Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


கடும் மூடுபனியில் லுங்கி, சட்டையுடன் நடனமாடிய ஹன்சிகா

Posted: 18 Jan 2014 06:52 AM PST

டைரக்டர் திருக்குமரனின் இயக்கத்தில் வளர்ந்து வரும் 'மான் கராத்தே' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் நகருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நடைபெற்று வருகின்றது. பார்வையையே மறைக்கும் கடும் மூடுபனியும், போக்குவரத்தை சீர்குலைக்கும் மோசமான வானிலையும் அங்கு நிலவி வரும் போதிலும், நடிகர்

டுவிட்டர் இணைய தளத்தில் விஜய்யை அவதூறாக திட்டியவர் போலீசில் சிக்கினார்

Posted: 17 Jan 2014 11:58 PM PST

இன்டர் நெட்டில் வெவ்வேறு நடிகர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று விஜய் வற்புறுத்தி வருகிறார். இந்த போக்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் கூறி உள்ளார். இந்த நிலையில் ரசிகர்களுடன் டுவிட்டர் இணைய தளம் மூலம் இரு தினங்களுக்கு முன் நேரடியாக அவர் கலந்துரையாடினார். ரசிகர்கள் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்தார். ரசிகர்கள் தங்கள் வேலையையும் குடும்பத்தினரையும் நன்றாக

டைரக்டர் கவுதம் மேனன் மீது சினிமா தயாரிப்பாளர் மோசடி வழக்கு: போலீஸ் நடவடிக்கை

Posted: 17 Jan 2014 11:42 PM PST

'விண்ணை தாண்டி வருவாயா' என்ற திரைப்படத்தை கவுதம் மேனன் டைரக்டு செய்திருந்தார். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜெயராமன். தமிழில் வெளிவந்த இந்த படத்தை இந்தியில் ''டப்பிங்'' செய்ய கவுதம்மேனன் முடிவு செய்தார். ''ரேஷ்மா கட்டாலா'' என்பவர் உதவியுடன் போட்டோ நிறுவனம் மூலம் டப்பிங் செய்யும் பணி நடந்தது. இந்த படத்தை இந்தியில் 'டப்' செய்ய வேண்டுமானால் தனக்கு ரூ.99 லட்சம் 'ராயல்டி' தர வேண்டும் என்று படத் தயாரிப்பாளர் ஜெயராமன் போலீசில் புகார் கொடுத்தும் ஏற்கவில்லை. இதையடுத்து சைதாப்பேட்டை கோர்ட்டின் உதவியை அவர் நாடினார். போலீசார் வழக்குபதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். அதன்பேரில் மாஜிஸ்திரேட், போலீஸ் துணை கமிஷனர் நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவிட்டார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை.

பாண்டிய நாடு ’கலாய்ச்சி பை’ பாடல் என்னை பாடகியாக பிரபலமாக்கியது –ரம்யா நம்பீசன்

Posted: 17 Jan 2014 11:15 PM PST

ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், பீட்சா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரம்யாநம்பீசன். தற்போது டமால் டுமீல், ரெண்டாவது படம்,நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், முறியடி போன்ற படங்களில் நடிக்கிறார். ரம்யாநம்பீசன் சிறந்த பின்னணி பாடகியும் ஆவார். மலையாள படங்களில் நிறைய பாடல்கள் பாடி உள்ளார். தமிழில் விஷால் நடித்த பாண்டிய நாடு படத் தில் பை பை பை கலாய்ச்சி பை பாடலை பாடினார். இந்த பாடல் ஹிட்டானதால் தமிழில் பாடல் வாய்ப்புகளும் குவிகிறது. பை பை பை கலாய்ச்சி பை பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

வீரம் படத்தால் மறுபிரவேசம்: தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் -பாலா

