Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


மலையாளத்தில் வெற்றிபெற்ற மோகன்லால் படம் தமிழில் டப்பிங் ஆகிறது

Posted: 22 Jan 2014 03:37 AM PST

மலையாளத்தில் 'கர்மயோதா' என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'வெற்றிமாறன் ஐ.பி.எஸ்.' என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இப்படத்தில் மோகன்லால் அதிரடி போலீஸ் அதிகாரி வெற்றிமாறனாக நடித்திருக்கிறார். மேலும், சோனா, சாய்குமார், ரியாஸ்கான்,

‘ஏய், ஜீன்ஸ், மன்மதன், கலகலப்பு’ 4 படங்களின் 2–ம் பாகம் தயாராகிறது

Posted: 22 Jan 2014 03:31 AM PST

ஹிட்டான படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் மோகம் தமிழ் பட உலகில் பரவி வருகிறது. அஜீத் நடித்த பில்லா படத்தின் இரண்டாம் பாகம் பில்லா–2 என்ற பெயரிலும், சூர்யா நடித்த சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் சிங்கம்–2 என்ற பெயரிலும் வந்தது. நான் அவனில்லை, பீட்சா படங்களின் இரண்டாம் பாகமும் வெளிவந்தன. தற்போது

தமிழில் வரும் ஹாலிவுட் படம்

Posted: 22 Jan 2014 03:21 AM PST

ஹாலிவுட்டில் தயாரான 'பொம்பெய்' ஆங்கில படம் தமிழில் வருகிறது. பொம்பெய் எனப்படும் நிலப்பரப்பொன்றின் அருகில் ஒரு எரிமலை வெடித்து சிதற தயாராகிறது. அது வெடித்தால் பெரிய அழிவு ஏற்படும் ஆபத்து. அடுத்து வரும் 1500 ஆண்டுகளுக்கு அப்பகுதியில் புழு, பூச்சி கூட உருவாகாது. வெடிக்கும்

பழம்பெரும் நடிகர் நாகேஸ்வர ராவ் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

Posted: 22 Jan 2014 02:19 AM PST

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் இன்று அதிகாலை மரணமடைந்தார். இவருடைய மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரும், புகழ்பெற்ற பழம்பெரும் நடிகருமான நாகேஸ்வர ராவ் இறந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தோம். அவர் இந்திய திரையுலகின் கதாநாயக நடிகர்களில் உலக புகழ்பெற்றவர். பல்வேறு அயல்நாடுகளுக்கு சென்று இந்தியர்களின் கலை மற்றும் பண்பாட்டை உலகறிய செய்தவர்களில் அவரும் ஒருவர்.

விஜய்சேதுபதியின் ரூம் மேட் இயக்கும் படத்தில் பாடிய டி.ஆர்.

Posted: 22 Jan 2014 02:10 AM PST

என்.சி.ஆர். மூவி கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்பிரமணியம், என்.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு 'சிக்கிக்கு சிக்கிக்கிச்சு' என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் மிதுன் கதாநாயகனாகவும் மற்றொரு கதாநாயகனாக ஆதவனும் நடிக்கின்றனர். மிருதுளா கதாநாயகியாக நடிக்கிறார். வில்லன் வேடத்தில் அனூப் அரவிந்த் நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் என்.ராஜேஷ்குமார். விஜய் பெஞ்சமின் இசையமைக்கிறார்.

விலங்குகளை காப்பாற்றி சிகிச்சை வழங்கும் 'பெடா' அமைப்பில் இணைந்தார் நடிகை ஏமி ஜாக்சன்

Posted: 22 Jan 2014 01:16 AM PST

தமிழில் 'மதராசப்பட்டினம்', 'தாண்டவம்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஏமி ஜாக்சன். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் பூனை மற்றும் நாய் உள்ளிட்ட ஏராளமான விலங்குகளை தனது வீட்டில் வைத்து பாதுகாத்து வளர்த்து வருகிறார். தற்போது அவர் விலங்குகளை காப்பாற்றி சிகிச்சை வழங்கும் 'பெடா' அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகிறார். ஒவ்வொரு வீட்டிலும் விலங்குகளை வைத்து பாதுகாக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்த அமைப்பு ஒரு விளம்பரப் படத்தை எடுத்துள்ளது. இந்த விளம்பரப்படத்தில் விலங்குகளை காப்பாற்றும் தேவதூதராக ஏமி ஜாக்சன்

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட நடிகர்கள் மோதும் நட்சத்திர கிரிக்கெட் 25–ந்தேதி தொடங்குகிறது

Posted: 21 Jan 2014 11:41 PM PST

நடிகர்கள் மோதும் சிசிஎல் எனும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி வருகிற 25–ந்தேதி மும்பையில் துவங்குகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடிக்கும் நடிகர்கள் இதில் பங்கேற்று விளையாடுகிறார்கள். மும்பையில் 25–ந்தேதி மாலை 3 மணிக்கு சென்னை ரைனோஸ் எனும் தமிழ் நடிகர்கள் அணிக்கும் மும்பை ஹீரோஸ், எனும் இந்தி நடிகர்கள் அணிக்கும் போட்டி நடக்கிறது. இரவு 7 மணிக்கு வீர்மராத்தி அணியும் போஜ்புரி அணியும் மோதுகிறது.

