Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


விவேகானந்தரை தமிழகம் தான் உலக உச்சிக்கு கொண்டு சென்றது: நடிகர் விவேக் பேச்சு

Posted: 16 Jan 2014 01:37 AM PST

பெரியநாயக்கன் பாளையத்தில் சுவாமி விவேகானந்தரின் ரத யாத்திரை நிறைவு விழாவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வித்யாலயா செயலர் சுவாமி அபிராமனந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நடிகர் விவேக் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:– விவேகானந்தர் துறவிகளில் மட்டுமல்ல, மனிதர்களுள் சிறந்தவரும் அவரே. பெண்மைக்கு முக்கியத்துவம் அளித்த முதல் புரட்சி சிந்தனையாளர். கல்வி, வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றால் இந்தியா உயர முடியும் என்று தீர்க்கமாய் நம்பியவர். 100 யானைகள் பலத்தையொத்த வலிமையும், சிங்க கர்ஜனை போன்ற வீரத்தையும் உடையவர்.

மரணம் அடைந்த அஞ்சலி தேவி உடலுக்கு கவர்னர்–அமைச்சர்கள் அஞ்சலி

Posted: 16 Jan 2014 01:15 AM PST

பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி நெஞ்சுவலி காரணமாக கடந்த 13–ந் தேதி மரணம் அடைந்தார். அவரது பேரன் வெளிநாட்டில் இருந்து திரும்புவதால் உடல் போரூரில் உள்ள ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் பதப்படுத்தி வைக்கப்பட்டது. இன்று காலை ஆஸ்பத்திரியில் இருந்து உடல் ராஜா அண்ணாமலைபுரம் சுந்தரம்

சென்னையில் நடிகர் சல்மான்கானுக்கு எதிராக போராட்டம்

Posted: 16 Jan 2014 01:14 AM PST

குஜராத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்தி நடிகர் சல்மான்கான் பங்கேற்றார். அப்போது அவர் நரேந்திர மோடி நல்லவர் என்றும் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் என்றும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். இதற்கு இந்திய தேசிய லீக் கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்தது. சல்மான் கானின் செயலை கண்டித்து சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் ஷமா தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் ஐதர்அலி முன்னிலையில் நடந்த போராட்டத்தில் சல்மான்கான் கொடும்பாவி எரிக்கப்பட்டது. போலீசார் அவர்களை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

‘13-ம் பக்கம் பார்க்க’ படத்தில் பேயோட்டும் பெண்ணாக நடிகை நளினி

Posted: 15 Jan 2014 10:58 PM PST

இன்று உலகம் முழுவதும் திகில் படங்களின் ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களின் தேவைக்காக உலக மொழிகளில் பலர் திகில் படங்களை உருவாக்கி வருகின்றனர். அதேபோல தமிழில் இதுவரை சொல்லாத / வெளிவராத பரபரப்பான அதிர்ச்சியூட்டும் திகில் படத்தை உருவாக்கி வருகின்றனர். ஒரு புத்தகத்தில் உள்ள அதுவும் 13-ம் பக்கத்தில் உள்ள ஒரு சாத்தான் வெளிவந்து செய்யும் அட்டகாசத்தை படத்தின் கருவாக வைத்து '13-ம் பக்கம் பார்க்க' என்ற படத்தை உருவாக்கி வருகின்றனர். ஆர்.வி.கே.பிலிம் மீடியா சார்பில் ஆர்.வினோத் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். பல வெற்றிப்படங்களுககு கதை, வசனம் எழுதி இணை இயக்குனராக பணியாற்றிய புகழ்மணி இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

சிவாஜியை அறிமுகப்படுத்திய பெருமாள் முதலியார் குடும்பத்துக்கு பொங்கல் சீருடன் பிரபு மரியாதை

Posted: 15 Jan 2014 08:04 PM PST

நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பின் படமான பராசக்தி மூலம் சிவாஜி கணேசனை திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர் பெருமாள் முதலியார். வேலூர் நேஷனல் திரையரங்கின் உரிமையாளரான இவரது வீட்டுக்கு ஆண்டுதோறும் பொங்கல் திருநாளில் சிவாஜி கணேசன், அவரது மனைவி

சிரஞ்சீவி மகன் நடிகர் ராம்சரண் தேஜா மீது ஆபாசப்பட வழக்கு

Posted: 15 Jan 2014 07:30 PM PST

நடிகர் சிரஞ்சீவியின் மகனும், தெலுங்குப்பட முன்னணி கதாநாயகனுமான ராம்சரண்தேஜா நடித்த 'எவடு' என்ற படம், கடந்த 12–ந் தேதி வெளியானது. நடிகைகள் ஸ்ருதி ஹாசன், எமி ஜாக்சன் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ளனர். வம்சி பய்டிபள்ளி இயக்கி உள்ள இப்படத்தின் சுவரொட்டிகள், ஆபாசமாக இருப்பதாக கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேந்திர பிரசாத் என்பவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், ராம்சரண்தேஜா உள்பட 10 பேர்

சினிமாவில நன்றியுணர்வு குறைந்து விட்டது: டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு

Posted: 15 Jan 2014 07:19 PM PST

ரிச்சர்ட், பார்த்தி, ஐஸ்வர்யா நடித்து, ஜெயப்ரதீப் டைரக்டு செய்து, எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் வெளியிடும் படம், 'நேர் எதிர்.' இந்த படத்தின் 'டிரைலர்' வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. விழாவில், டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- ''ஒரு படத்துக்கு தலைப்பு அமைவது, மிகவும் சிரமம். 'நேர் எதிர்' என்ற தலைப்பு அனைத்து தரப்பினரையும் கவர்கிற தலைப்பு. இது, எனக்கு தோன்றாமல் போய்விட்டது. நான், அடுத்து விஜய் படத்தை இயக்கப்போகிறேன். கதை எல்லாம் தயாராகி விட்டது. படப்பிடிப்புக்கு போகப்போகிறோம். ஆனால், தலைப்பு முடிவாகவில்லை. நான் இயக்கிய 'துப்பாக்கி' படத்தில், முதல் தோட்டா தயாரிப்பாளர் தாணு. தயாரிப்பாளர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று அம்மா மாதிரி. இன்னொன்று அப்பா மாதிரி. அம்மா மாதிரி உள்ளவர்கள், பிள்ளையை வயிற்றில் சுமப்பதில் இருந்து கடைசி வரை அதைப்பார்த்துக் கொள்கிற மாதிரி, படம் உருவாகிறபோது உடன் இருந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொள்வார்கள். அப்பா மாதிரி இருப்பவர்கள் படத்தின் தொடக்க விழாவுக்கு வரு

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து கோரிக்கை

Posted: 15 Jan 2014 04:27 PM PST

வள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட்நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வெற்றித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர் பேசியதாவது

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online