Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


தனது பாடலை சச்சினுக்கு அர்ப்பணித்த நடிகர் தனுஷ்

Posted: 22 Dec 2013 12:57 AM PST

இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் தெண்டுல்கர் திரையுலக நட்சத்திரங்கள் பங்குபெறும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் (சிசிஎல்) நான்காம் சீசனை கடந்த வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார். மும்பையின் புறநகர்ப்பகுதியின் உள்ள கிரான்ட் ஹயாத் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அவர் தனது மனைவியுடன் வந்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மராத்தி, போஜ்புரி, கன்னடம் மற்றும் மலையாளத் திரையுலகில் இருந்து ஏராளமான திரையுலக நட்சத்திரங்களும் வந்திருந்தனர்.

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நடிகர் விஜய் சாமி தரிசனம்

Posted: 21 Dec 2013 11:44 PM PST

காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நேற்று நவகிரக சாந்திஹோமம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் தனது மனைவியுடன் காரில் திருநள்ளாறு வந்தார். கோவிலில் சனீஸ்வரன் சன்னதியில் நடந்த நவகிரக சாந்தி ஹோமத்தில் 2 பேரும் கலந்து கொண்டனர். ஹோமம் முடிந்ததும் சனீஸ்வர பகவானுக்கு தீபவழிபாடு நடந்தது. நடிகர் விஜய் பக்தி

துப்பாக்கியால் சுட்டதாக சல்மான்கான் மீது பொய் புகார் கொடுத்த தயாரிப்பாளர் கைது

Posted: 21 Dec 2013 11:00 PM PST

டெல்லியைச் சேர்ந்தவர் ஹர்தேவ்சிங். இவர் மும்பையில் சினிமா தயாரிப்பு கம்பெனி நடத்தி வருகிறார். டெல்லியில் டயர்கள் விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். இவர் ஒரு இந்திப்படம் தயாரித்து வருகிறார். அதில் நடிகர் சல்மான்கானை வைத்து ஒரே ஒரு பாடல் காட்சியில் நடிக்க வைக்க முயற்சி செய்தார். இதற்காக சல்மான்கானின் மானேஜர் ரேஷ்மாஷெட்டியை தொடர்பு கொண்டார்.

அமீர்கானின் தூம் 3 படம் ஒரே நாளில் ரூ.35 கோடி வசூலித்து சாதனை

Posted: 21 Dec 2013 10:33 PM PST

அமீர்கானின் 'தூம் 3' படம் ஒரே நாளில் ரூ.35 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. நடிகர் அமீர்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்திப் படம் 'தூம் 3' முழுக்க முழுக்க அமெரிக்காவின் சிகாகோ நகரிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இதில் அவருடன் அபிஷேக்பச்சன், ஜாக்கிசெராப், நடிகை கத்ரினாகைப், உதய் சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர். சிகாகோவில் தனது 2 மகன்களுடன் இந்தியன் சர்க்கஸ் நடத்தும் ஜாக்கி செராப் தொழில் நஷ்டப்படவே சிகாகோ வங்கியில் கடன் கேட்கிறார். வங்கி உரிமையாளர்கள் சர்க்கஸ் காட்சியை பார்த்து விட்டு கடன் தர மறுத்து விடு கிறார்கள். இதனால் ஏற்பட்ட வேதனையில் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்கிறார். சிறுவர்களான 2 மகன்களும் வளர்ந்து சிகாகோ வங்கியில் கொள்ளையடித்து கடைசியில் வங்கியையே தகர்த்து உரிமையாளர்களை பழி வாங்குவதே கதை. ஜீன்ஸ் படத்தில் பிரசாந்த் இரட்டையர்களாக நடித்தது போல் தூம் 3 படத்தில் அமீர்கான் கிராபிக்ஸ் மூலம் இரட்டையர்களாக நடித்துள்ளார்.

சட்டத்தடைகளை மீறி பாகிஸ்தானில் திரையிடப்பட்ட தூம்-3

Posted: 21 Dec 2013 09:27 PM PST

பாகிஸ்தானில் திரையிடப்படும் இந்தியத் திரைப்படங்கள் வசூலை வாரிக் குவித்து வருகின்றன். இதனால் பாகிஸ்தானிய திரையுலத்துறை பாதிக்கப்படுகின்றது என்று அந்நாட்டின் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான முபாஷிர் லுக்மேன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் லாகூர் நீதிமன்றம்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online