Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


அதர்வாவுக்கு ஜோடியானார் ஸ்ரீதிவ்யா

Posted: 02 Dec 2013 09:01 AM PST

நாடோடிகள் கோரிப்பாளையம், பட்டத்துயானை உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்த எஸ். மைக்கேல் ராயப்பனின் குளோபல் இன்ஃபோடெயின்மெண்ட் படநிறுவனம், இயக்குநர் வெற்றிமாறனின் க்ராஸ் ரூட் பிலிம் கம்பெனி படநிறுவனத்துடன் இணைந்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கோலாகலம் திரைப்படம் கவரும்: இயக்குனர் பி.ஜி.சுரேந்திரன் பேட்டி

Posted: 02 Dec 2013 04:23 AM PST

திருச்சியைச் சேர்ந்தவர் இயக்குனர் பி.ஜி.சுரேந்திரன். இவர் இயக்குனர் வியட்நாம் வீடு சுந்தரத்திடம் 10 ஆண்டுகள் உதவி இயக்குனராக பணியாற்றியவர். 10–க்கும் மேற்பட்ட குறும்படங்களை தயாரித்து இயக்கி உள்ளார். தற்போது பி.ஜி.எஸ். பிலிம் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தை தொடங்கி 'கோலாகலம்' என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கி உள்ளார். இதில் இவரது மகன் அமல் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். விஜய் நடித்த வேலாயுதம், தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி போன்ற படங்களில் நடித்த சரண்யா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

எங்களால் சிறந்த நண்பர்களாக இருக்க முடியாது: ஷாருக்கான் குறித்து சல்மான் கான் கருத்து

Posted: 02 Dec 2013 04:03 AM PST

2008-ம் ஆண்டு பாலிவுட்டின் முன்னணி நடிகை கத்ரீனா கைப் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த விழாவில் கத்ரீனாவின் நெருங்கிய நண்பரான சல்மான்கான் கலந்து கொண்டார். ஷாருக்கானும் இந்த விழாவில் கலந்துகொள்ள வந்தபோது சல்மான் கானுக்கும் ஷாருகானுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அன்றைய நாளிலிருந்து தொழில் ரீதியிலான போட்டியாளராக இருந்த ஷாருக்கான் இந்த பிரச்சினைக்குப் பிறகு சல்மான் கானின் முழு எதிரியாக மாறினார். ஷாருக்கானுடன் விரோதபோக்கு இருந்தும், சமீபத்தில் இப்தார் நோன்பில் இருவரும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்து தழுவிக் கொண்டனர்.

7 வருட காதலியை கரம் பிடித்தார் பிளாக் பாண்டி

Posted: 02 Dec 2013 02:55 AM PST

பாண்டி என்ற பிளாக் பாண்டி சின்னத்திரை மூலம் பெரிய திரைக்கு அறிமுகமானவர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் நகைச்சுவை நடிகராக உருமாறியவர். சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு 'அங்காடித் தெரு' படம் ஒரு நல்ல நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. இதைத்தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வருகிறார். பாண்டியும், எம்.பி.ஏ., பட்டதாரியுமான உமா மகேஸ்வரியும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் திருமணம்

உயரமான நடிகை என்று கேலி பேசுவதால் கவலை இல்லை– அனுஷ்கா

Posted: 02 Dec 2013 02:50 AM PST

தமிழ், தெலுங்கு திரையுலகில் உயரமான நடிகை என வர்ணிக்கப்படுபவர் அனுஷ்கா. இதுபோல் குள்ளமான நடிகை என அழைக்கப்படுபவர் நித்யா மேனன். நெட்டையாக இருப்பதால் அனுஷ்கா சில பட வாய்ப்புகளை இழந்ததாக கூறப்படுகிறது. குட்டையான ஹீரோக்கள் அவருடன் ஜோடி சேர மறுக்கிறார்கள். இதுபோல் நித்யாமேனன் வளர்த்தியான ராணா போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர முடியவில்லை. இதனால் அவரும் பட

ராகவேந்திரர் கோவிலில் ரஜினி சாமி தரிசனம்

Posted: 02 Dec 2013 02:19 AM PST

திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரர் கோவிலில் ரஜினி சாமி தரிசனம் செய்தார். ரஜினி நடித்த 'கோச்சடையான்' படம் ஜனவரியில் ரிலீசாகிறது. இதற்கான டப்பிங் பணிகளை அவர் முடித்துள்ளார். பாடலை ரஜினி பிறந்தநாளான வருகிற 12–ந் தேதி வெளியிட ஏற்பாடு நடக்கிறது. 'கோச்சடையான்' பட வேலைகள் முடிந்ததை தொடர்ந்து ரஜினி தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் ராகவேந்திரா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதிகாலை 5 மணிக்கு கோவில் வாசலில் காரில் வந்து இறங்கினார். பின்னர் கோவிலுக்குள் நுழைந்த அவரை ஊழியர்கள் வரவேற்றனர்.

