Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Webdunia Tamil Cinema News

Webdunia Tamil Cinema News


ராஜஸ்தான் செல்லும் பிரபுசாலமன்

Posted: 29 Nov 2013 06:51 AM PST

வித்தியாசமான பின்னணியில் காதல் கதையை சொல்வது. இதுதான் பிரபுசாலமனின் ஃபார்முலாவாக இருக்கிறது. மலையும் மலை சார்ந்த காதலுமான மைனாவும், யானையின் பின்னணியில் சொல்லப்பட்ட கும்கி காதலும் அப்படிப்பட்டவையே.

சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்கும் ஷங்கர்?

Posted: 29 Nov 2013 05:51 AM PST

சில வருடங்களாக தனது 150வது படம் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார் சிரஞ்சீவி. சினிமாவில் அவரது சரித்திரம் முடிந்து அவரது மகன் வயது ஹீரோக்களின் புதிய சரித்திரம் நடந்து கொண்டிருக்கிறது.

ராமராஜனின் கும்பாபிஷேகம்

Posted: 29 Nov 2013 05:24 AM PST

விபத்தில் சிக்கி உயிர் பிழை‌த்த ராமராஜன் கட்சி மீட்டிங்குகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். இப்போது விபத்தின் மிச்ச சொச்சங்களிலிருந்து முழுமையாக மீண்டு மீண்டும் படத்தில் நடிக்க உள்ளார்.

ஜப்பானில் ப்ரியா ஆனந்த், கௌதம் கார்த்திக்

Posted: 29 Nov 2013 02:22 AM PST

விஜய் ஜப்பானுக்கு சென்ற பிறகு பலரும் ஜப்பானை தங்கள் படத்தின் டூயட் கேந்திரமாக்கியிருக்கிறார்கள். இன்றைய தேதி ப்ரியா ஆனந்தும், கௌதம் கார்த்திக்கும் இருப்பது ஜப்பானில்.

பிரச்சனை - ஜன்னல் ஓரம், விடியும்முன் படங்கள் வெளியாகவில்லை

Posted: 29 Nov 2013 02:06 AM PST

இன்று ஜன்னல் ஓரம், நவீன சரஸ்வதி, விடியும்முன் ஆகிய படங்கள் வெளியாவதாக இருந்தன. திரையரங்குகளையும் ஒப்பந்தம் செய்திருந்தனர். இந்நிலையில் ஜன்னல் ஓரம், விடியும்முன் படங்களின் ப்ரிண்ட் வராததால் திரையரங்குகளில் இவ்விரு படங்களும் வெளியாகவில்லை.

ஆர்யா - சந்தானம் - ராஜேஷ்

Posted: 29 Nov 2013 01:57 AM PST

மூன்று ஹாட்ரிக் வெற்றிகள். ஒரேயொரு ப்ளாப். ராஜேஷ் எம். அவ்வளவுதான் என்று ஒட்டு மொத்தமாக எப்படி தீர்மானித்தார்களோ தெரியவில்லை. எல்லோர் கடைவாயிலும் ராஜேஷுக்கான சிரிப்பு ஒட்டிக் கொண்டிருக்கிறது.

இணைந்து நடிக்கும் ஆண்ட்ரியா, ஸ்ரேயா

Posted: 29 Nov 2013 01:44 AM PST

ரிட்டையர்ட் நடிகைகளுக்கு மலையாள சினிமாதான் ஆக்சிஜன் சிலிண்டர். எந்த மொழியில் படம் இல்லையென்றாலும் கூப்பிட்டு வாய்ப்பு தருவார்கள் மலையாளத்தில். அப்படி அவர்கள் அழைத்திருக்கும் நடிகை ஸ்ரேயா.

அங்கேயுமா அபத்த பேச்சு?

Posted: 28 Nov 2013 11:26 PM PST

இந்தியன் பளோரமா பிரிவில் எந்தப் படம் திரையிட்டாலும் அப்படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தந்து சில வார்த்தைகள் பேச வைப்பது மரபு. இந்த வருட கோவா திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் ராமின் தங்கமீன்கள் மட்டுமே தேர்வானது.

