Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


ஹன்சிகா படங்களை பறிக்கும் தமன்னா

Posted: 17 Jan 2014 03:31 AM PST

கவர்ச்சியாக நடிக்க தயார் என்று ஹன்சிகாவுக்கு போன படவாய்ப்புகளை தமன்னா பறித்து வருகிறார். இதனால் இருவருக்கும் பனிப்போர் நடக்கிறது. தமன்னாவும், ஹன்சிகாவும் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளாக உள்ளனர். ஹன்சிகா கவர்ச்சியாக நடிக்க தயக்கம் காட்டுகிறார். நிறைய டைரக்டர்கள் நல்ல கதைகளுடன் அவரை அணுகி கால்ஷீட் கேட்கின்றனர். கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கிறார்கள். அதை ஏற்க மறுப்பதால் தமன்னா அந்த டைரக்டர்களுக்கு கவர்ச்சியாக நடிக்க தயார் என்று தூது அனுப்பி படத்தை கைப்பற்றிக் கொள்கிறாராம்.

சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட பாலச்சந்திரன் கதை படமாகிறது

Posted: 17 Jan 2014 02:58 AM PST

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் 14 வயது மகன் பாலச்சந்திரன். சிங்கள ராணுவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டதாக கடந்த வருடம் வெளியான படங்கள் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. பாலச்சந்திரனை ராணுவ பதுங்கு முகாமில் பிடித்து வைத்து சுட்டுக் கொன்று இருந்தனர். இதனை கண்டித்து தமிழகத்தில் மாணவர்கள் போராட்டங்களில் குதித்தார்கள். இக்கொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள். பாலச்சந்திரன் கொல்லப்பட்டது சினிமா படமாகிறது. பிரவின்காந்த் நடிக்கும் புலிப்பார்வை படத்தில் இந்த காட்சிகள் சேர்க்கப்படுகின்றன. பாலச்சந்திரன் கேரக்டரில் நடிக்க 100 சிறுவர்களை பரிசீலித்து இறுதியில் பொருத்தமான சிறுவனை டைரக்டர் தேர்வு செய்துள்ளார்.

நயன்தாரா, உதயநிதி நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’ காதலர் தினத்தில் வெளியாகிறது

Posted: 17 Jan 2014 02:46 AM PST

உதயநிதி, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் 'இது கதிர்வேலன் காதல்' படம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 14–ந் தேதி காதலர் தினத்தில் ரிலீசாகிறது. முதல் தடவையாக இப்படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். இதன் பாடல் வெளியீடு 20–ந் தேதி நடக்கிறது. இப்படத்தில் சந்தானம் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். இவர் சசிகுமார், லட்சுமிமேனனை வைத்து சுந்தரபாண்டியன் ஹிட் படத்தை டைரக்டு செய்தவர்.

‘நேர்எதிர்’ படத்தின் லாபத்தை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து உதவுவேன்: கலைப்புலி தாணு

Posted: 17 Jan 2014 02:22 AM PST

ரிச்சர்ட், பார்த்தி, ஜஸ்வர்யா இணைந்து நடித்துள்ள படம் 'நேர் எதிர்'. பிரதீப் இயக்கியுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் வெளியிடுகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. பி.வாசு தலைமை வகித்தார். டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் டிரெய்லரை வெளியிட கவுதம் மேனன் பெற்றுக் கொண்டார். டைரக்டர் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பங்கேற்று பேசினார். டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் விழாவில் பேசும்போது, 'நேர் எதிர்' அனைத்து தரப்பினரையும் கவர்கிற தலைப்பு. இந்த படத்துக்கு பொருத்தமான தலைப்பு அமைந்துள்ளது. இதன் டிரெய்லரே சீட் நுனிக்கு இழுக்கிறது. நான் விஜய்யை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போகிறேன். கதை தயாராகி விட்டது.

