Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


சிவாஜி சிலையை அகற்றுவது தொடர்பாக அரசு நல்ல முடிவு எடுக்கும்: சிவாஜி மகன்கள் நம்பிக்கை

Posted: 23 Jan 2014 05:58 AM PST

சென்னை ஐகோர்ட்டில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் சென்னை மெரினா கடற்கரை எதிரே வைக்கப்பட்டள்ள சிவாஜி கணேசன் சிலை சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே, அந்த சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

ஒரு பாடல் முழுக்க விதார்த்துக்கு முத்தம் கொடுத்த மனிஷா யாதவ்

Posted: 23 Jan 2014 02:17 AM PST

விதார்த், சூரி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'பட்டையக் கௌப்பணும் பாண்டியா'. இப்படத்தில் விதார்த்துக்கு ஜோடியாக மனிஷா யாதவ் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளிவந்த 'சுறா' படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் இயக்குகிறார். அருள் தேவ் இசையில் வெளிவந்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இவ்விழாவில், இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், தயாரிப்பாளர் கேயார், நடிகர்கள் ராதாரவி, விதார்த், சூரி, நடிகை மனிஷா ஜித் உள்ளிட்ட திரையுலக கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

மீண்டும் உதயநிதியுடன் ஜோடி சேரும் நயன்தாரா

Posted: 23 Jan 2014 01:36 AM PST

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் வெளிவர உள்ள 'இது கதிர்வேலன் காதல்' படத்தை 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' சார்பில் தயாரித்து வரும் உதயநிதி ஸ்டாலின், இப்படத்திற்கு பிறகு 'நண்பேன்டா' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தை உதயநிதி நடிப்பில் வெளிவந்து ஹிட்டான 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தை இயக்கிய எம்.ராஜேஷிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஏ.ஜெகதீஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் உதயநிதி கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும்

படப்பிடிப்பில் விபத்து: நடிகர் ஷாருக்கானுக்கு மருத்துவமனையில் சிகிச்சை

Posted: 23 Jan 2014 01:15 AM PST

நடிகர் ஷாருக்கான இந்தியில் 'ஹேப்பி நியூ இயர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். மேலும், அபிஷேக் பச்சன், போமன் இரானி, சோனு சூத் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தை பாலிவுட்டின் பிரபல இயக்குனரான பராகான் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூஹு பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இன்று காலை நடந்தது. இதில், ஷாருக்கான் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது, படப்பிடிப்பில் வைக்கப்பட்டிருந்த ஒரு கதவு ஷாருக்கான் மேல் திடீரென விழுந்தது.

நாகேஸ்வர ராவ் உடலுக்கு நடிகர், நடிகைகள் அஞ்சலி: அரசு மரியாதையுடன் இன்று மாலை இறுதி சடங்கு

Posted: 22 Jan 2014 11:59 PM PST

நாகேஸ்வரராவ் உடலுக்கு இன்று மாலை அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடக்கிறது. தமிழ், தெலுங்கில் 1953–ல் வெளியான தேவதாஸ் படத்தில் நடித்து புகழ்பெற்ற நாகேஸ்வரராவ் ஐதராபாத்தில் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தியில் 256 படங்களில் நடித்துள்ளார். தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர். நாகேஸ்வரராவ் உடல் ஐதராபத்ததில் உள்ள அவருக்கு சொந்தமான ஸ்டூடியோவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல் மந்திரி கிரண்குமார்ரெட்டி, எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்

யுவன்சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதுவது காலத்தின் விருப்பம்: கவிஞர் வைரமுத்து பேட்டி

Posted: 22 Jan 2014 12:43 PM PST

டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், சீனுராமசாமி டைரக்டு செய்யும் இடம் பொருள் ஏவல் என்ற படத்தில், முதல்முறையாக கவிஞர் வைரமுத்துவுடன் இணைகிறார், இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா. இளையராஜாவை பிரிந்து வந்த 28 ஆண்டுகளுக்குப்பின், கவிஞர் வைரமுத்து அவரது மகன் யுவன்சங்கர்ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. படத்தில் இடம்பெறும் 5 பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதுகிறார். இதுபற்றி வைரமுத்து அளித்த பேட்டி விவரம் வருமாறு: கேள்வி:- யுவன்சங்கர்ராஜாவுடன் நீங்கள் இணைவது காலத்தின் கட்டாயமா? பதில்: இல்லை. காலத்தின் விருப்பம். கேள்வி:தந்தையோடு சேராத நீங்கள் மகனோடு எப்படி சேர்கிறீர்கள்? பதில்: தந்தை என்று சொல்லிப்பாருங்கள். உதடுகள் சேர்வதில்லை. மகன் என்று சொல்லிப்பாருங்கள். முதல் எழுத்திலேயே உதடுகள் சேரும்.

திருமணத்திற்க்கு பிறகு நடிப்பது பற்றி முடிவு செய்யவில்லை: நடிகை நஸ்ரியா

Posted: 22 Jan 2014 12:08 PM PST

நடிகை நஸ்ரியாவுக்கும், டைரக்டர் பாசில் மகன் பகத் பாசிலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இவர்களது திருமணம் வருகிற ஆகஸ்டு மாதம் 2–வது வாரத்தில் கேரளாவில் நடக்கிறது. நடிகை நஸ்ரியா, கேரளாவை சேர்ந்தவர்.'நேரம்' படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, 'ராஜாராணி' படத்தில் ஆர்யா ஜோடியாகவும், 'நய்யாண்டி' படத்தில் தனுஷ் ஜோடியாகவும் நடித்தார். பகத் பாசில் மலையாள பட உலகில் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். நஸ்ரியாவும், பகத்தும் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள். இருவரும், 'எல் பார் லவ்' என்ற மலையாள படத்தில் ஜோடியாக நடித்து வந்தார்கள்.திருமணத்திற்க்கு பிறகு பகத் நான் படங்களில் நடிக்க தடையாக இருக்கமாட்டார் என்று நடிகை நஸ்ரியா கூறி உள்ளார்.

நடிகை அஞ்சலி மீதான வழக்கு 10–ந் தேதிக்கு தள்ளிவைப்பு

Posted: 22 Jan 2014 11:24 AM PST

அங்காடித்தெரு,எங்கேயும் எப்போதும் உள்பட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர், தனது சித்தி பாரதிதேவியும், டைரக்டர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறி இருந்தார்.இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும், பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் எனவும் கூறி டைரக்டர் களஞ்சியம் தரப்பில் அவரது வக்கீல்கள் ஜெயபிரகாஷ், சுரேஷ்பாபு ஆகியோர் சைதாப்பேட்டை பெருநகர 17–வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online