Daytamil » Home | Facebook | Google+ | Twitter | Advertise with us | Contact us -


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் »


Maalaimalar Tamil Cinema News

Maalaimalar Tamil Cinema News


நடிகை திவ்யா ஸ்பந்தனாவிற்கு ஜனாதிபதி பிறந்தநாள் வாழ்த்து

Posted: 29 Nov 2013 06:50 AM PST

ரம்யா என்ற பெயரில் திரையுலகில் அறிமுகமான கன்னட நடிகை திவ்யா ஸ்பந்தனா, தமிழில் 'குத்து', 'பொல்லாதவன்' மற்றும் 'வாரணம் ஆயிரம்' போன்ற படங்களில் நடித்துள்ளார். கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பாராளுமன்றத்

விஜய்யை திக்குமுக்காடச் செய்த மோகன்லாலின் அன்பு பரிசு

Posted: 29 Nov 2013 04:22 AM PST

'தலைவா' படத்திற்கு விஜய் நடிக்கும் படம் 'ஜில்லா'. விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை புதுமுக இயக்குனர் நேசன் இயக்குகிறார். பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் நடித்தபோது நடிகர் விஜய்யும், மோகன்லாலும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழகினர். அப்போது நடிகர் விஜய், மோகன்லாலை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து அவருக்கு விருந்து கொடுத்தார். இதற்கு பிரதிபலனாக நடிகர் மோகன்லால் விஜய்

தயாரிப்பாளர்களை நடிகர்கள் நஷ்டப்படுத்தக்கூடாது: கேயார்

Posted: 29 Nov 2013 04:11 AM PST

வடபழனி பிரசாத் லேப் ஸ்டூடியோவில் நடந்த 'மேற்கு முகப்பேர் ஸ்ரீ கனகதுர்கா' படத்தின் பாடல் வெளியிட்டு விழா நடந்தது. இதில் பங்கேற்று பேசிய கேயார், நடிகர் விஜய் சேதுபதி எந்த தயாரிப்பாளரையும் நஷ்டப்படுத்த மாட்டேன். அவர்கள் மன வருத்தம் கொள்ளும்படியான விஷயங்களிலும் ஈடுபட மாட்டேன் என்று பேட்டி அளித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் தயாரிப்பாளர் நஷ்டம் அடையக்கூடாது என்று ஒத்துழைப்பு கொடுத்தார்கள். விஜய் சேதுபதி அதுமாதிரி செயல்படுகிறார். மற்ற நடிகர்களும் இது மாதிரி செயல்பட்டு தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

சிம்பு, நயன்தாரா பற்றி கேள்வி கேட்டு தொல்லை: டுவிட்டரில் இருந்து ஹன்சிகா விலகல்

Posted: 29 Nov 2013 03:49 AM PST

நடிகர், நடிகைகள் பலர் டுவிட்டரில் இருக்கிறார்கள். தனது புது படங்கள், சுற்றுப் பயணங்கள், வெளிநாட்டு படப்பிடிப்புகள் உள்ளிட்ட விவரங்களை இதில் போட்டு வைக்கின்றனர். இதன் மூலம் ரசிகர்களிடம் நேரடி தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். ஹன்சிகாவும் டுவிட்டரில் இருந்தார். சிம்புவுடனான காதலை டுவிட்டர் மூலம்தான் வெளிப்படுத்தினார். அன்றாடம் நடக்கும் படப்பிடிப்பு விவரங்களையும் வெளிப்படுத்தி வந்தார்.

அனாமிகா படத்தில் கர்ப்பிணி வேடம்: நடிகை வித்யாபாலனை நயன்தாரா மிஞ்சுவாரா?

Posted: 29 Nov 2013 03:48 AM PST

கர்ப்பிணி வேடத்தில் நடிக்கும் நயன்தாரா இந்தி நடிகை வித்யாபாலனை மிஞ்சுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியில் வித்யாபாலன் கர்ப்பிணியாக நடித்த 'கஹானி' படம் தமிழ், தெலுங்கில் 'அனாமிகா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தியில் இப்படம் பலத்த வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரி குவித்தது. வித்யாபாலனுக்கு விருதுகளையும் பெற்று தந்தது. அனாமிகாவில் நயன்தாராவின் நடிப்பு எப்படி இருக்கும் என்று தமிழ், தெலுங்கு திரையுலகினர் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர்.