என் தொழிலை முடக்குவதற்காகவே என் மீது புகார் கூறுகிறார்கள்: கவுதம் மேனன் குற்றச்சாட்டு

Posted: 21 Jan 2014 10:25 PM PST

'விண்ணை தாண்டி வருவாயா' படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக தனக்கு தர வேண்டிய ரூ. 1 கோடியை கவுதம் மேனன் தரவில்லை என்று தயாரிப்பாளர் ஜெயராமன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு பதில் அளித்து கவுதம்மேனன் கூறியதாவது:– என் தொழிலை முடக்கி போடுவதற்காகவே இதுபோன்ற புகார்கள் கூறப்படுகின்றன. நான் வேறு நபர்களுடன் இணைந்து படங்கள் தயாரிப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை. நான் எப்போது படவேலைகளை துவங்குகிறேனோ அப்போதெல்லாம் இதுபோன்ற இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர்.

மீண்டும் நடிக்க வருகிறார் ஐஸ்வர்யாராய்: மணிரத்னம் இயக்குகிறார்

Posted: 21 Jan 2014 09:23 PM PST

மணிரத்னம் இயக்கும் படத்தில் ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மணிரத்னத்தின் 'இருவர்' படத்தில் ஐஸ்வர்யாராய் நடித்தார். 1997–ல் இப்படம் வந்தது. அவர் இயக்கத்தில் 'குரு', 'ராவணன்' படங்களிலும் நடித்தார். இந்நிலையில், மகள் ஆரத்யா பிறந்த பிறகு படங்களில் ஐஸ்வர்யாராய் நடிக்கவில்லை. குழந்தையை கவனித்துக் கொள்வதிலேயே முழு நேரத்தையும் செலவிடுகிறார். படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏற்கவில்லை. இந்த நிலையில் மணிரத்னம் இந்தி டைரக்டர் சஞ்சய் லீலா பஞ்சாலி

பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் மரணம்

Posted: 21 Jan 2014 06:56 PM PST

தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகராக வலம் வந்த பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் ஐதராபாத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார். 90 வயதான அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை அவர் மரணமடைந்தார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக

செல்வராகவனும், தனுசும் என்னை ஓய்வு எடுக்க சொல்கிறார்கள்: கஸ்தூரிராஜா பேச்சு

Posted: 21 Jan 2014 03:10 PM PST

துள்ளுவதோ இளமை, காதல்கொண்டேன், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன்ஸ், 'காசு பணம் துட்டு' என்ற புதிய படத்தை தயாரித்து இருக்கிறது. கஸ்தூரிராஜா டைரக்டு செய்திருக்கிறார். புதுமுகங்கள் நடித்து இருக்கிறார்கள்.இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. பாடல்களை நடிகர் தனுஷ் வெளியிட, ஒளிப்பதிவாளர் மது அம்பாட் பெற்றுக்கொண்டார். விழாவில், டைரக்டர் கஸ்தூரிராஜா பேசியதாவது:- ''என் மகன்கள் இப்போது சினிமாவில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் என்னை, ''நீ ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாய்...அம்மாவுடன் லண்டன், சுவிட்சர்லாந்து என்று ஜாலியாக சுற்றுலா போக வேண்டியதுதானே'' என்கிறார்கள். ஆனால், நான் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை நான் ஒரு புதுமுக இயக்குனராக நினைக்கிறேன். இன்று உள்ள புதுமுக இயக்குனர்களைப் பார்த்து பிரமிக்கிறேன். அவர்கள் அமைத்த பாதையில் பயணம் செய்ய விரும்புகிறேன். நான் சினிமாவுக்கு வந்தபோது என் கையில் ஒரு புனித நூலும், முதுகில் என் குடும்ப சுமையும் இருந்தது. குடும்பத்தை நல்ல இடத்தில் சேர்க்கும்போது, பு

நடிகை சமீரா ரெட்டி திருமணம்: மும்பை தொழில் அதிபரை மணந்தார்

Posted: 21 Jan 2014 12:40 PM PST

தமிழில் 'வாரணம் ஆயிரம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. இந்த படத்தில் அவர் நடிகர் சூர்யாவின் ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. இதை தொடர்ந்து அவர் நடிகர் விஷாலுடன் வெடி மற்றும் நடிகர் மாதவனுடன் வேட்டை ஆகிய படங்களிலும் நடித்தார். இந்தி, தெலுங்கு, வங்காளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட படங்களில் சமீரா ரெட்டி நடித்து உள்ளார். அங்கும் அவர் முன்னணி நடிகையாக திகழ்ந்தார். நடிகை சமீரா ரெட்டிக்கும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் அக்ஷய் வர்தே என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் கடந்த 2½ ஆண்டுகாலமாக காதலித்து வந்தனர். கடந்த மாதம் (டிசம்பர்) 14-ந் தேதி இருவரும் மோதிரம் மாற்றி ரகசியமான முறையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். மேலும், அவர்களது திருமணம் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் த

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online