Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் இன்று காலமானார்

Posted: 30 Nov 2013 05:14 AM PST

பிரபல நடன இயகுனர் ஆர்.ரகுராம் (64) இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். சென்னை மாகலிங்கபுரத்தில் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாக நோய்வாய்பட்டிருந்தார். இவர் எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி காந்த் மற்றும் கமல்ஹாசனின் பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட சுமார் 1000 பாடல்களுக்கு அவர் நடன

பாங்காக் விருந்து நிகழ்ச்சியில் சமந்தா-சித்தார்த்

Posted: 30 Nov 2013 02:53 AM PST

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை சமந்தா இடையே உள்ள நெருக்கம் பரவலாகத் தெரிந்ததுதான் என்றபோதிலும் அவர்கள் இருவரும் அதை வெளிப்படையாகக் கூறியதில்லை.

நட்சத்திர கிரிக்கெட் அணி தூதுவர்களா? நயன்தாரா, திரிஷா விளக்கம்

Posted: 30 Nov 2013 01:27 AM PST

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி நடிகர்கள் பங்கேற்கும் 'சிசிஎல்' நட்சத்திர கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடக்கிறது. இதில் தமிழ் நடிகர்களின் சென்னை ரைனேஸ் அணிக்கு நடிகைகள் நயன்தாரா, திரிஷா ஆகியோர் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. திரிஷா ஏற்கனவே இந்த அணியில் தூதுவராக இருந்துள்ளார். நயன்தாராவை தூதுவராக நியமித்து பிறகு நீக்கி விட்டனர். மீண்டும் தூதுவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளீர்களா என்று இருவரிடமும் கேட்டபோது மறுத்தனர்.

அஜீத் ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வு: 10–ந்தேதி புறப்படுகிறார்

Posted: 30 Nov 2013 12:15 AM PST

அஜீத் ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வு எடுக்கிறார். இதற்காக அடுத்த மாதம் (டிசம்பர்) 10–ந்தேதி புறப்படுகிறார். கவுதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 10–ந்தேதி துவங்குகிறது. ஆரம்பம் படத்தில் ஒரு சண்டை காட்சியில் அஜீத் நடித்தபோது விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டது. மும்பையில் படமாக்கப்பட்ட அந்த சண்டை காட்சியில் அஜீத்துக்கு பதில் டூப் நடிகரை நடிக்க வைக்க இயக்குனர் விஷ்ணுவர்த்தன் முடிவு செய்தார். ஆனால் அஜீத் 'டூப்' வேண்டாம் நானே நடிக்கிறேன் என்று பிடிவாதமாக இந்த சண்டை காட்சியில் நடித்தார்.

விநியோகஸ்தர்கள் வாங்க மறுப்பு: ரூ.200 கோடியில் தயாரான 300 சிறு படங்கள் முடக்கம்

Posted: 30 Nov 2013 12:09 AM PST

தியேட்டர்களில் திரையிட மறுப்பதால் நிறைய சிறு பட்ஜெட் படங்கள் முடங்கி கிடக்கின்றன. சினிமா டிஜிட்டலுக்கு மாறிய பிறகு ரூ.60 லட்சம் முதல் ரூ.1½ கோடிவரை சிறு பட்ஜெட் படங்கள் தயாராயின. கோவை, சேலம், மதுரை போன்ற நகரங்களிலும் ஸ்டில் கேமராவை வைத்து படங்கள் எடுத்து அங்குள்ள சாதாரண லேப்களிலேயே டப்பிங், எடிட்டிங் பணிகளை செய்தனர். படங்களை முடித்துவிட்டு ரிலீசுக்கு வந்தபோதுதான் பயங்கரம் அவர்களுக்கு புரிந்தது. சிறு படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வரவில்லை. தியேட்டர்களிலும் இப்படங்களை திரையிட மறுத்தனர்.

மலையாள படத்தில் மம்முட்டியுடன் விஜய் நடனம்

Posted: 30 Nov 2013 12:02 AM PST

மம்முட்டியுடன் மலையாள படமொன்றில் விஜய் நடனமாடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவிலும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். விஜய் படங்கள் கேரளாவில் வெற்றிகரமாக ஓடுகின்றன. மலையாள நடிகர்களை விட அதிகமாக வசூலும் ஈட்டுகின்றன. இதனால் மம்முட்டி தான் நடித்து வரும் தகேங்ஸ்டர் படத்தில் பாடல் காட்சியொன்றில் விஜய்யை ஆட வைக்க விரும்பினார். இதுகுறித்து விஜய்யிடம் பேசப்பட்டதாகவும் அவரும் சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

விஜய், அஜீத்துடன் மோதும் வடிவேலு

Posted: 29 Nov 2013 11:51 PM PST

விஜய்யின் 'ஜில்லா', அஜீத்தின் 'வீரம்' படங்கள் பொங்கலுக்கு ரிலீசாகின்றன. இதோடு வடிவேலுவின் 'ஜெகஜால புஜபல தெனாலிராமன்' படமும் மோதுகிறது. இந்த படத்தில் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். நாயகியாக மீனாட்சி தீட்சித் நடித்துள்ளார். யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார். முழு நீள காமெடி படமாக தயாராகியுள்ளது. ஏற்கனவே வடிவேலு நடித்து ஹிட்டான இம்சை அரசன் 23–ம் புலிகேசிபட சாயலில் சரித்திர கால படமாக இதை எடுத்துள்ளதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விஜய் மற்றும் அஜீத் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.

ஆபாச டூப் நடிகை சர்ச்சை: டைரக்டர் சற்குணம் மீது நஸ்ரியா மீண்டும் பாய்ச்சல்

Posted: 29 Nov 2013 11:45 PM PST

நய்யாண்டி படத்தில் தனக்கு பதில் டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சிகளை படமாக்கியதாக அப்படத்தின் இயக்குனர் சற்குணம் மீது நஸ்ரியா குற்றம்சாட்டினார். போலீஸ் கமிஷனரிடமும் புகார் அளித்தார். இதனால் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கிவிட்டு படம் ரிலீஸ் செய்யப்பட்டது. டைரக்டர் சற்குணம் நம்பிக்கை மோசடி செய்து விட்டதாக நஸ்ரியா தற்போது மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online