Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Dinamalar Cinema News

Dinamalar Cinema News


ஆர்யாவுடன் நடிக்க மறுத்த ஸ்ருதிஹாசன் விஷாலுடன் நடிக்கிறாராம்!

Posted:

ஏழாம் அறிவு, 3 படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன், அதன்பிறகு தெலுங்கு, இந்தி என்று இடம்பெயர்ந்து விட்டார். இப்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் முக்கியமான நடிகைகளுள் ஸ்ருதியும் குறிப்பிடத்தக்கவர். இந்த நிலையில், அவரை மீண்டும் கோலிவுட்டுக்கு கொண்டு வர எடுக்கப்படுகிற முயற்சிகள் அனைத்துமே தோல்வியில் முடிகின்றன.

இருப்பினும், ...

சமீராரெட்டியின் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் ரகசியமாக நடந்தது!

Posted:

தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை ஆகிய படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. மும்பை வரவான இவரை, கெளதம்மேனன் இறக்குமதி செய்ததால் ஆரம்பத்திலிருந்தே மேல்தட்டு நடிகையாக வலம் வந்தார். ஆனால், வாரணம் ஆயிரம் படத்தை தவிர அவர் நடித்த எந்த படமும் ஓடவில்லை. அதோடு, தமிழில் மார்க்கெட் இல்லாதபோதும் சம்பள விசயத்தில் இறங்காமல் ...

புத்தாண்டு கொண்டாட இத்தாலி பறக்கும் அமலா

Posted:

ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார், அமலா பால். மலையாளத்தில் இவர் நடித்த,இந்தியன் பிரணயகதா தமிழில் நடித்த,நிமிர்ந்து நில் ஆகிய படங்கள், விரைவில், வெளியாகவுள்ளது தான், இதற்கு காரணம். இந்த இரண்டு படங்கள் வெளியானதும், என் மார்க்கெட் சூடு பிடித்து விடும். அப்புறம் என்னை, மார்க்கெட் இல்லாத நடிகை என, யாரும் கூற முடியாது என்கிறார். இந்த ...

ஐஸ்வர்யாவை புகழும்அபிஷேக் பச்சன்

Posted:

அபிஷேக் பச்சனை திருமணம் செய்த பின்னும், படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா, குழந்தை பிறந்த பின், நடிப்புக்கு தற்காலிகமாக குட்பை சொல்லியிருந்தார். இப்போது, மகள் ஆரத்யாவை பராமரிப்பதிலேயே நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில், ஐஸ்வர்யாவின் தாய்ப்பாசம் குறித்து அபிஷேக் பச்சன் கூறுகையில் ஒரு பொறுப்புள்ள குடும்பத்தலைவியாக, ...

நான் யார் என்பது இப்போது புரிந்ததா? நஸ்ரியா

Posted:

நஸ்ரியா நசீம், ஒரு முடிவுடன் தான், கேரளாவிலிருந்து, கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார் போலிருக்கிறது. தொப்புள் சர்ச்சைக்கு பின், அவரைப் பற்றிய, பரபரப்பான செய்திகள் வந்து, ஓய்ந்து போன நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது அவர்,நிஜத்தில் நான் எப்படி இருக்கிறேனோ, அதேபோல் தான், திரைப்படங்களிலும் ...

இப்போது திருமணம் இல்லை பதுங்கும் த்ரிஷா!

Posted:

நடிகை த்ரிஷா. 11 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படங்களில் நடித்துவருகிறார். திருமணம் செய்து கொண்டு செட்டிலாகப்போகிறார் என்ற செய்திகள், கடந்த ஆண்டிலிருந்தே வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், த்ரிஷா தரப்பில் இருந்து, இது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.இந்நிலையில், தமிழ், தெலுங்கில் படங்கள் குறைந்த நேரத்தில், கன்னடத்துக்குள் அடி ...

இரண்டு ஹீரோயின்களா? கொலைவெறியில் ஆண்ட்ரியா

Posted:

ஆயிரத்தில் ஒருவன், பச்சக்கிளி முத்துச்சரம் படங்களில் நடித்தபோது, கதாநாயகி வேடங்களை இலக்காக கொள்ளாமல், கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வந்த ஆண்ட்ரியாவுக்கு கமலின், விஸ்வரூபம் படத்தில் நடித்த பின், நடிப்பின் மீதான மோகம் அதிகரித்து விட்டது.அதனால், இந்த படத்தில் இரண்டு ஹீரோயின் என,யாராவது கதை கூறினால், கொலை வெறியுடன், அவர்களை ...