இன்று மூன்று படங்கள்

Posted: 28 Nov 2013 11:03 PM PST

ஜன்னல் ஓரம், நவீன சரஸ்வதி சபதம், விடியும்முன் ஆகிய படங்கள் இன்று வெளியாகியுள்ளன.

குறைக்கப்பட்ட கோச்சடையான் நீளம்

Posted: 28 Nov 2013 10:54 PM PST

கோச்சடையான் படம் பொங்கல் வெளியீட்டிலிருந்து பின்வாங்கியிருக்கிறது. இந்த சோக செய்தியுடன் இன்னொரு வருத்த செய்தி ரசிகர்களுக்கு. படத்தின் நீளமும் ஏறக்குறைய இருபது நிமிடங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது.

தந்தைக்கு கம்யூனிஸம், தனயனுக்கு காமெடி

Posted: 28 Nov 2013 10:40 PM PST

நாலு பேரும் ரொம்ப நல்லவங்க படக்குழு அந்தமான் சிறைச்சாலையில் சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். பெயரிலுள்ள நாலு பேரில் படாவதி ஸ்டார் சீனிவாசனும் ஒருவர்.

ஆயிஷா குறும்படம் திரையிடல்

Posted: 28 Nov 2013 10:13 PM PST

எழுத்தாளர் இரா.நடராஜனின் சிறுகதையை தழுவி பா.சிவக்குமார் இயக்கிய குறும்படம், ஆயிஷா. 2001 ல் எடுக்கப்பட்ட இக்குறும்படம் அந்தக் காலகட்டத்தில் முக்கியமானதாகப் பேசப்பட்டது. தமிழ் குறும்படங்களில் ஆயிஷாவுக்கு முக்கியமான இடம் உண்டு.

மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கத்தில் அரவிந்த் சாமி

Posted: 28 Nov 2013 09:44 PM PST

கடல் படத்துக்குப் பிறகு நிறைய கதைகள் கேட்ட அரவிந்த் சாமி கடைசியில் மகேஷ் மஞ்ச்ரேக‌ரின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஹிந்தியில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு அரவிந்த் சாமி நடிப்பது குறிப்பிடத்தக்கது.

விமல் ஜோடி ப்‌ரியா ஆனந்த் - கண்ணன் இயக்குகிறார்

Posted: 28 Nov 2013 09:37 PM PST

சேட்டை படத்துக்குப் பிறகு சொந்த ஸ்கி‌ரிப்டில் படம் இயக்குகிறார் கண்ணன். பிப்ரவ‌ரியில் தொடங்கயிருக்கும் இந்தப் படத்தில் விமல் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ப்‌ரியா ஆனந்த் நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

துரை தயாநிதியின் படத்துக்கு வ‌ரிச்சலுகை இல்லை

Posted: 28 Nov 2013 09:32 PM PST

துரை தயாநிதி தயா‌ரித்திருக்கும் படம் தகராறு. கருணாநிதியின் இன்னொரு பேரன் அருள்நிதிதான் ஹீரோ. ஆக்ஷன், காமெடியுடன் தயாராகியிருக்கும் தகராறை சென்சாருக்கு திரையிட்டு காண்பித்தனர். படத்தைப் பார்த்தவர்கள் யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். யு சான்றிதழ் படங்களுக்கே வரிச்சலுகை என்பதால் அந்தச் சலுகையை தகராறு இழக்கிறது.

பேண்டஸியில் விட்டதை காமெடியில் வசூல் செய்யும் பிவிபி

Posted: 28 Nov 2013 09:30 PM PST

பிவிபி சினிமாஸின் இரண்டாம் உலகம் மொத்தமாக மண்ணை கவ்வியிருக்கிறது. பட்ஜெட் சுமார் 68 கோடியாம்.இந்த நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக செல்வாராகவன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தை தயா‌ரிப்பதாக எழுந்த வதந்தியை பிவிபி சினிமா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online