Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


2013-ம் ஆண்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள்...!!

Posted:

2013ம் ஆண்டில் அறிமுகமான ஹீரோ, ஹீரோயின்களை கணக்கெடுத்தால் எண்ணிக்கை செஞ்சுரியை தாண்டும். ஒரே படத்தோடு மூட்டை கட்டியவர்களே அதிகம். ஒரு சிலர் மட்டுமே தங்கள் திறமையாலும், அழகாலும் சினிமாவை தக்க வைத்துக் கொண்டார்கள். அவர்களில் முக்கியமானவர்களை பற்றி பார்க்கலாம்.

நஸ்ரியா நசிம்

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த அழகு தேவதை. ...

2014-ம் ஆண்டு - நட்சத்திரங்களின் புத்தாண்டு சபதம்...!!

Posted:

ஜனவரி முதல் தேதி புத்தாண்டு. இந்த புத்தாண்டு ஆங்கில புத்தாண்டு என்றாலும், அது உலகம் முழுக்க அனைவராலும் பொதுவாக கொண்டாடப்படும் ஒரு புத்தாண்டு. ஒவ்வொரு ஆண்டும் புதுவருடம் பிறக்கும்போது பெரும்பாலானவர்கள் சபதமேற்று அந்த லட்சியத்தை நோக்கி அந்த வருடம் முழுவதும் பயணிப்பார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் சிலர் ...

கோல்மால் செய்த மேனேஜரை நீக்கிய ஸ்ருதிஹாசன்!

Posted:

ஏழாம் அறிவு, 3 படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன், இப்போது பாலிவுட்டில் பரபரப்பு நடிகையாகி விட்டார். எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும், துணிச்சலாக நடித்து வரும் அவரை மீண்டும் கோலிவுட்டுக்கு அழைத்து வரும் முயற்சிகளும் திரைக்குப்பின்னால் நடந்து கொண்டிருக்கிறது. ஸ்ருதக்கும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மறுபடியும் வரும் ஆசையும் ...

காஜல்அகர்வாலுக்கு சிபாரிசு செய்த ராம்சரண்தேஜா!

Posted:

தமிழில் இன்னமும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் ஆடிக்கொண்டிருக்கும் காஜல்அகர்வாலுக்கு, மகதீரா படத்திற்கு பிறகு தெலுங்கு மார்க்கெட் ஸ்டெடியாகி விட்டது. நான்ஈ படத்தை இயக்கிய ராஜமவுலி இயக்கிய அப்படம் பிரமாண்ட பட்ஜெட் என்பதோடு, சூப்பர் ஹிட்டாகவும் ஓடி வசூல் சாதனை புரிந்தது. அதனால், அந்த படத்திலிருந்து ...

ஆர்யாவை தேடிச்சென்று அன்பை அள்ளிக்கொடுக்கும் டாப்சி!

Posted:

ராஜாராணி ஹிட்டைத் தொடர்ந்து நயன்தாராவுடன் தொடர்ந்து நடிக்க ஆசைப்பட்டார் ஆர்யா. ஆனால், அவர்களை இணைத்து கிசுகிசுக்கள் பரவியதால், உஷாரான நயன்தாரா, இதுவே தனது மார்க்கெட்டை கவிழ்த்து விடும் என்று ஆர்யா சிபாரிசு செய்த சில படங்களுக்கு தன்னிடம் கால்சீட் இல்லை என்று சொல்லி நழுவிக்கொண்டார்.

அதோடு, அனாமிகாவை முடித்தவர், சிம்பு, ...

இரவு 10 மணிக்கு மேல் செல்போனை சுவிட் ஆப் செய்து விடுகிறாராம் அஞ்சலி!

Posted:

தமிழில் மார்க்கெட் வேகமாக உயர்ந்து கொண்டிருந்த நேரம்பார்த்து, சித்தியுடன் சண்டை போட்டுக்கொண்டு ஆந்திராவுக்கு பறந்தார் அஞ்சலி. அந்த சமயம் கைவசம் இரண்டொரு படங்கள் இருந்ததால், அதை வைத்து புதிய படங்களை அதிரடியாக கைப்பற்றி ஆந்திராவில் கொடி நாட்டி விடலாம் என்பதும் அப்போதைக்கு அஞ்சலியின் கணக்காக இருந்தது.

ஆனால், அவர் போட்ட ...

ஆஸ்திரேலியா கடலில் மகளின் பிறந்த நாளைக் கொண்டாடும் அஜீத் பேமிலி!

Posted:

ஒவ்வொரு படத்தையும் முடித்ததும் எப்படி திருப்பதிக்குசென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக்கொண்டிருக்கிறாரோ அதேபோல் தனது மனைவி , மகளுடன் வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் சென்று வருவதையும் கடைபிடித்து வருகிறார் அஜீத். அந்த வகையில், தற்போது வீரம் படத்தை முடித்து விட்ட அவர், திருப்பதிக்கு சென்று முடி காணிக்கை செலுத்தி தரிசனம் ...

பாகுபாலி படத்தில் தமன்னாவுக்கு துக்கடா கேரக்டர்தானாம்!

Posted:

ஒரு காலத்தில் அனுஷ்காவுக்கு நேரடி போட்டி நடிகையாக இருந்தவர்தான் தமன்னா. அவர் பேசும் படங்களை இவரும், இவர் பேசும் படங்களை அவரும் கைப்பற்றுவது திரைக்குப்பின்னால் சீரியசாக நடந்து கொண்டிருந்தது. ஆனால், பின்னர் தெலுங்கில் அவர்களது மார்க்கெட் சரிந்தபோது வெவ்வேறு மொழிகளில் பயணிக்கத் தொடங்கினார்களாம்.