அஜீத் ரசிகர்களுடன் மோத வேண்டாம்: ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

Posted: 17 Jan 2014 02:13 AM PST

நடிகர் விஜய் டுவிட்டர் இணைய தளம் மூலம் ரசிகர்களிடம் அரை மணி நேரம் உரையாடினார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், விஜய் அளித்த பதில்களும் வருமாறு:– கேள்வி:– 'ஜில்லா' படம் வெற்றி பெற்றது பற்றி உங்கள் கருத்து? பதில்:– 'ஜில்லா' படம் பெரிய வெற்றி படமாக காரணமாக இருந்த எனது ரசிகர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கே:– தமிழ் படஉலகில் உடம்பை வருத்தி கடுமையாக உழைக்கும் நடிகர் யார்? ப:– சீயான் விக்ரம்.

தற்கொலை செய்து கொண்ட உதய்கிரண் வாழ்க்கை சினிமா படமாகிறது

Posted: 16 Jan 2014 11:34 PM PST

நடிகர் உதய்கிரணின் தற்கொலை சம்பவம் சினிமா படமாகிறது. உதய்கிரண் தமிழில் 'வம்பு சண்டை, பொய், பெண் சிங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகராக இருந்தார். கடந்த 5–ந் தேதி வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இது தெலுங்கு, தமிழ் பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உதய் கிரணுக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் குறைந்து

சரித்திர கதையில் நடிக்க ஆசை: அமலாபால்

Posted: 16 Jan 2014 10:37 PM PST

சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக அமலாபால் தெரிவித்தார். அனுஷ்கா, தமன்னா போன்றோர் ராணி, இளவரசி வேடங்களில் நடிக்கின்றனர். நயன்தாராவும் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். சிலர் விலைமாது வேடத்தில் நடித்து விருதுகள் வாங்கியுள்ளனர். அமலாபாலுக்கு காதல் பட வாய்ப்புகளே கிட்டியுள்ளன. கதாநாயகர்களுடன் 'டூயட்' ஆடவே பயன்படுத்தப்பட்டு உள்ளார். இது அவருக்கு சலிப்பை ஏற்படுத்தி உள்ளதாம். நடிப்புத் திறமையை

பழம்பெரும் வங்காள நடிகை சுசித்ரா சென் மரணம்

Posted: 16 Jan 2014 09:44 PM PST

வங்காள தேசத்தில் உள்ள பாப்னா என்ற இடத்தில் பிறந்தவர் நடிகை சுசித்ரா சென். வங்காளதேச பிரிவினைக்குப் பின் மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரில் குடியேறினார். வங்காள மொழிப்படங்களில் கதாநாயகியாக நடித்து 1953–ம் ஆண்டு முதல் 1976 வரை கொடி கட்டிப் பறந்தார்.

அஜீத்துக்கு ஜோடியாகிறார் அனுஷ்கா!

Posted: 16 Jan 2014 08:17 PM PST

நடிகை அனுஷ்கா தமிழில் கடைசியாக 'இரண்டாம் உலகம்' படத்தில் நடித்தார். இதையடுத்து தெலுங்கில் 'ருத்ரமாதேவி', 'மஹாபலி' ஆகிய பிரம்மாண்ட சரித்திர படங்களில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களிலும் அவர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளார். இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் இவரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இவரும் சரி என்று ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

நீண்ட காலத்திற்கு பின் கைகுலுக்கிக்கொண்ட ஹிந்தி நடிகை ரேகா, ஜெயாபச்சன்

Posted: 16 Jan 2014 03:38 PM PST

ஹிந்தி திரைப்பட துறையில் அரிதான சம்பவமாக பாலிவுட்டின் பிரபல நடிகைகளான ரேகாவும், ஜெயாபச்சனும் சந்தித்து நலம் விசாரித்து கைகுலுக்கி கொண்டனர். அமிதாப் பச்சன் திரைப்பட துறை வாழ்க்கையில் குவித்த வெற்றிகளை பாராட்டி அவரை கவுரவப்படுத்திய விழாவில்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online