Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


நடிகை சமந்தாவுக்கு மீண்டும் தோல்நோய் பாதிப்பு: சூர்யா படப்பிடிப்பு ரத்து

Posted: 01 Dec 2013 05:07 AM PST

நடிகை சமந்தா கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திடீர் என்று தோல் நோயினால் பாதிக்கப்பட்டார். அவருடைய முகத்திலும், உடம்பிலும் சிவப்பு புள்ளிகள் தோன்றியதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தில் அவர் மணிரத்னத்தின் 'கடல்' படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். தோல் நோய் பாதிப்பு காரணமாக சமந்தா அந்த பட வாய்ப்பை இழந்தார். அவருக்கு பதில் நடிகை ராதாவின் இளைய மகள்

சிகரெட் பிடிக்கும் காட்சி: மலையாள நடிகர் மது மீது வழக்கு

Posted: 01 Dec 2013 12:13 AM PST

பிரபல மலையாள நடிகர் மது. தேசிய விருது பெற்ற 'செம்மீன்' உள்பட ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். தமிழில் நடிகர் ரஜினிகாந்த் தந்தையாக 'தர்மதுரை' படத்திலும் நடித்து இருந்தார். பழம்பெரும் நடிகரான இவர் தற்போது 'தெய்வத்தின்டே கையொப்பு' என்ற மலையாள படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் கேரளாவில் அடுத்த வாரம் வெளிவர உள்ளது. இதையொட்டி இந்த படத்தின் விளம்பர போஸ்டர்கள் கேரளாவில் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் மது சிகரெட்டு பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளது.

அமெரிக்காவில் ஹாலிவுட் நடிகர் பால் வால்க்கர் கார் விபத்தில் பலி

Posted: 01 Dec 2013 12:04 AM PST

அமெரிக்காவில் ஆலிவுட் நடிகர் பால் வால்க்கர் கார் விபத்தில் பலியானார். பிரபல ஆலிவுட் நடிகர் பால் வால்க்கர் (40). இவர் பாஸ்ட் அன் பியூரியஸ் என்ற படத்தில் நடித்து பிரபலமானவர். கார் பந்தயத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் 6 பகுதிகளாக வெளிவந்து வெற்றி பெற்றது. தற்போது 'பாஸ்ட் அன் பியூரியஸ்' 7–வது பாகத்தில் இவர் நடித்து வருகிறார். நேற்று இவர் ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்க லாஸ்ஏஞ்சல்ஸ் பகுதியில் தனது நண்பரின் காரில் பயணம் செய்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே வாலன்சியா என்ற இடத்தில் சென்றபோது அந்த கார் கட்டுப்பாட்டை

தொழில் அதிபர் பைசூல் மீது நடவடிக்கை எடுக்கும்வரை ஓயமாட்டேன்: நடிகை ராதா மீண்டும் ஆவேசம்

Posted: 30 Nov 2013 11:51 PM PST

சுந்தரா டிராவல்ஸ் படத்தில் அறிமுகமான நடிகை ராதா, காத்தவராயன், அடாவடி, மானஸ்தன், கேம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். வடபழனி சாலிகிராமம் லோகைய்யா தெருவில் வசித்து வரும் ராதா, திருவல்லிக்கேணியை சேர்ந்த தொழில் அதிபர் பைசூல் மீது, பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் திருமணம் செய்து

நடன இயக்குனர் ரகுராம் உடலுக்கு ரஜினிகாந்த் அஞ்சலி

Posted: 30 Nov 2013 10:57 PM PST

பிரபல டான்ஸ்மாஸ்டர் ரகுராம். இவர் எம்.ஜி.ஆர்.– சிவாஜி காலத்தில் தொடங்கி ரஜினி– கமல் வரை 1000–க்கும் மேற்பட்ட படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணி புரிந்துள்ளார். சென்னை காம்தர் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று காலை 11.30 மணியளவில் ரகுராம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 64. மரணம் அடைந்த ரகுராமுக்கு கிரிஜா என்ற மனைவியும், சுஜாதா, காயத்ரி ஆகிய மகள்களும் உள்ளனர். இதில் சுஜாதா பரதநாட்டிய கலைஞர் ஆவார். காயத்ரி பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ரகுராமின் மனைவி கிரிஜா

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online