தமன்னாவை மிரள வைக்கும் லட்சுமி மேனன்

Posted:

முதல் ரவுண்டில் மாடர்ன் வேடங்களாக நடித்து வந்த தமன்னா, இரண்டாவது ரவுண்டில், கிராமத்து கதைகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், முன்னணி ஹீரோக்கள் நடிக்கும்கிராமத்து படங்களின் வாய்ப்புகளை கைப்பற்ற, திட்டம் தீட்டினார். ஆனால், அப்படி அவர், எந்த கம்பெனி படத்துக்கு கல்லெறிந்தாலும்அங்கிருப்பவர்கள், ஏற்கனவே லட்சுமி மேனனை ...

நா.முத்துகுமார் தொடர்ந்து நம்பர்-1: 2013ல் 100 பாடல்களுக்கு மேல் எழுதி சாதனை

Posted:

பாடலாசிரியர் நா.முத்துகுமார் கடந்த சில வருடங்களாக அதிக பாடல்கள் எழுதி முதலிடத்தில் இருக்கிறார். இந்த ஆண்டும் 34 படங்களில் 106 பாடல்களை எழுதி முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இதில் குறிப்பாக தலைவா, சமர், 555, யாருடா மகேஷ், நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ, மூன்று பேர் மூன்று காதல், நிர்ணயம், ஆல்இன்ஆல் அழகுராஜா ஆகிய படங்களில் அனைத்து ...

தூம்-3 பாகிஸ்தானிலும் வசூல் சாதனை!

Posted:

அமீர்கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைப் நடித்த தூம் 3 சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியானது. பாகிஸ்தான் பழமைவாதிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே 56 தியேட்டர்களில் ரிலீசானது. அன்றைய தினமே அதாவது ஒரே நாளிலேயே 2 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இது பாகிஸ்தான் சினிமா வரலாற்றில் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அந்த நாட்டில் தயாரான ...

கமலை இயக்க விரும்பும் வெங்கட்பிரபு!

Posted:

விஸ்வரூபம் படத்திற்கு பிறகு தன்னைத்தானே இயக்கிக்கொள்வதில் அதிக ஆர்வமாக உள்ளார் கமல். இந்த நிலையிலும், கமலை ஒரு படத்திலேனும் இயக்கி விட வேண்டும் என்று அவருக்கான கதை ஒன்றையும் ரெடி பண்ணி வைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அவரைத் தொடர்ந்து இப்போது வெங்கட்பிரபுவும் கமலை இயக்கும ஆர்வத்தில் தான் இருப்பதை ...

கமலுடன் காஜல்அகர்வால் ஜோடி சேரும் ஒப்பந்தம் உறுதியானது!

Posted:

முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேருவது என்ற கொள்கையை சீரியசாக கடைபிடித்து வருபவர் காஜல் அகர்வால். அந்த வகையில், கார்த்தியுடன் நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தையடுத்து விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்துள்ளார். அதற்கடுத்து தமிழில் உடனடியாக நடிப்பதற்கு படங்கள் புக்காகவில்லை என்பதால், தெலுங்கு படங்களுக்கு கால்சீட் ...

தயாரிப்பாளரை தந்தை மாதிரியும், இயக்குநரை தாய் மாதிரியும் மதிக்க வேண்டும் - கேயார் பேச்சு

Posted:

புதுமுகங்கள் நடிக்க 'ஏழுமலையான் மூவிஸ்",'நாயகன் சினி ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில் கடலூர். எஸ். நாயகம் தயாரிப்பில், 'ஆசாமி' ஆண்டாள் ராமேஷ் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் "இன்னாருக்கு இன்னாரென்று" இப்படத்தின் ஆடியோ சி.டி. வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் வெகு விமா¢சையாக நடந்தேறியது.

இவ்விழாவில் கின்டலாகவும், ...

அஜீத் படத்தின் சேனல் ரைட்ஸ் 20 கோடிக்கு வியாபாரமானது!