Posted: 17 Jan 2014 11:02 PM PST

அஜீத்துடன் வீரம் படத்தில் நடித்து தமிழ் பட உலகில் மறுபிரவேசம் எடுத்துள்ளார் பாலா. இவர் ஏற்கனவே தமிழில் அன்பு என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானார். காதல் கிசு கிசு, அம்மா அப்பா செல்லம் போன்ற படங்களிலும் நடித்தார். அவை எதிர்பார்த்தபடி போகாததால் மலையாளத்துக்கு போனார். அங்கு மம்முட்டியுடன் பிபி என்ற படத்தில் நடித்தார். அது வெற்றி பெற்றதால் ஏராளமான படங்கள் குவிந்தது. மலையாளத்தில் 40 படங்கள் நடித்துள்ளார். வீரம் இவரது 44–வது படம். பாலாவின் தாத்தா ஏ.கே.வேலன் அருணாச்சலம் ஸ்டூடியோவின் அதிபர் நிறைய எம்.ஜி.ஆர். படங்களை தயாரித்து உள்ளார். இவரது சகோதரர்தான் சிறுத்தை, வீரம் படங்களை இயக்கிய டைரக்டர் சிவா. மீண்டும் தமிழ் படத்தில் நடித்தது பற்றி பாலா சொல்கிறார். நான் நடித்

என் படத்தின் போஸ்டரை விமர்சிப்பதா?- சமந்தாவுக்கு மகேஷ்பாபு கண்டனம்

Posted: 17 Jan 2014 10:53 PM PST

மகேஷ்பாபு நடித்த நேனொக்கடய்னே தெலுங்கு படம் ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. இப்படத்தின் போஸ்டர்கள் ஐதராபாத் நகரமெங்கும் ஒட்டப்பட்டு இருந்தன. கடற்கரையில் மகேஷ்பாபு நடந்து செல்வது போன்றும் அவர் பின்னால் கதாநாயகி கை, கால்களை தரையில் ஊன்றி நாய் போல் மண்டியிட்டு செல்வது போன்றும் அந்த போஸ்டர் இருந்தது. இதற்கு சமந்தா கண்டனம் தெரிவித்தார். பெண்களை இழிவுபடுத்துவது போல் இந்த போஸ்டர் உள்ளது என்று கருத்து வெளியிட்டார். இதனால் மகேஷ்பாபு ரசிகர்கள் ஆத்திரமுற்றனர். சமந்தாவின் கால்களை நாயகன் பிடிப்பது போன்ற அவரது பழைய பட போஸ்டர்

இன்டர்நெட்டில் போட்டி போட்டு விஜய், அஜீத்தை விமர்சிக்க வேண்டாம்: டைரக்டர் சேரன் வேண்டுகோள்

Posted: 17 Jan 2014 10:38 PM PST

விஜய்யின் 'ஜில்லா', அஜீத்தின் 'வீரம்' படங்கள் பொங்கலுக்கு ரிலீசானது. இப்படங்கள் பற்றி இருவரின் ரசிகர்களும் இன்டர் நெட்டில், பேஸ்புக் மற்றும் டுவிட்டர்களில் மாறி மாறி அவதூறாக விமர்சனம் செய்து வருகின்றனர். இது திரையுலகினரை வருத்தமடைய செய்துள்ளது. அஜீத் ரசிகர்களுடன் மோத வேண்டாம் என்றும் இது ஆரோக்கியமான செயல் அல்ல என்றும் தனது ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை

நடிகர் ராஜ்குமாரின் கடத்தல் சம்பவம் படமாகிறது

Posted: 17 Jan 2014 10:00 PM PST

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து 'சூப்பர் ஸ்டார் கிட் நாப்' என்ற பெயரில் தெலுங்கில் புது படம் தயாராகிறது. சந்தன கடத்தல் வீரப்பனால் கடந்த 2000–ம் ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமார் அவரது பண்ணை வீட்டில் இருந்து கடத்தப்பட்டார். இது தமிழகத்திலும் கர்நாடகாவிலும் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியது. 108 நாட்கள் காட்டுக்குள் சிறை வைக்கப்பட்டு

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online