நடிகர் நெப்போலியன் 50-வது பிறந்த நாள்: ரசிகர்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாடினர்

Posted: 02 Dec 2013 02:10 AM PST

தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரியும், நடிகருமான நெப்போலியன் 50–வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள நெப்போலியன் தலைமை ரசிகர் மன்றத்தில் ஏராளமானோர் திரண்டு பிறந்த நாளை கொண்டாடினார்கள். நிகழ்ச்சியில் நெப்போலியன் ரசிகர் மன்ற மாநில தலைவர் மார்க்கெட் கெளரிசங்கர், மாநில செயலாளர் மாந்துறை ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு கேக் வெட்டினர். இனிப்புகளும் வழங்கினார்கள். இதில் ரசிகர் மன்ற மாநில பொருளாளர் சீத்தாராம ராய், பி.என்.ரெங்கராஜன், சமூக சேவகி வசந்திபாபு, ஜீவன் பவுண்டேஷன் அஜய், மாநில துணைத்

தோல் நோய் பாதிப்பு இல்லை: என்னைப்பற்றி வதந்தி பரப்புவதா?- சமந்தா ஆவேசம்

Posted: 02 Dec 2013 01:58 AM PST

நடிகை சமந்தாவுக்கு மீண்டும் தோல் அலர்ஜி எற்பட்டுள்ளதாக செய்தி பரவியுள்ளது. அவர் தற்போது லிங்குசாமி இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது. தோல் அலர்ஜி காரணமாக சமந்தா படப்பிடிப்பில் இருந்து வெளியேறியதாகவும் இதனால் படப்பிடிப்பை ரத்து செய்து படக்குழுவினர் சென்னை திரும்பியதாகவும் கூறப்பட்டது.

லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற ‘என்ன சத்தம் இந்த நேரம்’ படம்

Posted: 02 Dec 2013 12:47 AM PST

தமிழில் புதிய முயற்சி என பலராலும் பாராட்டை பெற்ற 'ஆரோகணம்' படத்தை தயாரித்த ஏ.வி.ஏ.புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் மீண்டும் பெரும் பொருட்செலவில், அலையன்ஸ் பிக்சர்ஸ், புரொடக்ஷன் கிருஷ்ணா பலராம ராஜா ஆகியோரின் நிர்வாக தயாரிப்பில் உருவாகியிருக்கிற புதிய படம் 'என்ன சத்தம் இந்த நேரம்'. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருப்பவர் குரு ரமேஷ். பல வெற்றிப்படங்களை இயக்கி இயக்குனராக மட்டும் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் 'ஜெயம்' ராஜா இந்த படத்தின் மூலம் நடிகராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.

மிஷ்கின் இயக்கிய ‘கள்ளப்படம்’

Posted: 02 Dec 2013 12:21 AM PST

இறைவன் பிலிம்ஸ் சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் 'கள்ளப்படம்'. இந்த படத்தை இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஜெ.வடிவேல் இயக்குகிறார். பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக பணியாற்றிய ஸ்ரீராம சந்தோஷ் என்பவர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் துவக்கவிழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் கலந்து கொண்டு படத்தை தொடங்கி வைத்தனர். தன்னுடைய இணை

சிம்புவுடன் நெருக்கமாக நடிக்கமாட்டேன்: நயன்தாரா

Posted: 02 Dec 2013 12:20 AM PST

சிம்புவுடன் நடிக்க நயன் தாரா புது நிபந்தனை விதித்துள்ளார். பாண்டிராஜ் இயக்கும் படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கின்றனர். ஏற்கனவே 'வல்லவன்' படத்தில் இருவரும் இணைந்து நடித்தார்கள். 2006–ல் இப்படம் ரிலீசானது. அப்போது நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டனர். சில மாதங்களிலே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்ள வில்லை. தற்போது

கொச்சி விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளுடன் மோதிய நடிகர் கலாபவன் மணி

Posted: 01 Dec 2013 02:02 PM PST

பிரபல நடிகர் கலாபவன் மணி, வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று கொச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கினார். விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், அவர் கையில் அணிந்திருந்த கனமான தங்க பிரேஸ்லெட்

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online