Posted:

தற்போது கோடம்பாக்கத்தில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கான பூஜை போடுவதற்கு முன்பே சேனல் ரைட்ஸ் விலைபோய் விடுகிறது. அதனால் சேனல்களிடம் ஒரு தொகையை வாங்கிக்கொண்டே படப்பிடிப்பை ஆரம்பித்து விடுகிறார்கள். குறிப்பாக, சிம்பு நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படம்கூட ஒரு சேனலுக்கு விற்பனையாகி விட்டது. அதனால், அவர்கள் ...

அம்மாவின் பாதுகாப்பு வளையத்துக்குள் ஸ்ருதிஹாசன்!

Posted:

கடந்த மாதம் வரை எந்த பிரச்னையும இல்லாமல்தான் இருந்தார் ஸ்ருதிஹாசன். ஆனால், அவர் யார் துணையும் இல்லாமல் தனித்து தங்கியிருந்த வீட்டிற்குள் மர்ம மனிதன் புகுந்து தாக்கியதை அடுத்து, இப்போது அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு ஏரியாவில் குடியேற மும்பையிலுள்ள பாந்த்ரா பகுதியில் பாதுகாப்பான இடத்தில் வீடு பார்த்து வருகிறார் ...

லாஜிக் இல்லாமல் படம் எடுக்குறேன்: அதுவேற இதுவேற இயக்குனர் சொல்கிறார்

Posted:

எம்.திலகராஜன் என்பவர் டைரக்ட் செய்து வரும் படம் அதுவேற இதுவேற. வர்ஷன், சானியாதாரா நடிக்கிறார்கள். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. இந்த படத்தில் லாஜிக்கெல்லாம் கிடையாது என்று இயக்குனரே பளிச்சென்ற சொல்கிறார். அவர் மேலும் கூறியதாவது:

இந்த படத்தில் லாஜிக் என்ற ஒன்றை எங்கு தேடினாலும் கிடைக்காது. ...

2013: நட்சத்திர திருமணங்கள்...!!

Posted:

2013ம் ஆண்டு கலர்புல் திருமணங்களுடன் கடந்து சென்றது. இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் 8 வருடங்களாக தான் காதலித்து வந்த பாடகி சைந்தவியை மணந்தார். நடிகர் நந்தா தன் உறவுக்கார பெண் திவ்யாவை கைபிடித்தார். இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் தாய்மாமன் மகளை மணம் முடித்தார். நடிகர் பரத் 2 வருடமாக காதலித்து வந்த துபாய் டாக்டர் ஜெஸ்லியை திருமணம் ...

விஜய்-அஜீத்துடன் மோத வருகிறார் ஜாக்கிசான்!

Posted:

உலக ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்திருப்பவர் ஜாக்கிசான். எத்தனை ஆக்சன் ஹீரோக்கள் மொழிவாரியாக உதயமாகிக்கொண்டிருந்தாலும், ஜாக்கிசானை வீழ்த்த இன்னும் ஒரு ஆக்சன் ஹீரோ வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு குழந்தைகள் முதல் பெருசுகள் வரை அனைவரையும் கொள்ளை கொண்டு வைத்திருக்கிறார் ஜாக்கி.

இந்நிலையில், இதுவரை ...

டாப்சிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கொடுத்த இந்திப்பட இயக்குனர்!

Posted:

வட இந்திய நடிகையான டாப்சியை தமிழில் நடித்த ஆடுகளம் படம்தான் பிரபலப்படுத்தியது. அதனால் சாஷ்மே பதூர் என்ற படத்திற்கு பிறகு புதிதாக இந்தியில் படங்கள் கிடைக்காததால் தென்னிந்திய படங்களிலேயே நடித்து வந்தார். இந்நிலையில், ஆரம்பம் படத்திற்கு பிறகு முனி-3 கங்கா படத்தில் நடித்து வரும் டாப்சியை சமீபத்தில் ஒரு இந்திப்பட இயக்குனர், தான் ...

அசினைத் தொடர்ந்து ஹன்சிகாவும் அடிக்கடி அமெரிக்காவுக்கு விசிட் அடிக்கிறார்!

Posted:

இந்தி சினிமாவில் கோலோச்சியிருக்கும் அசினின் மார்க்கெட் திடீரென்று சூடு குறைந்து கிடக்கிறது. நடித்த படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால் புதிதாக மெகா படங்கள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால், மாதத்தில் 10 நாள் படப்பிடிப்பு என்றால் 20 நாட்கள் ஓய்வாகவே இருக்கிறாராம் அசின்.

இதன்காரணமாக, அடிக்கடி அமெரிக்காவுக்கு ...

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online