Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


குடியரசு தினத்தில் 4 படங்கள் ‘ரிலீஸ்’

Posted: 21 Jan 2014 01:57 AM PST

குடியரசு தினத்தையொட்டி 'நேர் எதிர்', 'மாலினி 22 பாளையங்கோட்டை', 'கோலி சோடா', 'நினைத்தது யாரோ' ஆகிய 4 புது படங்கள் ரிலீசாகிறது. பொங்கலுககு விஜய்யின் 'ஜில்லா', அஜீத்தின் 'வீரம்' படங்கள் வந்ததால் தியேட்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆகையால் பொங்கலுக்கு சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய முடியவில்லை. தற்போது அவை குடியரசு தினத்தையொட்டி வருகின்றன. 'நேர் எதிர்' படத்தில் ரிச்சர்ட், பார்த்தி வித்யா, ஐஸ்வர்யா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். ஜெய பிரதீப் இயக்கியுள்ளார். ஆக்ஷன், திரில்லர் படமாக தயாராகியுள்ளது. இப்படத்தை கலைப்புலி தாணு வெளியிடுகிறார்.

முத்த காட்சியில் நடிக்க சமந்தா மறுப்பு

Posted: 21 Jan 2014 01:05 AM PST

தெலுங்கு நடிகருடன் முத்த காட்சியில் நடிக்க சமந்தா மறுத்துவிட்டார். இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. சமந்தாவும, நாக சைதன்யாவும் 'ஆட்டோ நகர் சூர்யா' என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். இவர்கள் ஏற்கனவே 'ஏமாயா கேசவா' என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்படம் 2010–ல் ரிலீசானது. இந்த படம் மூலம்தான் சமந்தா தெலுங்கு பட உலகில் அறிமுகமானார். அதில் முத்த காட்சி இடம் பெற்று இருந்தது. நாக சைதன்யாவை முத்தமிட வேண்டும் என்று டைரக்டர் சொன்னதும் மறுப்பு சொல்லாமல் நடித்தார்.

நஸ்ரியா காதல் என்னை மாற்றியது: பஹத் பாசில்

Posted: 21 Jan 2014 12:32 AM PST

நடிகை நஸ்ரியாவும், இயக்குனர் பாசிலின் மகனும் நடிகருமான பஹத் பாசிலும் ஒருவரையொருவர் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் 'எல் பார் லவ்' என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இவர்கள் காதலை இருவீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொண்டு திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆகஸ்டு மாதம் திருமணம் நடக்கும் என்று பகத்பாசில் தந்தையும் பிரபல மலையாள டைரக்டருமான பாசில் அறிவித்து உள்ளார். கேரளாவில் இத்திருமணம் நடைபெறும் என்றும் பெற்றோர்கள் நிச்சயம் செய்து இந்த திருமணத்தை நடத்துகிறோம் என்றும் அவர் கூறினார்.

நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 20 Jan 2014 09:30 PM PST

தமிழ் திரையுலகில் 1950 மற்றும் 60களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். பராசக்தி, மனோகரா, ரத்த கண்ணீர், சிவகங்கை சீமை, தெய்வபிறவி, குமுதம், ஆலயமணி, காஞ்சித் தலைவன், குங்குமம், பூம்புகார் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனும் கதாநாயகனாக

இசையமைப்பாளர் அனிருத் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Posted: 20 Jan 2014 03:19 PM PST

இசையமைப்பாளர் அனிருத் மீது, கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் ஆபாச பாடல்களை வெளியிட்டு, பெண்களையும், தாய்மார்களையும் இழிவுபடுத்தி இருப்பதாகவும், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஜெபதாஸ்பாண்டியன், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், பிரபல திரைப்பட இசையமைப்பாளர் அனிருத் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். அவர் கொடுத்துள்ள மனு விவரம் வருமாறு:- பல்வேறு தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், இணையதளத்தில் ஆங்கில பாடல்களுக்கு இசையமைத்து, இசை ஆல்பம் வெளியிட்டு இருக்கிறார். அந்த பாடல்களில் உள்ள வரிகள், பெண்களையும், குறிப்பாக தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையிலும் உள்ளது. பாடல்களில் ஆபாச வரிகள் இடம் பெற்றுள்ளன. உடனடியாக, அந்த

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online