Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


மனித உரிமை கமிஷனில் புகார் - வ.கௌதமன்

Posted: 22 Dec 2013 02:35 AM PST

நேற்று முன்தினம் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒருநாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார். அவரது வருகையை முன்னிட்டு வ.கௌதமன் உள்பட மாணவர் அமைப்பினைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த கைது சம்பவத்தில் சட்டத்துக்கு புறம்பாக போலீஸாரால் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், மனித உரிமை கமிஷனில் புகார் கொடுக்க உள்ளதாகவும் இயக்குனர் வ.கௌதமன் தெரிவித்தார்.

இரு மொழிகளில் சிம்பு, நயன் படம்

Posted: 22 Dec 2013 02:29 AM PST

சிம்பு, நயன்தாரா இணையும் பாண்டிராஜின் புதிய படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகிறது. ஒருகாலத்தில் காதலர்களாக இருந்து பிரிந்த சிம்புவும், நயன்தாராவும் மீண்டும் இணைவதால் பாண்டிராஜின் படம் ஒரே இரவில் தலைப்பு செய்தியானது. படத்தின் கதை, கேரக்டர் எதையும் அறிந்து கொள்ளாமல் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காகவும், திரையரங்கு விநியோக உரிமைக்காகவும் முட்டி மோதுகிறார்கள்.

பாவாடை தாவணியில் சன்னி லியோன்

Posted: 22 Dec 2013 02:27 AM PST

வடகறி படத்தில் சன்னி லியோனை ஆட வைப்பது என்ற ஆசையை லட்சங்கள் கொட்டி சாதித்திருக்கிறார் தயாரிப்பாளர் துரை தயாநிதி. சன்னி லியோன் இடம்பெறும் இந்தப் பாடலை பாங்காக்கில் படமாக்கினார்கள்.

ஐ யாம் ஹேப்பி

Posted: 22 Dec 2013 02:06 AM PST

கமல், சரத்குமார் என சீனியர் நடிகர்களுடன் நடித்த ஆண்ட்ரியா இப்போது இளம் ஹீரோக்களுடன் நடிப்பது தமிழ் சினிமாவின் வரலாற்று நிகழ்வு. சீனியருடன் ஜோடியாக நடிக்கும் நடிகைகள் இளம் ஹீரோக்களால் ஓரங்கட்டப்படுவதைதான் இதுவரை பார்த்திருக்ககிறோம்.

எனக்குப் பின்னால் சதித்திட்டம்

Posted: 22 Dec 2013 02:04 AM PST

நீங்கள் பிரபலமாக இருந்தால் எத்தனை மோசடிகள் செய்தாலும், அவை சட்டரீதியாக நிரூபிக்கப்பட்டாலும் பயப்பட தேவையில்லை. என்னை கவிழ்க்க நடந்த சதி... எல்லோரையும் நம்பியதுதான் என்னுடைய பலவீனமாகப் போய்விட்டது... நல்லவர்கள் என்று நம்பியவர்கள் என்னை மோசம் செய்துவிட்டனர்... இப்படி நாலு ரெடிமேட் வசனங்களை எடுத்துவிட்டால் போதும். அப்படியும் இருக்குமோ என்ற அனுதாபத்தை பொதுமக்களின் அடிமனசில் தோற்றுவித்து, ஆட்டத்தை தொடரலாம்.

ஓரினச்சேர்க்கை - த்ரிஷா துணிச்சலான கருத்து

Posted: 22 Dec 2013 02:02 AM PST

ஓரினச்சேர்க்கை குற்றம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்குப் பின் ஓரினச்சேர்க்கை குறித்த விவாதம் சூடு பிடித்திருக்கிறது. கலாச்சாரம், பண்பாடு என்று காலத்துக்கேற்ப மாறுகிற விஷயங்களை தூக்கிப் பிடித்து ஓரினச்சேர்க்கை தவறு, நம்முடைய கலாச்சாரம், பண்பாடு என்னாகிறது என்று ஒருசாரர் கூக்குரலிடுகின்றனர்.

மத உயர்வை புண்படுத்தியதாக சல்மான் மீது வழக்கு

Posted: 22 Dec 2013 02:00 AM PST

முஸ்லீம்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக ஹைதராபாத் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை அடுத்து சல்மான் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குப் பின்னும் சஞ்சய் தத் பரோலில் விடுதலை

Posted: 22 Dec 2013 01:48 AM PST

இந்தியாவில் ஏழைக்கு ஒன்றும், அதிகாரமிக்கவர்களுக்கு ஒன்றுமாக இரண்டு சட்டங்கள் நிலுவையில் உள்ளது. கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் இரட்டைக் குவளை சாதிய கொடுமைப் போன்றதே இதுவும்.

மகாபலி - அனுஷ்காவுடன் நடிக்கும் தமன்னா

Posted: 22 Dec 2013 01:32 AM PST

இரண்டு ஹீரோயின் கதையாக இருப்பின் நடிப்பதற்கு தயக்கம் காட்டும் தமன்னா அனுஷ்கா நடிக்கும் படத்தில் நடிப்பதற்கு விருப்பத்துடன் சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்கு காரணம், படத்தை இயக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலி.

பிரமாண்டமாக அமைந்த மீனாவின் ரீ என்ட்ரி

Posted: 22 Dec 2013 01:30 AM PST

திருமணமாகி குழந்தை பிறந்த பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் மீனா. திருமணத்துக்குப் பிறகு தமிழில் அவர் நடித்த தம்பிக்கோட்டை பெரிய அளவில் போகவில்லை. இந்நிலையில் மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக த்ரிஷ்யம் என்ற படத்தில் நடித்தார். திருமணத்துக்குப் பிறகு அவர் நடித்த முதல் மலையாளப் படம் இது.

பாந்த்ரா பகுதியை காலி செய்யும் ஸ்ருதிஹாசன்

Posted: 22 Dec 2013 01:28 AM PST

பாந்த்ராவில் தற்போது குடியிருக்கும் வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கு குடி போகிறார் ஸ்ருதிஹாசன். ஹிந்திப் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வந்ததால் மும்பை பாந்த்ரா பகுதியில் அபார்ட்மெண்ட் ஒன்றில் தனியாக பிளாட்டில் வசித்து வந்தார் ஸ்ருதி. இந்நிலையில் சென்ற மாதம் மர்ம நபரால் அவர் தனது வீட்டிலேயே தாக்கப்பட்டார். இந்த அதிர்ச்சியான சம்பவத்துக்குப் பிறகு பாதுகாப்பான பகுதியில் குடியேறும்படி பலரும் ஸ்ருதியை கேட்டுக் கொண்டனர்.

உதவி இயக்குனர்களை கெட்டவார்த்தைகளில் திட்டும் தனுஷ்

Posted: 22 Dec 2013 02:45 AM PST

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் வேலையில்லா பட்டதாரி படத்தை தயாரித்து வருகிறது. தனுஷ்தான் ஹீரோ. பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தின் இயக்குனர். படப்பிடிப்பு தளத்தில் வேல்ராஜை ஓரமாக உட்கார வைத்து தனுஷ்தான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் உதவி இயக்குனர்களாக இருப்பது அதிகமும் விஸ்காம் படித்த மாணவர்கள்.

பாகிஸ்தானில் இந்தியப் படங்களுக்கு தடை

Posted: 22 Dec 2013 01:23 AM PST

தூம் 3 பாகிஸ்தானிலும் வெளியாவதாக அறிவித்து முன் பதிவும் நடந்தது. இந்நிலையில் மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை இந்திய படங்களுக்கு சென்சார் சான்றிதழ் வழங்கக் கூடாது என லாகூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online