திரிஷாவுக்கு திருமண ஏற்பாடு தீவிரம்: தாய் உமா மாப்பிள்ளை தேடுகிறார்

Posted: 29 Nov 2013 03:42 AM PST

நடிகை திரிஷா 2002–ல் சினிமாவில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு படங்களில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாய் நடித்துக் கொண்டு இருக்கிறார். தற்போது தமிழில் பூலோகம், என்றென்றும் புன்னகை படங்கள் கைவசம் உள்ளன. இதன் படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. வேறு புது படங்களுக்கு ஒப்பந்தம் ஆகவில்லை. இளம் நடிகைகள் வரத்து பெருகியுள்ளதால் மூத்த கதாநாயகிகளின்

சிகரெட் காட்சி இல்லாமல் படம் எடுத்துள்ளேன்: டைரக்டர் சேரன் பேட்டி

Posted: 29 Nov 2013 03:39 AM PST

சர்வானந்த், நித்யாமேனன் ஜோடியாக நடிக்க சேரன் இயக்கியுள்ள புதிய படம் 'ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை'. இதன்படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகிறது. படம் குறித்து டைரக்டர் சேரன் அளித்த பேட்டி வருமாறு:– ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை தமிழ், தெலுங்கில் நேரடி படமாக வருகிறது. அதிக பொருட்செலவில் எடுத்துள்ளேன். காட்சிகளில் ஆடம்பரம் தெரியும். கதையும் பிரமாண்டமாக இருக்கும். இந்த காலத்து இளைஞர்களுக்கு பிடித்த மாதிரி உருவாகியுள்ளது. புகை பிடிக்கும் காட்சிகள் இல்லாத படம். மது வேண்டாம் என்று சொல்லுகிற படம். இதில் குட்கா முகேஷ் விளம்பரத்தை இணைக்க வேண்டாம் என்று தணிக்கை குழுவினரை கேட்டுக்கொள்ள இருக்கிறேன்.

‘பிரியாணி’யில் பிளே பாயாக வரும் கார்த்தி

Posted: 29 Nov 2013 03:24 AM PST

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'பிரியாணி'. இப்படத்தை வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். கார்த்திக்கு ஜோடியாக ஹன்சிகா மொத்வானி நடித்துள்ளார். மேலும், பிரேம்ஜி, ராம்கி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் 100-வது படமாக உருவாகியுள்ள இப்படம் பொங்கலுக்கு முன்னதாக அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இப்படத்தில் கார்த்தி ஸ்டெலிஷ் நாயகனாக, ப்ளேபாய் வாழ்க்கையை பின்பற்றுவராக வருகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, படப்பிடிப்பில் ஒரு நடிகனுக்குண்டான அச்சம் எதுவுமின்றி ஒரு உல்லாச பயண உணர்வோடு நான் மிகவும் ரசித்து நடித்த படம் 'பிரியாணி'.

'விழா' படத்திற்கு யு சான்றிதழ்: தணிக்கை குழுவினர் பாராட்டு

Posted: 29 Nov 2013 12:16 AM PST

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், அசூர் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகிய நிறுவனங்களுடன் ஜெ.வி.மீடியா டிரீம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாக பங்கெடுத்து சிறப்பான படமாக தயாரித்துள்ள படம்தான் 'விழா'. இந்த படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மேலும், கொல்லங்குடி கருப்பாயி, யுகேந்திரன், காதல் தண்டபாணி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி பாரதி பாலகுமாரன் இயக்கி உள்ளார். இப்படத்தின் பெரும்பகுதி திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய இடங்களில் படமாக்கியுள்ளனர். அந்த பகுதிகளில் வாழும் கிராமத்து மக்களையும் இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளனர். இந்த படம் வருகிற

இன்று வெளியாகவிருந்த ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் பகல் காட்சிகள் திரையரங்குகளில் ரத்து: ரசிகர்கள் ஏமாற்றம்

Posted: 29 Nov 2013 12:02 AM PST

விமல், பார்த்திபன் நடிப்பில் கரு.பழனியப்பன் இயக்கும் புதிய படம் 'ஜன்னல் ஓரம்'. இப்படம் முடிவடைந்து ரீலீசுக்கு தயாரான நிலையில் இன்று முதல் திரையரங்குகளில் வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால், திட்டமிட்டபடி படம் இன்று தியேட்டர்களில் வெளியாகவில்லை. தியேட்டர்களில் விசாரித்தபோது, அவர்களுக்கு படத்தின் பிரிண்ட் வரவில்லை என்று கூறுகின்றனர். இதுகுறித்து படக்குழுவினரிடம் விசாரிக்கலாம் என்றால் அவர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. சினிமா வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது, படத்தை

அஜீத்தின் ‘வீரம்’ படப்பிடிப்பு முடிவடைந்தது

Posted: 28 Nov 2013 07:28 PM PST

'ஆரம்பம்' படத்தைத் தொடர்ந்து அஜீத் நடித்து வரும் புதிய படம் 'வீரம்'. இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும், விதார்த், சந்தானம், அப்புக்குட்டி, மயில்சாமி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 'சிறுத்தை' சிவா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட மும்முரமாக வேலைகள் நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடிவடைந்தது குறித்து படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் ஒரே

No comments:

Post a Comment

Tamil cinema News online - Tamil cinema News online