இந்த நிலையில், ...

சிறுவன் சிறுமியின் காதல் காட்சி: கொந்தளித்த பத்திரிகையாளர்கள்!

Posted:

விஷ்காம் படித்து விட்டு படம் டைரக்ட் செய்ய வந்திருக்கிறார் ஆஷிக் என்ற இளைஞர். தன்னுடன் படித்த பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் இணைந்து உ என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். அவரது நண்பர் அபிஜித் ராமசாமி மியூசிக் போட்டிருக்கிறார். ஜெயபிரகாஷ் கேமராமேன். வருண், நேகா, மதன் கோபால் நடித்திருக்கிறார்கள். எல்லோருமே ஆஷிக்கின் நண்பர்கள். 25 ...

வேகமாக ரெடியாகிறது வீருடொக்கடே!

Posted:

அஜீத், தமன்னா, விதார்த், பாலா, சந்தானம் நடிக்கும் வீரம் படம், தெலுங்கில் வீருடொக்கடே என்ற பெயரில் டப் செய்யப்படுகிறது. இதன் டப்பிங் பணிகளும் தெலுங்கு பாடல்களை உருவாக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீனு பாபு கூறியிருப்பதாவது. "பழம்பெரும் நிறுவனமான விஜயா புரொடக்ஷனின் நிறுவனர் நாகி ...

பிரியாமணியின் திடீர் புலி பாசம்!

Posted:

பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமான ப்ரியாமணிக்கு அதற்கு பிறகு பெருசா வாய்ப்பு எதுவும் இல்லை. திடீரென்று பருத்தி வீரனில் தேசிய விருது பெற்றதும் பரபரப்பு நடிகையானர். "அய்யயோ நான் அவார்ட் நடிகை இல்லீங்க எனக்கு கவர்ச்சிதான் பிடிக்கும்" என்று உரிச்ச கோழியாய் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். இந்த கவர்ச்சி ஆட்டம் ...

குத்தாட்ட நடிகையானார் மீனாள்!

Posted:

தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் குணசித்திர நடிகையாக அறிமுகமானவர் நடிகை மீனாள். அதன் பிறகு 30க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர நடிகையாகவே நடித்தார். பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் கிராமத்து பாலியல் தொழிலாளியாக படு கவர்ச்சியாக நடித்தார். அம்மாவின் கைபேசி படத்தில் தங்கர் பச்சான் ஜோடியாக நடித்து அவருடன் ஆட்டம் ...

படத்தை வெளியிட முடியாமல் தவிக்கும் ஏழை இயக்குனர்!

Posted:

தமிழ் சினிமாவில் குடிசை ஜெயபாரதி மறக்க முடியாத இயக்குனர். எளிய முயற்சிகள் மூலம் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர். 1979ம் ஆண்டு இவர் இயக்கிய குடிசை படம் சென்னை குப்பத்தில் வாழும் மக்களின் சோகத்தை முதன் முதலாக பதிவு செய்த படம். பல விருதுகளையும் பெற்றது. பொதுமக்களிடம், மாணவர்களிடம் பணம் வசூலித்து படம் எடுப்பது இவரது ...

சாரதா ராமநாதன் இயக்கியுள்ள நாட்டிய சினிமா!

Posted:

சிருங்காரம் படத்தை டைரக்ட் செய்தவர் சாரதா ராமநாதன். சிருங்காரம் 3 தேசிய விருதுகளை பெற்றது. தற்போது சாரதா புதிய திருப்பங்கள் என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார். நந்தா, ஆண்ட்ரியா நடித்துள்ள இந்தப் படம் குழந்தைகளை கடத்தும் அண்டர்வேர்ல்டு தாதாக்கள் பற்றியது.

இதற்கிடையில் சாரதா ராமநாதன் நாட்டியானுபவா என்ற பெயரில் இந்திய ...

உயிருக்கு போராடுகிறார் பழம்பெரும் நடிகை சுசித்ரா சென்

Posted:

பிரபல பெங்காலி நடிகை சுசித்ரா சென். 1952ல் சேஷ் கோதே என்ற பெங்காலி படத்தில் அறிமுகமான சுசித்ரா சென் நூற்றுக்கும் மேற்பட்ட பெங்காலி படங்களில் நடித்தார். 1955ம் ஆண்டு திலீப்குமாருடன் நடித்த தேவதாஸ் படம் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்றார். அதைத் தொடர்ந்து முசாகர், பாம்பே கா பாபு போன்ற இந்திப் படங்களில் நடித்தாலும் தன் சொந்த மொழியில் ...

புத்தாண்டில் 2 புத்தம் புதிய படங்கள் ஒளிபரப்பு!

Posted:

2014ம் ஆண்டு பிறப்பதையொட்டி தமிழ் தொலைக்காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகள் பலவற்றை ஒளிபரப்புகிறது. பெரும்பாலான நிகழ்ச்சிகள் சினிமாவை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டவை. பொங்கலுக்கு வெளிவரும் படங்களின் முன்னோட்டங்கள், நடிகர் நடிகைகளின் பேட்டியே பிரதானமாக இடம் பெறுகிறது.

இந்த ஆண்டு புத்தாண்டு புதுப்பட போட்டியில் விஜய் ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online