்டில் திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய்

Posted: 24 Jan 2014 01:03 AM PST

'ஜில்லா' படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்கிறார் விஜய். இதில் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் துவங்கியுள்ளது. 'வாள்' என இதற்கு பெயரிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படத்துக்கு பிறகு விஜய் தனது மக்கள் தொடர்பாளர் பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சிம்புதேவன் இயக்குகிறாராம். இவர் 'இம்சை அரசன் 23–ம் புலிகேசி', 'அறை என் 305–ல் கடவுள்',

திலீப்பை நிரந்தரமாக பிரியும் மஞ்சுவாரியர்

Posted: 23 Jan 2014 11:36 PM PST

மலையாள நடிகர் திலீப்புக்கும், நடிகை மஞ்சு வாரியருக்கும் 1998–ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மீனாட்சி என்ற பெண் குழந்தை உள்ளது. மஞ்சு வாரியருக்கும் திலீப்புக்கும் சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். இருவரும் தனித்தனியாக வசித்து வருகிறார்கள். மஞ்சுவாரியர் சினிமாவில் நடிக்ககூடாது என்று திலீப் தடை போட்டு இருந்தார். அதை மீறி சினிமாவில் அவர் நடித்து வருகிறார். பரதநாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். இருவருக்கும் சமரசம் ஏற்படுத்த சிலர் முயற்சித்தனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இருவரும் நிரந்தரமாக பிரிய முடிவு செய்துள்ளார்கள். விவாகரத்து செய்து கொள்ளவும்

வாணி கபூருக்கு ‘மொளகா பஜ்ஜி’ என பெயர் சூட்டிய சிம்ரன்

Posted: 23 Jan 2014 09:31 PM PST

இந்தியில் மிகச் சிறந்த காதல் படங்களை தொடர்ந்து தயாரித்து வெற்றி வாகை சூடிய யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தங்களது முதல் தமிழ் படமான 'ஆஹா கல்யாணம்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தமிழ் சினிமாவில் கண்டிராத வகையில் மிகப் பிரம்மாண்டமாக நடத்தினர். கதாநாயகன் நானியுடன் நாயகி வாணி கபூர், இயக்குனர் கோகுல் கிருஷ்ணா, இசை அமைப்பாளர் தரன் மற்றும் திரை உலகத்தின் முன்னோடிகள் முன்னிலையில் இந்த விழா விமரிசையாக நடந்தது. படத்தின் தலைப்புக்கேற்ப இந்த விழா ஒரு திருமணம் போலவே கோலாகாலமாக நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

Posted: 23 Jan 2014 01:42 PM PST

நடிகர் ரஜினிகாந்த், அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் திருமலைக்கு வந்தனர். திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினர். அவர்கள் 2 பேரும் இரவு சுமார் 7.45 மணியளவில் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர். அவர்களை தேவஸ்தான அதிகாரிகள், கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் வரவேற்றனர். இரவு சுமார் 8.35 மணியளவில் நடிகர் ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்குள் உள்ள ரங்கநாயக்கர் மண்டபத்தில் அவர்களுக்கு லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமிபடம் ஆகியவை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online